சிபி350 பைக்கை வாங்க முடியவில்லையே என்ற கவலையே வேண்டாம்!! உங்களுக்காகவே 250சிசி பைக்கின் தயாரிப்பில் ஹோண்டா

புதிய சிபி250சிசி பைக்கின் தயாரிப்பு பணிகளில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சிபி350 பைக்கை வாங்க முடியவில்லையே என்ற கவலையே வேண்டாம்!! உங்களுக்காகவே 250சிசி பைக்கின் தயாரிப்பில் ஹோண்டா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சமீபத்தில்தான் ஹைனெஸ் சிபி350 பைக்கை இந்திய சந்தையில் புத்தம் புதியதாக அறிமுகப்படுத்தியது. நிறுவனத்தின் பிக்விங் டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த பைக் கணிசமான வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டு வருகிறது.

சிபி350 பைக்கை வாங்க முடியவில்லையே என்ற கவலையே வேண்டாம்!! உங்களுக்காகவே 250சிசி பைக்கின் தயாரிப்பில் ஹோண்டா

இந்த நிலையில்தான் இதன் குறை-என்ஜின் வெர்சனாக சிபி250சிசி பைக்கின் தயாரிப்பு பணிகளிலும் ஹோண்டா ஈடுப்பட்டு வருகிறது. விஸர்டவுன் என்ற இணையத்தள பக்கத்தின் மூலமாக இணையத்தில் கசிந்துள்ள இதுகுறித்த படங்களில் பைக்கின் தோற்றம் கிட்டத்தட்ட விரைவில் அறிமுகமாகவுள்ள சிபி300ஆர்-ஐ ஒத்து காணப்படுகிறது.

இருப்பினும் ஹோண்டா சிபி400 எஸ்எஃப் பைக்கில் இருந்தும் ஃப்ரேம் மற்றும் உடற்அமைப்புகளை இந்த 250சிசி பைக் பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது. வழக்கமான இரட்டை தொட்டில் வடிவில் இருக்கும் ஃப்ரேம் மற்றும் ஸ்விங்கார்ம் பார்ப்பதற்கு மிகவும் எளிமையானதாக உள்ளது.

சிபி350 பைக்கை வாங்க முடியவில்லையே என்ற கவலையே வேண்டாம்!! உங்களுக்காகவே 250சிசி பைக்கின் தயாரிப்பில் ஹோண்டா

பைக்கின் பின்பக்க சஸ்பென்ஷன் அமைப்பில் ஹோண்டா நிறுவனம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. ஏனெனில் மோனோ-ஷாக் யூனிட்டை கொண்டுள்ள பின்பக்க சஸ்பென்ஷன் அமைப்பு எந்தவொரு இணைப்பும் இல்லாமல் நேரடியாக ஸ்விங்கார்மில் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் சைக்கிள் பகுதியும் பெட்ரோல் டேங்கிற்கு பின்பகுதியில் நேரடியாக ஃப்ரேமில் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து இருக்கை, சக்கரங்கள் மற்றும் பின்பக்க வால்பகுதி உள்ளிட்டவை ஹோண்டா சிபி400 எஸ்எஃப் பைக்கையே ஒத்து காணப்படுகின்றன.

சிபி350 பைக்கை வாங்க முடியவில்லையே என்ற கவலையே வேண்டாம்!! உங்களுக்காகவே 250சிசி பைக்கின் தயாரிப்பில் ஹோண்டா

கசிந்துள்ள இந்த காப்புரிமை படங்களை பார்க்கும்போது இந்த 250சிசி பைக்கின் வடிவமைப்பு பணிகள் ஆரம்பக்கட்ட நிலையில்தான் உள்ளதை அறிய முடிகிறது. முதல் தலைமுறை சிபி250 பைக் 1970களில் வெளிவந்தது. அதன் தொடர்ந்து உலகளாவிய சந்தைகளில் 1992ல் அறிமுகமான இதன் சமீபத்திய அவதாரம், சிபிஎஃப்250 பைக் வெளிவரும் வரையில், 2003 வரையில் விற்பனையில் இருந்தது.

சிபி350 பைக்கை வாங்க முடியவில்லையே என்ற கவலையே வேண்டாம்!! உங்களுக்காகவே 250சிசி பைக்கின் தயாரிப்பில் ஹோண்டா

அப்போதைய சிபி250 பைக்கின் என்ஜின் பவர் மற்றும் டார்க் அளவுகளில்தான் சிறிய குறை இருந்ததுபோல் தெரிந்தது. மற்றப்படி பைக்கின் செயல்படுதிறனில் எந்த புகாரும் வரவில்லை. தற்சமயம் ஹோண்டா சிபி வரிசையில் சிபி125ஆர்-இல் இருந்து சிபி1000ஆர் வரையில் பைக்குகள் உள்ளன.

ஆனால் நமது கேள்வி என்னவென்றால், தற்போது வடிவமைக்கப்பட்டுவரும் சிபி250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பதுதான். இந்தியாவில் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஹோண்டா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாலும், இங்கு விற்பனையில் இருந்த சிபிஆர்250ஆர் பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டதாலும் புதிய சிபி250சிசி பைக் நம் நாட்டிற்கும் வருகை தர அதிக வாய்ப்புகள் உள்ளது.

Most Read Articles

English summary
New Honda CB 250cc Under Development – Patent Leaks
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X