யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சம்பவமா..?

ராயல் என்பீல்டு நிறுவனம், 2020ம் ஆண்டில் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்ற வகையிலான ஓர் தகவலை வெளியிட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சோகமா..?

இந்திய இருசக்கர வாகன சந்தையில் புகழ்பெற்று விளங்கும் ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் ரசிகர்களுக்கு 2020ம் ஆண்டிற்கான பரிசை வழங்குவதைப் போன்று அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதுவெளியிட்டுள்ள தகவலின்படி, புல்லட் 500, தண்டர்பேர்டு 500 மற்றும் தண்டர்பேர்டு 500எக்ஸ் உள்ளிட்ட மாடல்களை விற்பனையில் இருந்து விளக்கிக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சோகமா..?

இதைத்தொடர்ந்து, அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இருந்தும் குறிப்பிட்ட இந்த மாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து டீலர்களிடம் விசாரித்தபோது, கிளாசிக் 500 மாடலையும் உற்பத்தியாளர் சந்தையில் இருந்து விலக்கிக் கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.

யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சோகமா..?

இருப்பினும், தற்போது ஸ்டாக்கில் உள்ள புல்லட் 500 மற்றும் தண்டர்பேர்டு 500 பைக்குகளை அதன் டிமாண்டிற்கு ஏற்ப விற்பனைச் செய்யவும் ராயல் என்பீல்டு திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், ராயல் என்பீல்டின் 500சிசி ரக பைக் பிரியர்களுக்கு கணிசமான (ஸ்டாக் உள்ளவரை) காலம் வரை கிடைக்கும் என்பது தெரியவருகின்றது.

யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சோகமா..?

ராயல் என்பீல்டின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அண்மைக் காலங்களாக 500 சிசி பைக்குகள் மீதிருந்த மோகம் குறைந்து வருவதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சோகமா..?

தொடர்ந்து, இதன் தாக்கம் ராயல் என்பீல்டின் 500 சிசி பைக்குகள் மீதும் நிலவ ஆரம்பித்தது. இதனால், விற்பனை விகிதம் குறைந்த மாடல்களாக காட்சியளிக்கும் மேற்குறிப்பிட்ட மடால்களை சந்தையில் இருந்து நீக்க ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சோகமா..?

அதேசமயம், ராயல் என்பீல்டின் புது முகங்களான இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் 650 ஆகியவற்றின் பக்கம் மக்களை திருப்பும் நோக்கிலும் அந்நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கருத்துகள் வ எழும்பிய வண்ணம் இருக்கின்றது.

இது, 500 சிசி மாடல்களைக் காட்டிலும் ரூ. 40 ஆயிரம் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சோகமா..?

ராயல் என்பீல்டின் நடவடிக்கையால் 350 சிசி மற்றும் 650 சிசி இடையே பைக்குகளிடையே ஓர் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை நிரப்புகின்ற வகையில் புதிய தலைமுறை கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டின் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், ராயல் என்பீல்டு மிக விரைவில் 2020ம் ஆண்டிற்கான ஹிமாலயன் பைக்கை அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சோகமா..?

புதிய மாசு உமிழ்வு பிஎஸ்-6 தரத்திற்கேற்ப தயராகியுள்ள இந்த பைக் கணிசமான புத்தம் புதிய அப்டேட்டுகளைப் பெற்றிருக்கின்றது. அந்தவகையில், அதன் மெக்கானிசம் மற்றும் பெயிண்டிங் ஸ்கீம் உள்ளிட்டவற்றில் அப்கிரேஷனை அது பெற்றுள்ளது.

அதேசமயம், பிஎஸ்-6 தரத்தில் ஹிமாலயன் மட்டுமின்றி அதன் அனைத்து தயாரிப்புகளையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது ராயல் என்பீல்டு.

யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சோகமா..?

முன்னதாக, கிளாசிக் 350 மாடலை பிஎஸ்-6 தரத்தில் அறிமுகம் செய்திருந்தது. இது, பழைய பிஎஸ்-4 மாடல் பைக்கைக் காட்டிலும் ரூ. 11 ஆயிரம் விலையுயர்வைப் பெற்று ரூ. 1.65 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

மேலும், இந்த பைக்கில் வாடிக்கையாளர்களின் நீண்ட எதிர்பார்ப்பாக இருந்த அலாய் வீல் ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கின்றது.

யாரும் எதிர்பார்க்காத தகவலை வெளியிட்ட ராயல் என்பீல்டு... 2020 ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சோகமா..?

அத்துடன், புதிய பெயிண்டிங் ஸ்கீம் மற்றும் ஒரு சில அப்டேட்டுகள் அந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, பெண்கள் மற்றும் மெல்லிய தேகமுடைய இளைஞர்களைக் கவர்கின்ற வகையில் மலிவு விலை பைக்கை தயாரிக்கும் பணியிலும் ராயல் எண்பீல்டு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
RE Discontinued Bullet 500 & Thunderbird 500 In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X