எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா... தமிழகத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் இறங்குதற்காக புதிய தொழிற்சாலையை அமைக்கும் முயற்சிகளில் ஓலா டாக்சி நிறுவனம் இறங்கி உள்ளதாக பரபரப்பு செய்தி வெளியாகி இருக்கிறது.

 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா... தமிழகத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா?

இந்திய பெருநகரங்களின் போக்குவரத்து சேவையில் ஓலா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்மார்ட்ஃபோன் அப்ளிகேஷன் மூலமாக எளிதாகவும், மிக சரியான கட்டணத்தில் விரைவான டாக்சி சேவையை வழங்கி வருவதால், வலுவான வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை விரிவாக்கும் திட்டத்தில் ஓலா இறங்கி இருக்கிறது.

 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா... தமிழகத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா?

இதன்படி, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் களமிறங்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. இதற்காக, புதிய தொழிற்சாலையை அமைப்பதற்காக பல்வேறு மாநில அரசுகளுடன் ஓலா டாக்சி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா... தமிழகத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா?

ஆண்டுக்கு 2 மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறனுடன் இந்த புதிய ஆலையை அமைப்பதற்கு ஓலா திட்டமிட்டுள்ளது. இதற்காக, 100 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சிறப்பு சலுகைகளை பெறுவது தொடர்பாக நான்கு மாநில அரசுகளுடன் ஓலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.

 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா... தமிழகத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா?

எனினும், இந்த பட்டியலில் தமிழகமும் உள்ளதா என்பது குறித்த தகவல்கள் இல்லை. தமிழகத்தில் வாகன உற்பத்திக்கு சாதகமான நிலை உள்ளதால், பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா... தமிழகத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா?

குஜராத் மாநிலம் ஹோண்டா இருசக்கர வாகன ஆலையில் ஆண்டுக்கு 1.2 மில்லியன் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளது. இதுதான் தற்போதைக்கு இந்தியாவில் உள்ள அதிக உற்பத்தி திறன் கொண்ட இருசக்கர வாகன ஆலையாக உள்ளது. ஆனால், ஓலா இதனை விட அதிக உற்பத்தி திறன் கொண்ட ஆலையை அமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா... தமிழகத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா?

கடந்த ஆண்டு நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எடர்கோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தை ஓலா கையகப்படுத்தியது. அந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.

 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா... தமிழகத்திற்கு ஜாக்பாட் அடிக்குமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, தனது பிராண்டிற்கு இருக்கும் பிரபலத்தை வைத்து எளிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வலுவான வர்த்தகத்தை பெற முடியும் என்று ஓலா கருதுகிறது. மாதச் சந்தா, தனது டாக்சி நிறுவனம் மூலமாக வாடகை பயன்பாடு உள்ளிட்ட திட்டங்கள் மூலமாகவும் ஓலா தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வர்த்தகம் செய்யும் வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
Ola is planning to enter electric scooter production in India with the largest manufacturing facility.
Story first published: Wednesday, November 4, 2020, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X