இந்தியர்களின் கனவு பைக்... 2020 ஹோண்டா ஆப்ரிக்காவின் டெலிவிரி துவங்கியது...!
2020 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்கிற்கான டெலிவிரி பணிகள் இந்தியாவில் துவங்கியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ஆப்ரிக்க ட்வின் பைக்கை இந்திய சந்தையில் கடந்த மார்ச் மாதத்தில் தான் அறிமுகம் செய்திருந்தது. இதனால் இதன் டெலிவிரி கடந்த மே மாதத்திலேயே துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் தற்போது தான் இந்த பைக்கின் டெலிவிரி பணிகள் ஆரம்பமாகியுள்ளன. ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக மேனுவல் வேரியண்ட்டாக கொண்டுவந்துள்ள புதிய ஆப்ரிக்கா ட்வின் பைக்கை முதல் ஆளாக குருக்ராமை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் டெலிவிரி செய்துள்ளார்.

மேனுவல் & டிசிடி என்ற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ள இந்த 2020 பைக்கின் மேனுவல் வேரியண்ட்டின் விலை ரூ.15.35 லட்சமாகவும், டிசிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை சற்று ப்ரீமியமாக ரூ.16.1 லட்சமாகவும் எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கூறுகையில், ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ஜெர் ஸ்போர்ட்ஸ் பைக் உண்மையான அட்வென்ஜெர் பயணத்தை விருப்புபவரிடன் முதலாவதாக டெலிவிரி செய்யப்பட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்தார்.

ஹோண்டா நிறுவனம் அட்வென்ஜெர் பைக்குகளுக்கு டாப் பாக்ஸ், நீட்டிக்கப்பட்ட விஸர், இரு-வழி குயிக்ஷிஃப்டர், மெயின் ஸ்டாண்ட், ராலி ஸ்டெப், என்ஜின் பாதுகாப்பான், முன்புற ஃபாக் விளக்குகள் மற்றும் ஸ்மோடு விண்ட்ஸ்க்ரீன் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்த கூடுதல் ஆக்ஸஸரீகள் ஆப்ரிக்கா ட்வின் பைக்கின் இரு வெர்சன்களுக்கும் பொருந்தும்.

ஹோண்டாவின் இந்த 2020 பைக்கில் சிறப்பம்சங்களாக பெரிய 6.5 இன்ச்சில் தொடுத்திரை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், அப்டேட்டான ஹோண்டா செலக்டபிள் ட்ராக்ஷன் கண்ட்ரோல், 6-அச்சு நிலைமாற்ற அளவீட்டு அலகு மற்றும் மூன்று-நிலைகளில் வீலிங் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

டூர், அர்பன், க்ராவெல், ஆஃப்-ரோடு மற்றும் ரைடருக்கு விருப்படியான இரு கஸ்டமைஷபிள் ப்ரோகிராம் என ஆறு விதமான ரைடிங் மோட்களை கொண்டுள்ள இந்த பைக்கில் 1084சிசி இணையான-இரட்டை சிலிண்டர் அமைப்பை கொண்ட என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 101 பிஎச்பி பவரையும், 6250 ஆர்பிஎம்-ல் 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் மேனுவல் வேரியண்ட்டில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக வழங்கப்படுகிறது.

அதேநேரம் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் வழங்கப்படும் டிசிடி ட்ரான்ஸ்மிஷன் ஆனது மூன்று நிலைகளில் எலக்ட்ரானிக் என்ஜின் ப்ரேக்கிங்கை பெற்றுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள ஏபிஎஸ்-ஐ ரைடர் ஆஃப்-ரோடு பயணத்திற்கு தேவை என்றால் முழுவதுமாக அணைத்து வைக்கவும் முடியும்.


Click it and Unblock the Notifications








