ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஒகினவா எலெக்ட்ரி்க் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்த சந்தையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு களமிறங்கி வருகின்றன. அதில், சில நிறுவனங்கள் வாடிக்கையாளர் மத்தியில் அதிக பரீட்சயம் பெற்றுள்ளன. அதில், குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ஒகினவா உள்ளது.

 ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

இந்த நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு கடன் திட்டங்களை தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு ஒகினவா அறிமுகம் செய்துள்ளது.

 ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

மேலும், தற்சமயம் பொருளாதார நெருக்கடியில் உள்ள வாடிக்கையாளர்கள் மாதத் தவணையிலிருந்து சில மாதங்கள் விலக்கு பெறுவதற்கான திட்டங்களும் உள்ளன. இதற்காக, ஸெஸ்ட்மணி நிதி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது ஒகினவா.

 ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

சிபில் ஸ்கோர் மதிப்பீடு இதுவரை இல்லாத வாடிக்கையாளர்கள் ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சிறப்பு கடன் திட்டத்தில் விரைவாக பெறுவதற்கான வாய்ப்பை ஸெஸ்ட் மணி வழங்கும்.

 ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

அதன்பிறகு வாடிக்கையாளர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு கடன் வழங்குவதற்கு அனுமதிக்கப்படும். இந்த கடன் திட்டம் மூலமாக வாடிக்கையாளர்கள் எளிதாகவும், விரைவாகவும் கடன் பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

 ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

நாடு முழுவதும் உள்ள 350க்கும் மேற்பட்ட ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டீலர்களில் இந்த ஸெஸ்ட்மணி மூலமாக கடன் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

இதுதவிர்த்து, தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு குறுகிய கால சேமிப்புச் சலுகைகளையும் வழங்குவதாக ஒகினவா தெரிவித்துள்ளது. ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு இதுவே சரியான தருணமாக இருக்கும்.

Most Read Articles
Gallery Code:

மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Indian leading electric two-wheeler manufacturer, Okinawa, has introduced a set of new finance schemes during the ongoing festive season in the Indian market. The company is offering attractive Low EMI finance schemes across all its scooter models sold in the country.
Story first published: Saturday, October 31, 2020, 11:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X