ப்யூர் இவி பிராண்டில் புதியதொரு அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! விரைவில் விற்பனைக்கு வருகிறது

ப்யூர் இவி பிராண்ட் புதிய ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக அறிவுத்துள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ப்யூர் இவி பிராண்டில் புதியதொரு அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! விரைவில் விற்பனைக்கு வருகிறது

கொரோனா வைரஸினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகளுக்கு பிறகு இயல்பு வாழ்க்கை மக்கள் மத்தியில் திரும்பி வருகிறது. இருப்பினும் தனியார் போக்குவரத்தையே மக்கள் தற்போதைய காலக்கட்டத்தில் விரும்புகின்றனர்.

ப்யூர் இவி பிராண்டில் புதியதொரு அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! விரைவில் விற்பனைக்கு வருகிறது

இதனை அப்படியே எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் கொண்டுவர புதிய நிறுவனங்களும், ஏற்கனவே தயாரிப்புகளை விற்பனை செய்துவரும் நிறுவனங்களும் புதியது புதியதாக எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

ப்யூர் இவி பிராண்டில் புதியதொரு அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! விரைவில் விற்பனைக்கு வருகிறது

இந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த ப்யூர் இவி பிராண்ட் எண்ட்ரன்ஸ் நியோ என்ற பெயரில் புதிய அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. மேலும் இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.75,999-ல் நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளது.

ப்யூர் இவி பிராண்டில் புதியதொரு அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! விரைவில் விற்பனைக்கு வருகிறது

நிறுவனத்தின் இந்த அறிக்கையின்படி எண்ட்ரன்ஸ் நியோ இவி ஸ்கூட்டர் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டி உருவாகி வருவதால் எண்ட்ரன்ஸ் இவி ஸ்கூட்டரை விரைவான பிக்அப் மற்றும் நீண்ட ரேஞ்ச் உடன் ப்யூர் இவி நிறுவனம் விற்பனை கொண்டுவரவுள்ளது.

ப்யூர் இவி பிராண்டில் புதியதொரு அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! விரைவில் விற்பனைக்கு வருகிறது

0-வில் இருந்து 40kmph என்ற வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படவுள்ள 2,500 Wh-காப்புரிமை பெற்ற பேட்டரி தொகுப்பின் மூலமாக முழு சார்ஜில் 120 கிமீ வரை (ஈக்கோ மோடில்) ஸ்கூட்டரை இயக்கி செல்ல முடியும்.

ப்யூர் இவி பிராண்டில் புதியதொரு அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! விரைவில் விற்பனைக்கு வருகிறது

மாதத்திற்கு 2000 இவி ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திறன் கொண்ட 70,000 சதுர மீட்டர் தொழிற்சாலையை கொண்டுள்ள ப்யூர் இவி நிறுவனத்தால் மாதத்திற்கு 10 மெகாவாட்ஸ்.நேரம் வரையில் பேட்டரி தொகுப்புகளை தயாரிக்க முடியும். ப்யூர் இவி நிறுவனத்திற்கு தற்சமயம் இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் 100 இடங்களில் டீலர்கள் உள்ளனர்.

ப்யூர் இவி பிராண்டில் புதியதொரு அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!! விரைவில் விற்பனைக்கு வருகிறது

இந்தியா மட்டுமின்றி நேபாளத்திலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இளம் தலையினரை டார்க்கெட் செய்து வெளிவரும் புதிய எண்ட்ரன்ஸ் இவி ஸ்கூட்டரின் பிக்அப் விரைவாகவும், ரேஞ்சை நீண்ட அளவில் கொண்டதாகவும் இருக்கும் என்று ப்யூர் இவி இந்தியா நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ரோகித் வதேரா கூறியுள்ளார்.

Most Read Articles
English summary
Pure EV launches Etrance Neo high-speed electric scooter Price, range, top speed & more!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X