ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த இரு இளம்பெண்கள் போலீயாரின் ஆய்விற்கு ஒத்துழைக்காமல் ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த ஊரடங்கு, மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக புரட்டிப் போட்டுள்ளது. பலர், இந்த வருடத்தை காலண்டரில் இருந்து அழிக்கப்பட வேண்டிய வருடம் என புலம்பி தள்ளி வருகின்றனர். அந்தளவிற்கு மிக மேசமான இன்னல்களில் மக்கள் சிக்கியிருக்கின்றனர்.

ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் இதே மாதிரியான சூழல்தான் நிலவி வருகின்றது. கொரோனா வைரசின் பிடியில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக சில கசப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அரசின் இந்த உத்தரவை நீர்த்துபோக செய்யும் செயலில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

குறிப்பாக, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருபவர்களை போலீஸார் இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகின்றனர். ஆனாலும், ஒரு சிலர் காவல்துறையின் கழுகு பார்வையில் மண்ணை தூவி தப்பித்து வலம் வந்தவாறு இருக்கின்றனர்.

அந்தவகையில், லாக் டவுணை மீறி வெளியே வந்த இரு பெண்கள் போலீஸாரின் ஆய்விற்கு உட்படாமல் ஆட்டம் கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

இச்சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவக்கின்றன. இதுகுறித்த வீடியோவை யுசிஎன் என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வரும் இரு பெண்களை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுக்க நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அவர்கள் போலீஸார் மற்றும் தடுப்புகளை மீறி கடந்துச் செல்ல முயற்சித்தனர்.

ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

அவர்கள் கடக்க முயன்ற அப்பகுதி குவாரண்டைன் (தடை) செய்யப்பட்ட பகுதி என கூறப்படுகின்றது. இதன் காரணத்தினாலயே மற்ற பகுதிகளைக் காட்டிலும் அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையிலே, ஸ்கூட்டரில் முகங்களை மூடியவாறு வந்த இரு பெண்கள், காவல்துறையின் தடுப்பையும் மீறி செல்ல முயற்சித்தனர். ஆனால், அனைத்துப் பக்கங்களிலும் காவல் அதிகாரிகள் சுற்றி வளைக்கவே, வேறு வழியின்றி போலீசிடம் சரணடைந்தனர்.

ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

இளம் பெண்களின் செய்கையால் அதிர்ச்சியுற்ற போலீஸார், அவ்விரு பெண்களையும், அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, காவல் நிலையம் எடுத்துச் சென்றனர்.

அதற்கு முன்பாக, சாலையிலேயே வைத்து தோப்புகரணம் போட சொல்லி நூதன தண்டனையும் அவர்கள் வழங்கினர். இளம் பெண்கள் எதற்காக வெளியே வந்தனர் என்பதுகுறித்த தகவல் வெளியாகவில்லை.

ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

மேலும், அவர்களிடத்தில் வெளியே வருவதற்கான உரிய பாஸ் இருந்ததாகவும் தெரியவில்லை. ஒருவேலை அவர்களிடத்தில் சிறப்பு அனுமதி பாஸ் இருந்தாலும் காவலர்களின் ஆய்விற்கு உட்பட்டு, அதன் பின்னரே மேற்கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால், இப்பெண்கள் இதில் எதையுமே செய்யவில்லை. எனவேதான் மஹாராஷ்டிரா போலீஸார் அப்பெண்கள் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

தற்போதைய சூழலில் வெளியே செல்ல வேண்டும் என்பதால் சிறப்பு அனுமதி பாஸ் பெற்றிருப்பது அவசியமாகியுள்ளது. இல்லையெனில் தற்போது மஹாராஷ்டிரா மாநில பெண்களுக்கு நிலைதான் அனைவருக்கும் ஏற்படும்.

கொரோனாவின் கோர பிடியில் மஹாராஷ்டிரா மாநிலமே கடுமையாக சிக்கியிருக்கின்றது. நாட்டிலேயே அதிக கொரோனா தொற்றுடைய மாநிலமாக அது இருந்து வருகின்றது.

ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

எனவே, அம்மாநிலத்தில் வைரசுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நகரத்தின் பல பகுதிகளில் செக் போஸ்ட் அமைத்து, மக்களின் நடமாட்டத்தைக் கண்கானித்தல், தேவையற்ற நிலையில் வெளியில் வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல் போன்ற பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும், ஒரு சிலர் மட்டும் ஜாலியாக வெளியே சுற்றி திரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதன்பின்னர் போலீஸாரின் கெடுபிடியில் சிக்கி கடும் இன்னல்களைச் சந்திக்கின்றனர்.

குறிப்பாக, விதிமீறுவோர் போலீஸார் வழக்கு பதிவு செய்தல் மற்றும் அபராத விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மக்களின் நடமாட்டத்தைக் குறைத்து, கொரோனா வைரஸ் சமூக பரவலை தவிர்ப்பதற்காகவே இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 30, 2020, 7:28 [IST]
English summary
Nagpur Cops Busted Girls With Activa Scooter For Violating Lockdown. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+