ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் அறிமுகம்... இந்திய அறிமுகம் எப்போது?

ட்ரையம்ஃப் பைக் நிறுவனத்தின் புத்தம் புதிய ட்ரைடென்ட் 660 பைக் இன்று நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த புதிய பைக் மாடலின் படங்கள், சிறப்பம்சங்கள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் அறிமுகம்... இந்திய அறிமுகம் எப்போது?

ட்ரையம்ஃப் நிறுவனத்தின் ட்ர்ப்பிள் வரிசை பைக் மாடல்கள் உலக அளவில் வாடிக்கையாளர்களிடம் சிறந்த மதிப்பை பெற்றுள்ளன. இந்த நிலையில், ட்ரிப்பிள் பைக் மாடல் கனவுடன் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலை தேர்வை வழங்கும் விதத்தில் ட்ரைடென்ட் என்ற புத்தம் புதிய மாடலை ட்ரையம்ஃப் இன்று உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் அறிமுகம்... இந்திய அறிமுகம் எப்போது?

இந்த புதிய பைக் மாடலானது ரோட்ஸ்டெர் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ட்ரையம்ஃப் நிறுவனத்தின் ஹிங்க்லே வடிவமைப்பு மையத்தில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கின் வடிவமைப்பில் இத்தாலியை சேர்ந்த பிரபல வடிவமைப்பு நிபுணர் ராடல்ஃபோ பிராஸ்கோலியின் ஆலோசனைகளும் பெற்று பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் அறிமுகம்... இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக்கில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 660சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதிகளும் உள்ளன. இந்த பைக்கின் எஞ்சின் உச்சபட்ச சுழல் வேக நிலையில் 90 சதவீத டார்க் திறனை சீராக வெளிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. இதனால், அதிகபட்ச வேகத்தில் செல்லும்போது செயல்திறன் மிக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் அறிமுகம்... இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்கில் ரைடு பை ஒயர் தொழில்நுட்பம் உள்ளது. ரோடு, ரெயின் என இரண்டு ரைடிங் மோடுகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், எல்இடி லைட்டுகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் அறிமுகம்... இந்திய அறிமுகம் எப்போது?

புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் மாடலானது புதிய ட்யூபிலர் ஸ்டீல் சேஸீய பயன்படுத்தப்படடுள்ளது. முன்புறத்தில் 41 மிமீ ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஷோவா மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் அறிமுகம்... இந்திய அறிமுகம் எப்போது?

முன்சக்கரத்தில் நிஸின் 2 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 310 மிமீ ட்வின் ரோட்டர்கள் கொண்ட டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் நிஸின் காலிபர் கொண்ட டிஸ்க் பிரேக்கும் உள்ளன. இந்த பைக்கில் 17 அங்குல காஸ்ட் அலுமினியம் சக்கரங்களும், மிச்செலியன் ரோடு 5 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கிற்கு 45 விதமான கூடுதல் ஆக்செஸரீகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஆர்ப்பரிக்கும் ஸ்டைலில் புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக் அறிமுகம்... இந்திய அறிமுகம் எப்போது?

வரும் நவம்பர் மாத துவக்கத்தில் இந்த புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் 660 பைக்கின் விலை அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில், அதாவது, அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 30, 2020, 18:31 [IST]
English summary
Triumph Motorcycles company has unveiled much awaited Trident 660 roadster bike model globally. It is expected to arrive in India by sometime next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+