ஒரே சார்ஜில் 150 கிமீ பயணம்.. விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்..!

ஒகினவா மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் விரைவில் மலிவு விலை எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஒகினவா இருக்கின்றது. பல ஆண்டுகளாக இந்நிறுவனம், மின்சார ஸ்கூட்டர்களை மட்டுமே தயாரித்து வருகின்றது.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

இந்நிலையில், மின்சார பைக்கின் பக்கமும் தன் பார்வையை திருப்பும் வகையில் புதிய மாடல் பைக் ஒன்றை கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் ஓர் ஸ்கேல் மாடலை அறிமுகம் செய்தது. இது, ஓர் மாடலை தயாரிப்பதற்கு முன்பு அறிமுகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட முன்மாதிரி தயாரிப்பாகும்.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

இந்த முன்மாதிரி வாகனத்தையே ஸ்கேல் மாடல் என்று அழைப்பர். வாகன கண்காட்சி மற்றும் உற்பத்திக்கான அனுமதியைப் பெறுவதற்காக இதுபோன்ற மாடல்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் தயாரிப்பது வழக்கம்.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

அத்தகைய மாடலைதான் ஒகினவா மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் 2018ம் ஆண்டு காட்சிப்படுத்தியது. தற்போது இந்த எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இந்த முயற்சியில் ஒகினவா மிக தீவிரமாக களமிறங்கியிருப்பதால், வெகுவிரைவில் இந்த மின்சார அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

பார்ப்பதற்கு மிகவும் சாதாரண பெட்ரோல் பைக்குகளைப் போன்ற அமைப்பைப் பெற்றிருக்கும் அது முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்ககூடியதாகும். இத்தகைய தோற்றத்திற்காக பெட்ரோல் டேங்க் அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கூடுதலாக ஒரு சில அம்ங்களும் பெட்ரோல் வாகனங்களில் காணப்படுவதைப் போன்றே காட்சியளிக்கின்றது.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

இதுதவிர, முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தை இந்த பைக்கிற்கு வழங்குவதற்காக குரங்கு அமைப்பு டிசைன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற புதுமையான டிசைன் மற்றும் லுக்கினைப் பெற்றிருக்கின்ற காரணத்தால் இந்த மின்சார பைக்கிற்கு ஒகி 100 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

அந்தவகையில், இதன் முன்பக்க தோற்றத்திற்கு மான்ஸ்டர் ரகத்திலான உருவமும், பக்கவாட்டு பகுதிக்கு நகைப்பை ஏற்படுத்துகின்ற வகையிலான உருவமும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவையனைத்தும் அந்த பைக்கிற்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றமாகவே இருக்கின்றது.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

தொடர்ந்து, இந்த பைக் பார்ப்பதற்கு விலையுயர்ந்த பிரிமியம் ரக பைக்கினைப் போன்று காட்சியளிக்கின்றது. இதன் உருவம் மட்டுமின்றி அதில் உள்ள காணப்படும் சில அம்சங்களும் பிரிமியம் தரத்திற்கு இணையாதாக காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், எல்இடி மின் விளக்குகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒகி100 மின்சார பைக்கில் காணப்படுகின்றது.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

மேலும், இந்த ஒகினவா ஒகி 100 மின்சார பைக்கில் 3.3 பிஎஸ் திறனை வெளியேற்றும் திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது.

இதற்கான திறனை 72V 63Ah லித்தியம் அயன் பேட்டரி வழங்குகின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை செல்லலாம் என கூறப்படுகின்றது. மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 2 மணி நேரங்களே போதுமானது.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

இதுதவிர, இந்த பைக்கில் சொகுசு வசதிக்காக யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் சிங்கிள் ட்வின்-பிஸ்டன் காலிபர் கொண்ட மிகப்பெரிய அளவிலான டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார பைக் இந்தியாவில் மிக மிக மலிவான விலையில் களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது. அந்தவகையில், இது ரூ. 1 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

இந்த பைக்கை காட்சிப்படுத்தி 24 மாதங்களுக்கும் அதிகமாகிவிட்டநிலையில், நடப்பாண்டில் இந்த பைக் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் பரவிய வண்ணம் இருக்கின்றது. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாவில்லை.

ஒரே சார்ஜில் 150 கிமீ பயணிக்கலாம்... விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..? சிறப்பு தகவல்!

இருப்பினும், தற்போது இந்திய மின்சார வாகனச் சந்தை சூடுபிடித்து வருவதன் காரணமாக, ஒகினவா இந்த ஒகி 100 மின்சார பைக்கை விரைவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, January 5, 2020, 16:04 [IST]
English summary
Okinawa To Launch Most Affordable Oki 100. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+