2020 ஆட்டோ எக்ஸ்போவில் தங்க நிறத்தில் ஜொலித்த ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர்

ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர், க்ரேட்டர் நொய்டாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2020ஆம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காண்போம்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் தங்க நிறத்தில் ஜொலித்த ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் தயாரிப்பு நிறுவனமான ஒகினாவாவில் இருந்து இந்திய சந்தையில் களமிறங்கும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக மேக்ஸி-ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் தங்க நிறத்தில் ஜொலித்த ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர்

அதிக எண்ணிக்கையில் அப்டேட்டான தொழிற்நுட்பங்களை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பரிமாண அளவுகளை அதிகமாக பெற்றுள்ளது. இதன் தோற்றம் கிட்டத்தட்ட, 2020 ஆட்டோ எக்ஸ்போவில் சமீபத்தில் அறிமுகமான சுசுகி புர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர்160 ஸ்கூட்டர்களை ஒத்து காணப்படுகிறது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் தங்க நிறத்தில் ஜொலித்த ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர்

இந்த புதிய ஸ்கூட்டரில் 4kWh லித்தியம்-இரும்பு பேட்டரியை கொண்ட 3kW ப்ரஷ்லெஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி சிங்கிள் சார்ஜில் 120கிமீ வரை ஸ்கூட்டரை இயக்கி செல்லும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் 100km/h ஆகும்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் தங்க நிறத்தில் ஜொலித்த ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர்

இந்த பேட்டரி தொகுப்புடன் நிலையான மற்றும் விரைவான சார்ஜர்கள் வழங்கப்படவுள்ளன. இதில் நிலையான சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் முழுவதும் நிறைவடைய 3லிருந்து 8 மணிநேரங்கள் வரை எடுத்துக்கொள்ளும் இதன் பேட்டரி, விரைவான சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றினால் வெறும் 2-3 மணிநேரங்களில் நிரம்பிவிடும்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் தங்க நிறத்தில் ஜொலித்த ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர்

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒகினாவாவின் இந்த மேக்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏகப்பட்ட தொழிற்நுட்ப வசதிகளை தன்னுள் கொண்டுள்ளது. செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், கீ-லெஸ் எண்ட்ரீ, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ஸ்கூட்டர் திருடுபோவதை எச்சரிக்க அலாரம் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் போன்றவை இந்த ஸ்கூட்டரில் உள்ள வசதிகளாகும்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் தங்க நிறத்தில் ஜொலித்த ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர்

இவை தவிர முழுவதும் எல்இடி தரத்தில் ஹெட்லைட்ஸ் மற்றும் இருக்கைக்கு அடியில் கூடுதல் இட வசதி உள்ளிட்டவற்றையும் மேக்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுவதற்காகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் தங்க நிறத்தில் ஜொலித்த ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர்

மற்றப்படி மேக்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் 2020ஆம் ஆண்டின் மத்தியில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால் இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் இன்னும் சில மாதங்களில் ஆரம்பமாகவுள்ளன.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் தங்க நிறத்தில் ஜொலித்த ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர்

மேலும் ஒகினாவா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதிகளவில் நிற தேர்வுகளை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வளவு பெரிய அளவில் ஸ்கூட்டரை சாலையில் ஓட்டி சென்றால் முன்னால் போகும் கார் கூட நமக்கு வழி விட்டால் ஆச்சிரியப்படுவதிற்கில்லை.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் தங்க நிறத்தில் ஜொலித்த ஒகினாவா க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டர்

சந்தையில் எந்த மாடலுடன் மேக்ஸி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நேரடியாக போட்டியிட போவதில்லை. ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களின்படி பார்த்தால், இந்த ஸ்கூட்டருக்கு ஏத்தர் நிறுவனத்தின் 450 ஸ்கூட்டர் மாடல் போட்டியினை தரலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 6, 2020, 19:23 [IST]
English summary
Auto Expo 2020: Okinawa Cruiser Maxi-Scooter Unveiled - Expected Launch Date, Specs, Features, Image
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+