மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு வந்தது

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய பஜாஜ் டோமினார் 250 சிசி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. விலை, தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு வந்தது

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகை பைக் மாடல்களில் மிகச் சிறந்த பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல் பஜாஜ் டோமினார் 400. வடிவமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலை போன்றவை இந்த பைக்கிற்கு குறிப்பிடத்தக்க விற்பனையை அளித்து வருகிறது.

மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு வந்தது

இந்த சூழ்நிலையில், டோமினார் பைக்கிற்கான மார்க்கெட்டி விஸ்தரிக்கும் விதத்தில், 250 சிசி எஞ்சினுடன் பஜாஜ் டோமினார் பைக்கின் விலை குறைவான மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு வந்தது

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கின் எஞ்சின் தவிர்த்து, டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் அதிக மாற்றங்கள் இல்லை. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், ஸ்பிளிட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு வந்தது

கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 248.77 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் புதிய பஜாஜ் டோமினார் 250பைக்கிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், பஜாஜ் டோமினார் 250 பைக்கின் எஞ்சின் ட்வின் ஸ்பார்க் பிளக் தொழில்நுட்பத்துடன் வந்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு வந்தது

கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் இருக்கும் இந்த எஞ்சின் 29.6 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக உள்ளது. ஆனால், புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 26.6 பிஎச்பி பவரையும், 23.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு வந்தது

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் பெரும்பாலான பாகங்களை டோமினார் 250 பைக் தக்க வைத்துள்ளது. முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சாபரும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளன.

மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு வந்தது

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக்கிற்கு ரூ.1.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, பஜாஜ் டோமினார் 400 பைக் ரூ.1.91 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், டோமினார் 250 பைக் ரூ.31,000 குறைவான விலையில் வந்துள்ளது.

மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு வந்தது

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் மாடலானது கேன்யோன் ரெட் மற்றும் வைன் பிளாக் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

மிக சவாலான விலையில் புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் விற்பனைக்கு வந்தது

புதிய பஜாஜ் டோமினார் 250 பைக் சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் யமஹா எஃப்இசட்25 உள்ளிட்ட மாடல்களுக்கும், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 11, 2020, 13:52 [IST]
English summary
Bajaj Auto has launched the new Dominar 250 bike model in India at a price tag of RS 1.6 lakh, ex-showroom Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+