பஜாஜ், டிவிஎஸ்ஸால் கூட முடியல! சாதித்தது ஒகினவா! இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க

பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய இரு நிறுவனங்களால்கூட செய்ய முடியாத ஓர் காரியத்தை ஒகினவா நிறுவனம் கொரோனாவின் இக்கட்டான காலத்திலும் செய்து காட்டியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு நாளுக்கு உயர்ந்து வருவது நாம் அறிந்ததே. இந்த வரவேற்பிற்கு ஏற்ப உள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதன் புதுமுக மின் வாகனங்களை நாட்டில் களமிறக்கி வருகின்றன. குறிப்பாக, இந்தியர்களின் மன நிலை அறிந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் மலிவு விலையில், அதிக பயனுள்ள எலெக்ட்ரிக் வாகனங்களை களமிறக்க முயற்சி செய்து வருகின்றன.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

அந்தவகையில், க்ரீவ்ஸ் காட்டன் எனும் இந்திய நிறுவனத்துடன் இணைந்து நாட்டில் மின்சார வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது ஒகினவா நிறுவனம். இந்நிறுவனம், குறிப்பாக மின்வாகனச் சந்தையை மட்டுமே குறிக்கோளாக வைத்து அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றது.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

இந்த நிலையில்தான் இந்தியாவின் ஜாம்பவான் நிறுவனங்களான பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களால்கூட செய்ய முடியாத ஓர் சாதனையை இந்தியாவில் அது செய்துள்ளது. அதாவது, கொரோனாவால் சூழப்பட்டிருந்த இக்கட்டான நிலையிலும் அதிகளவில் மின் வாகனங்களை விற்பனைச் செய்து அது புதிய சாதனையை படைத்துள்ளது.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

இந்த பேரிடர் காலத்தில் பிற எந்த நிறுவனமும் பெரியளவில் அதன் வாகனங்களை விற்பனைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, உற்பத்தி நிறுவனங்கள் வாகனங்களை விற்பனைச் செய்ய தயாராக இருந்தாலும், அரசு விதித்த பொது முடக்கத்தின் காரணமாக மக்கள் வெளியே வருவது தடைச் செய்யப்பட்டது. இதனால், மின் வாகனம் மட்டுமின்றி எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் விற்பனையும் கேள்விக்குறியானது.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

எனவே, வாகனங்களின் விற்பனை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில்தான், ஒகினவா நிறுவனம் கடந்த மே மாதத்திற்கு பின்னர் ஒட்டுமொத்தமாக ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனைச் செய்து சாதித்துள்ளது. மின்சார வாகனம் இந்தளவிற்கு ஒரே மாத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும்.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

அதிலும், கொரோனவால் ஏற்பட்டிருக்கும் பேரிடர் காலத்தில் இத்தகைய வரவேற்பை ஒகினவா பெற்றிருப்பது இந்திய மின் வாகனச் சந்தையில் ஆச்சரிய மழையையேப் பொழியச் செய்துள்ளது.

ஒகினவா நிறுவனம், வைரஸ் பரவல் காரணமாக அதன் உற்பத்தி மற்றும் விற்பனைப் போன்ற அனைத்தும் விஷயங்களுக்கு கடந்த சில நாட்களாக தடை விதித்திருந்தது.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

இதைத்தொடர்ந்து, கடந்த மே 11ம் தேதிக்கு பின்னரே அதன் விற்பனை மற்றும் விற்பனை செயல்பாடுகளைக் குறைந்தளவு பணியாளர்களுடன் தொடங்கியது.

அதாவது, தற்போத நாடு முழுவதும் இயங்கி வரும் 350 ஷோரூம்களில் வெறும் 70 சதவீத ஷோரூம்கள் வாயிலாக மட்டமே அதன் விற்பனையைத் தொடங்கியது. எஞ்சியிருக்கும் ஷோரூம்கள் சிவுப்பு மண்டல பகுதியில் இருப்பதால் அவை தற்போதும் முடக்க நிலையிலேயே இருக்கின்றன.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

எனவே, 70 சதவீத ஷோரூம்களில் மட்டுமே விற்பனைத் தொடங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, விற்பனைத் தொடங்கிய வெறும் 40 நாட்களில்தான் ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட் ஒகினவா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. அதாவது, தற்போது கிடைத்திருக்கும் விற்பனை எண்ணிக்கையானது ஊரடங்கு லேசாக தளர்த்தப்பட்ட பிந்தைய காலத்தில் கிடைத்தவை மட்டுமே ஆகும்.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

எனவே, இந்திய மின்வாகன ஆர்வலர்கள் ஒகினாவின் அதீத வளர்ச்சியைக் கண்டு மூக்கின் மேல் விரல் வைத்துள்ளனர். மேலும், இந்த விற்பனை எண்ணிக்கையால் இந்தியாவின் முன்னணி மின்சார வாகன நிறுவனமாக உருவெடுக்கும் நிலைக்கு ஒகினவா உயர்ந்துள்ளது.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

இந்த அமோகமான வரவேற்பை அடுத்து மின்சார வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கையை ஒகினவா உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, 10,000 யூனிட்டுகளை தயாரிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக ஒகினாவைச் சார்ந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

ஒகினவா நிறுவனம் தற்போது வரை மின்சார ஸ்கூட்டர்களை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது. இந்த வரிசையில் விரைவில் மின்சார பைக்குகளையும் களமிறக்க இருப்பதாக அது அண்மையில் தகவல் வெளியிட்டது. இதற்காக ஒகி 100 எனும் மின்சார பைக்கை அது தயார் நிலையில் வைத்துள்ளது.

பஜாஜ், டிவிஎஸ்கூட இதை செய்யல... சாதித்து காட்டிய ஒகினவா... இப்படி ஒன்னு நடந்துருக்குனு சொன்னா நம்பவே மாட்டீங்க!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நிலவி வரும் அதீத வரவேற்பைத் தொடர்ந்து இந்த மின்சார பைக்கைக் களமிறக்கும் முயற்சியில் அது தீவிரம் காட்டி வருகின்றது. அதிலும், குறிப்பாக தற்போது அது களமிறக்கி வரும் மின்சார ஸ்கூட்டர்களைப் போலவே குறைந்த விலையில் களமிறக்க அது திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Okinawa Sells Over 1000 Electric Scooter After Resuming Operations In May. Read In Tamil.
Story first published: Friday, June 19, 2020, 14:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X