வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...

பியாஜியோ நிறுவனம் மேம்படுத்தப்பட்ட வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஸ்கூட்டர் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களுக்கான முன்பதிவுகளை ஏற்க துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...

இந்த இரு ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களின் முன்பதிவுகளை இணையத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான முன்தொகையாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நீங்கள் இணையத்தின் மூலமாக இந்த ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தால் ரூ.2,000 மதிப்பிலான சலுகைகளை பெறலாம்.

வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...

இத்தாலிய ஸ்கூட்டர் ப்ராண்ட்டான வெஸ்பா 125சிசி மற்றும் 150சிசி பிரிவுகளில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த இரு ஸ்கூட்டர்களையும் இந்த ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...

இந்த ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ள புதிய எல்இடி ஹெட்லைட்டை தயாரிப்பு நிறுவனம் க்ரிஸ்டல் ஒளியூட்டப்பட்ட எல்இடி ஹெட்லைட் என குறிப்பிடுகிறது. இந்த ஹெட்லைட் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...

இந்த புதிய எல்இடி ஹெட்லைட்டை தவிர்த்து யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் துளை, பூட் விளக்கு மற்றும் சவுகரியமான பயணத்திற்காக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்க சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றையும் பியாஜியோ நிறுவனம் புதிய எஸ்எக்ஸ்எல் மற்றும் விஎக்ஸ்எல் ஸ்கூட்டர் மாடல்களில் வழங்கியுள்ளது.

வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த ஸ்கூட்டர்களில் வழக்கமாக பொருத்தப்பட்டு வரும் 124.45சிசி, ஏர்-கூல்டு மற்றும் 149.5சிசி ஏர்-கூல்டு என்ஜின்களில் எந்த மாற்றமும் இல்லை. மாறாக இவை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...

இவற்றில் 124.45சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 9.79 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்-ல் 9.60 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 150சிசி எஸ்எக்ஸ்எல் மற்றும் விஎக்ஸ்எல் ஸ்கூட்டர்களில் ஏபிஎஸ் நிலையாக வழங்கப்பட்டுள்ளது.

வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...

ஆனால் இவற்றின் 125சிசி வெர்சன்களில் சிபிஎஸ் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களை டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணியினை ஏற்கனவே பியாஜியோ நிறுவனம் துவங்கிவிட்ட நிலையில் இவற்றின் டெலிவிரி மற்றும் அதிகாரப்பூர்வ விலை குறித்த அறிவிப்புகளை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...

தற்சமயம் விற்பனையில் உள்ள வெஸ்பா விஎக்ஸ்எல் 149 ஸ்கூட்டரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1,22,664 ஆக உள்ளது. எஸ்எக்ஸ்எல் 149 ஸ்கூட்டரானது ரூ.1,26,650 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Most Read Articles

மேலும்... #வெஸ்பா #vespa
English summary
ONLINE BOOKINGS FOR BSVI 2020 VESPA FACELIFT VXL AND SXL SCOOTERS COMMENCE IN INDIA
Story first published: Thursday, July 9, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X