பிஎம்டபிள்யூ எஃப்900 ஆர் பைக்கிற்கு இணையான ஹெட்லைட் உடன் பிஎஸ்6 ஜி310 ஆர்... மீண்டும் சோதனை...

இந்த ஜூலை மாத துவக்கத்தில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டதை தொடர்ந்து பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கின் மாதிரி மீண்டும் சோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எஃப்900 ஆர் பைக்கிற்கு இணையான ஹெட்லைட் உடன் பிஎஸ்6 ஜி310 ஆர்... மீண்டும் சோதனை...

இதுகுறித்து இந்தியன் ஆட்டோஸ்ப்ளாக் செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களில் பைக் கிட்டத்தட்ட இதற்கு முந்தைய சோதனை ஓட்டத்தில் கொண்டிருந்த தோற்றத்தை தான் கொண்டுள்ளது. அதேபோல் பைக் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை.

பிஎம்டபிள்யூ எஃப்900 ஆர் பைக்கிற்கு இணையான ஹெட்லைட் உடன் பிஎஸ்6 ஜி310 ஆர்... மீண்டும் சோதனை...

படத்தில் பைக்கின் மேட் ப்ளாக் நிறம் தெளிவாக தெரிகிறது. இம்முறை ஃப்ரேம் சிவப்பு நிறத்திற்கு மாறாக கருப்பு நிறத்தில் உள்ளது. பிஎஸ்6 ஜி310 ஆர் பைக் அப்டேட்டான ஹெட்லேம்ப் அமைப்பை பெற்றிருப்பதையும் இந்த ஸ்பை படங்கள் வெளிக்காட்டுகின்றன.

பிஎம்டபிள்யூ எஃப்900 ஆர் பைக்கிற்கு இணையான ஹெட்லைட் உடன் பிஎஸ்6 ஜி310 ஆர்... மீண்டும் சோதனை...

எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ள இந்த ஹெட்லேம்ப் சிறப்பான வெளிச்சத்துடன் ஆற்றல் குறைவாக நுகரும். ஹெட்லேம்பின் வடிவத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்றாலும் அதன் அமைப்பில் செங்குத்தான எல்இடி டிஆர்எல் மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ எஃப்900 ஆர் பைக்கிற்கு இணையான ஹெட்லைட் உடன் பிஎஸ்6 ஜி310 ஆர்... மீண்டும் சோதனை...

இதனால் இந்த அப்டேட் ஹெட்லேம்ப் யூனிட், பிஎம்டபிள்யூ எஃப்900 ஆர் பைக்கின் ஹெட்லேம்பை நினைவூட்டுகிறது. இந்த மாற்றத்தினால் புதிய ஜி310 ஆர் பிஎஸ்6 பைக்கின் முன் தோற்றம் சற்று வித்தியாசப்படுகிறது. இதனுடன் பைக்கின் பாடி பேனல்களையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் திருத்தியமைத்துள்ளது.

பிஎம்டபிள்யூ எஃப்900 ஆர் பைக்கிற்கு இணையான ஹெட்லைட் உடன் பிஎஸ்6 ஜி310 ஆர்... மீண்டும் சோதனை...

அதேபோல் இண்டிகேட்டர்களும் புதியதாக உள்ளன. பிஎஸ்6 தரத்தில் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள வழக்கமான 313சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவுள்ளது. பிஎஸ்4 தரத்திலும் இதே ஆற்றலை தான் இந்த என்ஜின் பைக்கிற்கு வழங்கியது.

பிஎம்டபிள்யூ எஃப்900 ஆர் பைக்கிற்கு இணையான ஹெட்லைட் உடன் பிஎஸ்6 ஜி310 ஆர்... மீண்டும் சோதனை...

சோதனை ஓட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுப்பட்டு வருவதால் இந்த பிஎஸ்6 பைக்கின் அறிமுகத்தை விரைவில் காணலாம். முன்னதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்ட ஜி310 ஜிஎஸ் பைக்கையும் சோதனையில் உட்படுத்தி இருந்தது.

பிஎம்டபிள்யூ எஃப்900 ஆர் பைக்கிற்கு இணையான ஹெட்லைட் உடன் பிஎஸ்6 ஜி310 ஆர்... மீண்டும் சோதனை...

பிஎஸ்6 ஜி310 ஆர் பைக்கில் வழங்கப்படும் என்ஜின் தான் பிஎம்டபிள்யூவின் இந்த அட்வென்ஜெர் ரக பைக்கிலும் பொருத்தப்படுகின்றது. டிவிஎஸ் நிறுவனத்துடனான பிஎம்டபிள்யூவின் கூட்டணியினால் இந்த இரு பிஎஸ்6 பைக்குகளும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கின் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles

English summary
BS6 BMW G 310 R spotted testing in India once again
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X