புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன..? முழுவிபரம் உள்ளே...
மிக சமீபத்தில் ஹீரோ நிறுவனத்தில் இருந்து அறிமுகமான எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை பற்றிய முழு விபரங்களை வெளிப்படுத்தும் வகையில் புதிய வீடியோ ஒன்று எம்ஆர்டி விலாக்ஸ் என்ற யூடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.99.950-ல் இருந்து ரூ.1.03 லட்சம் வரையில் விலையினை பெற்றுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை 2019 ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 1.ஆர் கான்செப்ட்டின் அடிப்படையில் ஹீரோ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதனால் கான்செப்ட் மாடலில் இருந்து பெரும்பான்மையான டிசைன் பாகங்களை பெற்றுள்ள இந்த புதிய பைக்கின் முன்புறத்தில் எல்இடி டிஆர்எல்களுடன் கூர்மையான தோற்றத்துடன் எல்இடி ஹெட்லேம்ப் பொருத்தப்பட்டுள்ளது. டர்ன் இண்டிகேட்டர்கள் கூட எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளன.

நாக்டு வெர்சன் மோட்டார்சைக்கிள் என்பதால் பெரிய அளவில் வெளிப்புறத்தில் பேனல்கள் இல்லை. இருப்பினும் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 37மிமீ ஃபோர்க்குகள் பைக்கிற்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்குகின்றன. பெட்ரோல் டேங்க் பெரியதாக காணப்பட்டாலும், வெறும் 12 லிட்டர் மட்டுமே புடிக்கும்.

இதன் டேங்க் எக்ஸ்டென்ஷன்ஸ் மைய பேனலிற்கு பின்புறத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. இதுதான் பைக்கின் மிகவும் கவனிக்கத்தக்க வகையிலான டிசைன் ஆக உள்ளது. பின்பக்கம், எல்இடி ப்ரேக்லைட் உடன் மிக சிறியதான வால் பகுதியை பெற்றுள்ளது.

பின்புறத்திலும் எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ள எல்இடி யூனிட்களும் மட்-கார்ட் உடன் கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளன. 7-நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ரியர் மோனோஷாக் வழக்கம்போல் வெளிப்பார்வைக்கு தெரியாத வகையில் மறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரிவில் உள்ள மற்ற பைக்குகளை போல் பின் சக்கர-ஹக்கரை ஹீரோ எக்ஸ்ட்ரீம் பைக் கொண்டிருக்கவில்லை. இதனால் பைக் மிகவும் தெளிவாக காட்சியளிக்கிறது. எக்ஸாஸ்ட் யூனிட் மிகவும் சிறியதாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 17 இன்ச் அலாய் சக்கரங்களில் 100 செக்ஷன் மற்றும் 130 செக்ஷன் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவற்றில் ப்ரேக்கிங் பணியை கவனிக்க பெடல் வடிவத்தில் 276மிமீ மற்றும் 220மிமீ-ல் முன் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பட்ஜெட் விலையில் பைக்கை பெற நினைப்போர்க்காக ட்ரம் ப்ரேக் தேர்விலும் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் பாதுகாப்பிற்கு இந்த 2020 ஹீரோ பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் நிலையாக வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் பிரிவில் முதல் மாடலாக என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப், சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால் என்ஜின் ஸ்டார்ட் ஆகாத வசதி உள்ளிட்டவற்றையும் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் ஏற்றுள்ளது. மேலும் ஹசார்ட் லைட் ஸ்விட்ச் மற்றும் நெகட்டிவ் எல்சிடி திரையுடன் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவையும் இந்த பைக்கில் உள்ளன.

இருக்கை எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் உள்ளதை போன்று ஒரே-துண்டாக வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 163சிசி, ஏர்-கூல்டு, எஸ்ஒஎச்சி என்ஜின் அதிகப்பட்சமாக 15 பிஎச்பி பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு தொடர்ச்சியான கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. புதிய டைமண்ட் ப்ரேம் ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பைக்கின் மொத்த கெர்ப் எடை மிகவும் குறைவாக 138.5 கிலோ ஆக உள்ளது. வீல்பேஸும் குறைவாக 1334மிமீ-ல் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








