பழைய டூ-வீலர்களை அவங்களே வாங்கிக்கிறாங்களாம்! ஒகினவா அதிரடி... உறைந்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக்!

பழைய டூ-வீலர்களை தாங்களே வாங்கிக் கொள்ள இருப்பதாக ஒகினாவா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பழைய டூ-வீலர்களை அவங்களே வாங்கிக்கிறாங்களாம்! ஒகினவா அதிரடி... உறைந்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக்!

இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்துவரும் நிறுவனங்களில் ஒகினவா நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே மையமாகக் கொண்டு இந்தியாவில் இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, ஸ்கூட்டர் ரக மின்சார ஸ்கூட்டர்களை மட்டுமே தற்போது வரை அந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.

பழைய டூ-வீலர்களை அவங்களே வாங்கிக்கிறாங்களாம்! ஒகினவா அதிரடி... உறைந்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக்!

இந்த நிறுவனமே, அதன் புதிய மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பழைய எரிபொருளால் இயங்கக்கூடிய வாகனங்களை எக்ஸ்சேஞ்ஜ் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு புதிய ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.

பழைய டூ-வீலர்களை அவங்களே வாங்கிக்கிறாங்களாம்! ஒகினவா அதிரடி... உறைந்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக்!

இதற்காக ஒகினவா நிறுவனம், கிரெட்ஆர் எனும் நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றது. இந்தியாவில் அதிகளவில் மின்சார ஸ்கூட்டரை விற்பனைச் செய்யும் நிறுவனமாக ஒகினவா இருக்கின்றது. இந்த வரவேற்பை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அது அறிமுகப்படுத்தியுள்ளது.

பழைய டூ-வீலர்களை அவங்களே வாங்கிக்கிறாங்களாம்! ஒகினவா அதிரடி... உறைந்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக்!

இதன் மூலம் புதிய மின்சார வாகன பயன்பாட்டாளர்களைக் கவர முடியும் என ஒகினவா நம்புகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக்காட்டிலும் மின்சார வாகனங்களின் விலை வேண்டுமானால் அதிகமானாதாக இருக்கலாம். ஆனால், அதன் பராமரிப்பு செலவு மற்றும் பயன்பாடு குறைந்த செலவில் அதிக லாபத்தை வழங்கக்கூடியதாக இருக்கின்றது.

பழைய டூ-வீலர்களை அவங்களே வாங்கிக்கிறாங்களாம்! ஒகினவா அதிரடி... உறைந்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக்!

எனவேதான் இந்தியர்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கான மோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும், ஒகினவா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் சற்று மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைப்பதால், மின்சார இருசக்கர வாகன உலகின் தலைவனாக கருதப்படும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கே டஃப் கொடுக்கும் வகையில் விற்பனையைப் பெற்று வருகின்றது.

பழைய டூ-வீலர்களை அவங்களே வாங்கிக்கிறாங்களாம்! ஒகினவா அதிரடி... உறைந்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக்!

இந்த நிலையிலேயே கூடுதல் டஃப் கொடுக்கும் வகையில் எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரெட் ஆர் நிறுவனம், எக்ஸ்சேஞ்ஜிற்கு வழங்கப்படும் இருசக்கர வாகனத்தை மதிப்பீடு செய்யும். அந்த மதிப்பின் அடிப்படையிலேயே புதிய ஒகினவா மின்சார ஸ்கூட்டரின் விலைக் குறைக்கப்பட்டு உரிய வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.

பழைய டூ-வீலர்களை அவங்களே வாங்கிக்கிறாங்களாம்! ஒகினவா அதிரடி... உறைந்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக்!

இந்த சிறப்பு வசதியை இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே ஒகினவா அறிமுகம் செய்துள்ளது. இதில், துரதிர்ஷ்டவசம் என்னவென்றால், சென்னைக்கு இத்திட்டம் பொருந்ததாது. மாறாக, அஹமதாபாத், டெல்லி என்சிஆர், ஹைதராபாத், ஜெய்பூர், பெங்களூர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டுமே தற்போது இந்த சலுகைப் பொருந்தும்.

பழைய டூ-வீலர்களை அவங்களே வாங்கிக்கிறாங்களாம்! ஒகினவா அதிரடி... உறைந்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக்!

அதேசமயம், விரைவில் நாட்டின் பிற நகரங்களிலும் இந்த சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என ஒகினவா அறிவித்துள்ளது. அதில், சென்னையும் அடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தின்கீழ் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் ஆகிய இரு இரண்டு சக்கர வாகனங்களுமே ஏற்றுக்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழைய டூ-வீலர்களை அவங்களே வாங்கிக்கிறாங்களாம்! ஒகினவா அதிரடி... உறைந்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக்!

ஆகையால், இந்த திட்டத்தைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பெட்ரோல் இரு சக்கர வாகனங்களை எந்தவொரு ஒகினாவா ஷோரூமில் வேண்டுமானாலும் எடுத்துச் சென்று உடல் ஆய்வு மற்றும் மதிப்பீட்டிற்கான ஆய்வை மேற்கொள்ளலாம். இங்கே, கிரெட்ஆர் மூலம் இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்டவை சரிபார்க்கப்படும்.

Most Read Articles

மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa Joins With CredR For Provide Petrol-Based Two-Wheeler Exchange Offer. Read In Tamil.
Story first published: Wednesday, November 18, 2020, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X