சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

அனைத்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் வடக்கை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் வேலையில் பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் சென்னையில் விற்பனையைத் தொடங்க இருக்கின்றது. இதுமட்டுமின்றி, புது முக அறிமுகத்துடன் சலுகை மழையையும் அது பொழிய இருக்கின்றது.

சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

குர்கானை மையமாகக் கொண்டு இயங்கும் ஆரம்பநிலை மின் வாகன உற்பத்தி நிறுவனமான ரிவோல்ட் இன்டெல்லிகார்ப், தற்போது இந்திய மின்சார வாகனச் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஆனால், இந்நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விற்பனைக்கு கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய குறைபாடாக உள்ளது.

சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

தற்போது, புனே மற்றும் டெல்லி ஆகிய இரு நகரங்களில் மட்டுமே ரிவோல்ட் நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இது மிகக்குறைவான எல்லையைக் கொண்ட சந்தையாகும். ஆகையால், இதனை விரிவாக்கம் செய்வதற்கான பணியில் ரிவோல்ட் நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது. அதன்படி, இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் விற்பனையைத் தொடங்க ரிவோல்ட் திட்டமிட்டுள்ளது.

சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

இதுகுறித்து முன்னதாக வீடியோ ஒன்றைக்கூட அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், ஃபூட் மற்றும் கால் டாக்ஸி ஆகியவற்றை புக்கிங் செய்தால், வாகனம் எங்கே இருக்கின்றது என்பதை ஆப் மூலமாக லைவ் லைகேஷனில் பகிரப்படும். இதேபோன்ற ஒரு வீடியோவை ரிவோல்ட் நிறுவனமும் வெளியிட்டிருந்தது.

அந்த வீடியோவில் ரிவோல்ட் நிறுவனத்தின் மின்சார பைக் அதன் உற்பத்தி தளமான குர்கானில் இருந்து கிளம்பி தெற்கு பக்கமாக நகர்வதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

ஆகையால், இந்த பைக் சென்னை அல்லது வேறு ஏதேனும் தெற்கு மாநிலத்தில் உள்ள நகரத்தில் புதிதாக விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என நாங்கள் யூகித்து கூறியிருந்தோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லாத காரணத்தால் இவ்வாறு நாங்கள் தகவல் வெளியிட்டிருந்தோம்.

ஆனால், சென்னையே பிராதமானதாக இருந்தது. ஏனென்றால், அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் வட மாநிலங்களில் உள்ள பெருநகரங்களை மையமாகக் கொண்டே களமிறங்கி வருகின்றது.

இதனால், சென்னைப் போன்ற நகரங்களில் மின் வாகனங்களுக்கான சந்தை திறந்தநிலை காணப்பட்டு வருகின்றது. எனவே, சென்னையில் ரிவோல்டின் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

இவ்வாறு, நாம் யூகித்ததைப் போலவே ரிவோல்ட் நிறுவனத்தின் புதிய மின்சார பைக்குகள் விரைவில் சென்னையில் களமிறங்க இருக்கின்றது. சென்னை மட்டுமின்றி ஹைதராபாத், அஹமதாபாத், மும்பை ஆகிய பெருநகரங்களிலும் ரிவோல்ட் நிறுவனத்தின் திறன் வாய்ந்த மின்சார பைக்குகள் களமிறங்க இருப்பது உறுதியாகியிருக்கின்றது. இதில் முதலில் அஹதமாபாத்திலேயே மின்சார பைக்குகள் அறிமுகமாக இருக்கின்றன.

சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

இந்த அறிமுகத்திற்காக பிப்ரவரி 29 தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வருகின்ற மார்ச் 2ம் தேதி ஹைதராபாத்திலும், சென்னையில் மார்ச் 5ம் தேதியும், மும்பையில் மார்ச் மாதத்தின் இறுதிக்குள்ளாகும் ரிவோல்ட் மின்சார பைக்குகள் அறிமுகமாக இருக்கின்றது. இதற்கான பணியில் ரிவோல்ட் நிறுவனம் மிக தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.

சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

இந்தியாவில் தன்னுடைய ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் விதமாக ரிவோல்ட் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது. இது களமிறக்கும் மின்சார பைக்குகள் ஆட்டோ இன்டலிஜன்ஸ் திறன் கொண்ட மின்சார வாகனம் ஆகும்.

தற்போது, இந்நிறுவனத்தின்கீழ் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 ஆகிய இரு மின்சார பைக்குகளே விற்பனைக்கு இருக்கின்றது.

சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

இவ்விரு பைக்குகளின் அறிமுகமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களைக் கவர ரிவோல்ட் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆர்வி 400 மாடல் பைக்கின் பேட்டரிக்கு அளவுகடந்த (8 ஆண்டுகள் அல்லது 1.50 லட்சம் கிமீ) வாரண்டியை வழங்க இருக்கின்றது.

தொடர்ந்து, இலவச பராமரிப்பு 3 ஆண்டுகள் அல்லது 30 கிமீ வழங்கப்பட உள்ளது. மேலும், தயாரிப்பிற்கான வாரண்டியாக 5 ஆண்டுகள் அல்லது 75 கிமீட்டர்கள் வழங்கப்பட இருக்கின்றது.

சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

இதுமட்டுமின்றி, கூடுதல் சிறப்பு சலுகையாக ஓராண்டு நிறுவன வாரண்டியும், 5 ஆண்டுகள் மூன்றாம் நபர் காப்புரிமை வழங்க இருப்பதாக ரிவோல்ட் அறிவித்துள்ளது. இந்த சலுகை ஆர்வி300 மாடலுக்கும் பொருந்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆர்வி 400 பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 150கிமீ தூரம் வரை செல்ல முடியும். இது உச்சபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது.

சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...

இவ்விரு பைக்குகளின் பக்கம் மக்களைக் கவரும் வேண்டும் என்பதற்காக ரிவோல்ட் நிறுவனம் முன்னதாக மாதச் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. அதன்படி, ரிவோல்ட் ஆர்வி 300 மாடல் மின்சார பைக்கிற்கு மாதச் சந்தாவாக ரூ. 2,999ம், ஆர்வி 400 மாடலுக்கு ரூ. 3,999 என்ற தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2020, 16:43 [IST]
English summary
Revolt Plans To Add Four More New Cities In India Includes Chennai. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+