மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு ஜாம்பவான்கள்... ஏன் சார் இந்த நேரத்துல இப்படி..?

குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகிய இருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு ஜாம்பவான்கள்... ஏன் சார் இந்த நேரத்துல இப்படி..?

தமிழகத்தை தாயகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது டிவிஎஸ் மோட்டார் கம்பெனி. இந்த நிறுவனம் இருசக்கர வாகனங்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

இந்த நிலையில், தற்போதைய அதன் வரிசையில் புதிய வாகனம் ஒன்றை இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விளம்பரமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு ஜாம்பவான்கள்... ஏன் சார் இந்த நேரத்துல இப்படி..?

அதில், பாலிவுட் திரை நட்சத்திரமான அமிதாப் பச்சன் மற்றும் கிரிக்கெட் உலகின் பிரபலம் தல தோனி ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து நம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

ஆம், இந்த விளம்பரத்தை பார்த்தாலே அது உங்களுக்கு புரிந்துவிடும். புதிய வாகனம் அறிமுகமாக இருப்பதை இருவரும் சூசகமாக தெரிவித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு ஜாம்பவான்கள்... ஏன் சார் இந்த நேரத்துல இப்படி..?

ஆனால், எந்தமாதிரியான வாகனம் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக டிவிஎஸ் நிறுவனம் இந்த விளம்பரத்தை வெளியிட்டிருக்கின்றது. துளியளவும் இந்த விளம்பரத்தில் குறிப்பு கொடுக்காத காரணத்தால் டிவிஎஸ் நிறுவனம் எந்த மாதிரியான வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது என்பது பற்றிய தகவல் மர்மமாகவே உள்ளது.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு ஜாம்பவான்கள்... ஏன் சார் இந்த நேரத்துல இப்படி..?

அதேசமயம், அது மிக விரைவில் அறிமுகமாக இருக்கின்றது என்பது மட்டும் தெரியவந்துள்ளது. இதைதான் திரையுலக ஜாம்பவனான அமிதாப் பச்சனும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான தோனியும் மறைமுகமாக நமக்கு தெரிவித்திருக்கின்றனர்.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு ஜாம்பவான்கள்... ஏன் சார் இந்த நேரத்துல இப்படி..?

அந்த விளம்பரத்தில் நடிகர் அமிதாப் பச்சான் "இந்தியாவின் ஃபர்ஸ்ட் அண்ட் ஒன்லி" என்ற வார்த்தைப் பயன்படுத்தியிருக்கின்றார். ஆகையால், இதுவரை இந்தியாவிலேயே காணக்கிடைக்காத ஓர் புத்தம் புதிய தயாரிப்பைதான் டிவிஎஸ் அறிமுகம் செய்ய இருக்கின்றது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால், அது என்ன என்பதில் பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு ஜாம்பவான்கள்... ஏன் சார் இந்த நேரத்துல இப்படி..?

அமிதாப் பச்சன் மற்றும் தோனி ஆகிய இருவரும் டிவிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸ்டர் ஆவர். எனவேதான் இவர்கள் இருவரும் இந்த விளம்பரத்தில் நடித்திருக்கின்றனர்.

இவர்கள் கடந்த காலங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை விளம்பரத்தி வந்தனர். இந்த நிலையில் இருவரும் இணைந்து புதிய தயாரிப்பை புரமோட் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு ஜாம்பவான்கள்... ஏன் சார் இந்த நேரத்துல இப்படி..?

முன்னதாக அமிதாப் பச்சன், டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரையும், தோனி ஸ்டார் சிட்டி பைக்கையும் புரமோட் செய்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது வரை இந்த வாகனங்களை இவர்களே விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி, அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் அறிமுகத்தை தோனிதான் சமீபத்தில் செய்து வைத்தார்.

இந்த நிலையில்தான் புத்தம் புதிய தயாரிப்பை இவர்கள் இருவரும் இணைந்தே இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றனர். அது கடந்த காலங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஜெப்லின் க்ரூஸர் அல்லது என்டார்க்கைப் போன்று இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. ஏனெனில் கடந்த காலங்களில் அதிக சஸ்பென்ஸுடன் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் இவையாகும்.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு ஜாம்பவான்கள்... ஏன் சார் இந்த நேரத்துல இப்படி..?

அதேசமயம், விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்ற புதிய தயாரிப்பு இந்தியாவிலேயே இல்லாத வகையில் புத்தம் புதிதாக களமிறக்கப்பட இருப்பதாக கூறப்படுவதால் அதுகுறித்த சந்தேகங்கள் பல எழும்பியிருக்கின்றன. இதுகுறித்த ஆவல் மக்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது வெகுவிரைவில் நீக்கப்படும் என நம்பப்படுகின்றது.

மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய இரு ஜாம்பவான்கள்... ஏன் சார் இந்த நேரத்துல இப்படி..?

அதாவது, புதிய தயாரிப்பு அதன் தரிசனைத்தை கூடிய விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அது எப்போது என்பதும் இங்கு கேள்விக் குறியே. ஆகையால், அறிமுகம்குறித்த நாளுக்காகவும் நாம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
New TVS Teaser Video Starring Amitabh Bachchan & MS Dhoni: Something New Coming Soon. Read In Tamil.
Story first published: Tuesday, July 21, 2020, 7:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X