மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

2021 கேடிஎம் 390 மற்றும் 250 அட்வென்ச்சர் பைக்குகள் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கும் தற்சமயம் இங்கு விற்பனையில் உள்ள மாடல்களுக்கும் எதாவது வித்தியாசம் உள்ளதா என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

இந்தியாவில் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்காது என்பது உண்மைதான். ஆனால் அந்த நிலை தற்போது புதிய புதிய அட்வென்ச்சர் பைக்குகளின் வருகையினால் மாற்றமடைந்து வருகிறது.

மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

ஏனெனில் ராயல் என்பீல்டு, ஹீரோ போன்ற முதன்மை மோட்டார்சைக்கிள் பிராண்ட்கள் சிறிய என்ஜின் உடன் மலிவான விலையில் அட்வென்ச்சர் பைக்குகளை கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றன.

மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

கேடிஎம் பிராண்டில் இருந்து முதல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக 390 அட்வென்ச்சர் இந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அதன் மலிவான வெர்சனாக 250 அட்வென்ச்சர் அதற்கடுத்த மாதத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

இந்திய சந்தையில் கணிசமான வாடிக்கையாளர்களை பெற்றுவரும் இந்த இரு கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகளும் தற்போது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 250 அட்வென்ச்சரின் விலை 21,500 ரிங்கிட் மலேசியாவாக (ரூ.3.9 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

அதுவே பெரிய தோற்றம் கொண்ட 390 அட்வென்ச்சரின் மலேசிய நாட்டிற்கான விலை 30,000 ரிங்கிட் மலேசியா ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.5.58 லட்சமாகும். இவற்றில் சாலை வரிகள், இன்சூரன்ஸ் உள்ளிட்டவை எதுவும் சேர்க்கப்படவில்லை.

மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

அவற்றை எல்லாம் சேர்த்தால் எங்கேயோ போகும். 250 அட்வென்ச்சரில் 248.8சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 30 பிஎஸ் மற்றும் 7500 ஆர்பிஎம்-ல் 24 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

390 அட்வென்ச்சரில் அதிகப்பட்சமாக 9000 ஆர்பிஎம்-ல் 43.5 பிஎஸ் மற்றும் 7000 ஆர்பிஎம்-ல் 37 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 373சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இரு பைக்கிலும் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அவற்றின் என்ஜின் உடன் இணைக்கப்படுகிறது.

மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

ட்ரான்ஸ்மிஷன் மட்டுமின்றி ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் வெளியே தெரிவது போன்ற ஸ்விங்கார்ம் உள்ளிட்டவற்றையும் இவை இரண்டும் பகிர்ந்து கொண்டுள்ளன. ஆனால் 390 அட்வென்ச்சரில் முழு-வண்ண டிஎஃப்டி-எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது.

மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

ஆனால் 250சிசி அட்வென்ச்சரில் மோனோக்ரோம் எல்சிடி திரையே வழங்கப்படுகிறது. அதேபோல் 250 அட்வென்ச்சர் பைக்கில் வழங்கப்படாத குயிக்‌ஷிஃப்டர், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் உள்ளிட்டவற்றை 390 அட்வென்ச்சர் பைக் பெறுகிறது.

மலேசியாவில் விற்பனைக்கு வந்த மலிவான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்குகள்!! ஆனால் விலை... அம்மாடியோவ்!

390 அட்வென்ச்சரின் எடை 172 கிலோவாகவும், 250 அட்வென்ச்சரின் எடை அதனை காட்டிலும் வெறும் 2 கிலோ மட்டும் குறைவானதாகவும் உள்ளது. இரு பைக்கும் தரையில் இருந்து சரியாக 855மிமீ உயரத்தில் ஓட்டுனர் இருக்கையை கொண்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 31, 2020, 9:30 [IST]
English summary
New KTM 390 adventure and 250 adventure launched in Malaysia.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+