Just In
- 38 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யூட்யூபில் காசு பாக்க பைக்கை கொளுத்திய வட நாட்டு இளைஞர்கள்... திக் திக் வீடியோ...
யுட்யூபில் காசு பாக்க இளைஞர்கள் சிலர் செய்த காரியம் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல ஹாலிவுட் நடிகர் நிகோலஸ் கேஜ் (Nicolas Cage) நடிப்பில் வெளி வந்த படம் 'கோஸ்ட் ரைடர்'. 2007ம் ஆண்டில் திரைக்கு வந்த இது, ஃபேன்டசி கதையம்சத்தைக் கொண்ட ஹாரர் மற்றும் திரில்லர் படமாகும். இப்படத்தில் எரியும் பைக், எரியும் குதிரை மற்றும் எரியும் உடல் என அனிமேஷனில் நிகோலஸ் புகுந்து விளையாடியிருப்பார்.

இதை நிஜ வாழ்க்கையில் நிகழ்த்தும் விதமாக வட மாநில இளைஞர்கள் சிலர் தங்களது விலையுயர்ந்த பைக்கைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இதற்காக, அவர்கள் பஜாஜ் பல்சர் 220 மாடல் பைக்கைப் பயன்படுத்தியுள்ளனர். யுட்யூப்-இல் அதிக பார்வையாளர்களைப் பெறுவதற்கும், சப்ஸ்கிரைபர்களை கவர வேண்டும் என்பதற்காகவும் இந்த விபரீத செயலைச் அவர்கள் செய்திருக்கின்றனர்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் இணைய மோகம் மிக அதிகளவில் உயர்ந்தவாறு காணப்படுகின்றது. குறிப்பாக, இணையதளத்தில் ஃபேமஸாவதற்காகவும், லைக்ஸ்களைப் பெறுவதற்காகவும் அவர்கள் செய்யும் செயல் பலருக்கு அறுவருப்பை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றது. இம்மாதிரியான செயலை இளைஞர்கள் மட்டுமின்றி ஒரு சில வயதானவர்களும் செய்து வருவது வேதனையளிக்கும் வகையில் இருக்கின்றது.

இவர்கள், புகழ் மற்றும் லைக்ஸ்களுக்காக மட்டுமின்றி பணம் சம்பாதிப்பதற்காகவும் முரண்பாடான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்தவகையிலேயே ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பைக்கை தீயிட்டு கொளுத்தி அதை இயக்கி இருக்கின்றனர். இதுகுறித்த வீடியோவை மிஸ்டர் இந்தியன் ஹேக்கர் எனும் யுட்யூப் சேனல் வாயிலாக அவர்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.

இதுபோன்று பாதுகாப்பற்ற மற்றும் விபரீத செயல்களைச் செய்வது சட்டப்படி குற்றமாகும். மேலும், அவர்கள் தீயிட்டு கொளுத்திய பைக்கை வெறும் தண்ணீர் மட்டுமே ஊற்றி அணைப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், அவர்களிடத்தில் முறையான தியணைப்பான் இல்லை என்பதை நம்மால் உணர முடிகின்றது. எனவே, பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் ஆபத்தான செயலைச் செய்திருப்பது மேலும் கண்டனத்திற்கு உரிய செயலாகவே உள்ளது.

இதுமாதிரியான செயல் அவர்களுக்கு மட்டுமின்றி அந்த பகுதியில் இருப்பவர்களுக்கும் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது ஆகும். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பேராபத்து எதுவும் நேரவில்லை. பொதுவாக வாகனங்கள் அனைத்தும் எளிதில் தீப் பிடிக்கக்கூடிய ஓர் பொருளாகவே இருக்கின்றன. இந்த நிலையில், விநோத விளையாட்டாக இளைஞர்கள் பைக்கை தீயிட்டு கொளுத்தி பரிசோதனை செய்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கொரோனா வைரசைத் தடுக்கும் விதமாக கிருமி நாசினியை வாகனத்தில் தெளித்தபோது, அந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதுமாதிரியான சூழலில் தெரிந்தே வாகனத்தின் டயர்களில் தீயிட்டு கொளுத்தி அதை இளைஞர்கள் ஓட்டியிருக்கின்றனர்.

இதற்காக, பைக்கின் இரு வீல்களிலும் துணியை சுற்றி, அதில் பெட்ரோல் ஊற்றி தீ மூட்டியுள்ளனர். பெட்ரோல் உயர் எரிதிறன் கொண்ட பொருள் என்பதால் அது உடனடியாக பைக்கின் உயரத்தை மிஞ்சும் வகையில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக அதில் அமர்ந்திருந்த இளைஞர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. தீ எரிந்தவாறே அவர்கள் சுமார் 10 முதல் 20 மீட்டர் வரை பைக்கை ஓட்டியிருக்கின்றனர்.

இதுவும் ஓர் வகையான சாதனைதான். இருப்பினும் முட்டாள்தனமான சாதனை என்கின்றனர், வீடியோவைப் பார்த்து பதறிய பார்வையாளர்கள். பொதுவாக திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் முறையான தீயில் கருகாத ஆடை மற்றும் உபகரணங்களை அணிந்தவாறே நடிப்பர். அது அவர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கும். ஆனால், இளைஞர்கள் அதுமாதிரியான ஆடைகளைக் கூட பயன்படுத்தவில்லை.

வழக்கமான ஜீன்ஸ் மற்றும் டி சர்ட்டுகளை மட்டுமே அவர்கள் அணிந்திருக்கின்றனர். மேலும், ஒருவர் ஷூவையும், மற்றொருவர் சாதாரண காலணியையும் அணிந்திருக்கின்றார். இது வெறும் காலில் தீயில் நடப்பதைப் போன்றதாகும். நல்ல வேலையாக அந்த இளைஞருக்கும் எந்த தீக் காயமும் ஏற்படவில்லை.

இதுபோன்ற விபரீத ஸ்டண்டுகளை மேற்கொண்டதற்காக விதிமீறல் வாதிகள் பலர் போலீஸாரிடம் சிக்கியிருக்கின்றனர். இதேபோன்று மிகவும் ஆபத்தான செயலைச் செய்த இந்த இளைஞர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இளைஞர்களுக்கு யுட்யூப் மீது அதிகரித்துள்ள மோகமே இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
யுட்யூப் மூலம் வருமானம் வருவதைக் கருத்தில் கொண்டு பலர் இதுமாதிரியான விநோத மற்றும் மிகவும் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான தண்டனையையும் சட்டத்திடம் இருந்து பெற்றுவிடுகின்றனர். இதுமாதிரியான ஆபத்தான ஸ்டண்டுகள் ஓர் நபரின் வாழ்க்கையையே ஒரு நிமிடத்தில் தொலைக்கச் செய்துவிடும். ஆனால், பலர் இதை மறந்து பணம் மற்றும் புகழுக்காக மிகவும் ஆபத்தான செயல்களைக்கூட அசால்டாக செய்துவிடுகின்றனர்.