மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கையால் அதன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

இந்தியாவின் முக்கியமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ராயல் என்ஃபீல்டு , அதன் பிரபல மாடலின் விலையை கணிசமாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரசால் நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் தற்போதே அனைத்து துறைகளும் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் பிற நிறுவனங்களிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் விதமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அதன் அதிகம் விற்பனையாகும் மாடலான கிளாசிக் 350 பைக் வரிசையில் விற்பனைக்கு கிடைக்கும் அனைத்து தேர்வுகளின் விலையையும் உயர்த்தியுள்ளது.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

அதாவது முன்னதாக ரூ. 1,59,851 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த கிளாசிக் 350 பைக்கின் விலையை ரூ. 1,61,668 என உயர்த்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை அதன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் ஆகும். இதில் நிறம் வாரியாகவும் கிளாசிக் 350 பைக் கிடைக்கிறது. அவ்வாறு, எந்தெந்த பைக்கின் என்ன விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பதனை தெளிவாக கீழே பார்க்கலாம்.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

கிளாசிக் 350 பைக்கின் ஒற்றை சேனல் ஏபிஎஸ் வசதிக் கொண்ட தேர்வின் விலை பட்டியல்:

கிளாசிக் 350 ஒற்றை-சேனல் ஏபிஎஸ், செஸ்ட்நட் சிவப்பு நிற தேர்வின் புதிய விலை ரூ. 1,61,688 ஆகும். பழைய விலை ரூ. 1,59,851.

கிளாசிக் 350 ஒற்றை-சேனல் ஏபிஎஸ், சாம்பல் நிற தேர்வின் புதிய விலை : ரூ .1,61,688 ஆகும். பழைய விலை ரூ. 1,59,851.

கிளாசிக் 350 ஒற்றை-சேனல் ஏபிஎஸ், மெர்குரி சில்வர் நிற தேர்வின் புதிய விலை ரூ .1,61,688 ஆகும். பழைய விலை ரூ. 1,59,851.

கிளாசிக் 350 ஒற்றை-சேனல் ஏபிஎஸ், ரெட்டிச் ரெட் நிற தேர்வின் புதிய விலை ரூ .1,61,688 ஆகும். பழைய விலை ரூ. 1,59,851.

கிளாசிக் 350 ஒற்றை-சேனல் ஏபிஎஸ், தூய கருப்பு நிற தேர்வின் புதிய விலை ரூ .1,61,688 ஆகும். பழைய விலை ரூ. 1,59,851.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

கிளாசிக் 350 பைக்கின் இரு சேனல் ஏபிஎஸ் வசதிக் கொண்ட தேர்வின் விலை பட்டியல்:

கிளாசிக் 350 இரட்டை சேனல் ஏபிஎஸ், கருப்பு நிற தேர்வின் புதிய விலை ரூ. 1,69,617 ஆகும். பழைய விலை ரூ. 1,67,779.

கிளாசிக் 350 டூயல்-சேனல் ஏபிஎஸ், அலாய்ஸுடன் கன்மெட்டல் கிரே நிற தேர்வின் புதிய விலை ரூ .1,83,164 ஆகும். பழைய விலை ரூ. 1,81,327.

கிளாசிக் 350 டூயல்-சேனல் ஏபிஎஸ், ஸ்போக்குகளுடன் கன்மெட்டல் கிரே நிற தேர்வின் புதிய விலை ரூ .1,71,453 ஆகும். பழைய விலை ரூ. 1,69,616.

கிளாசிக் 350 இரட்டை-சேனல் ஏபிஎஸ், வான்வெளி நீலம் / புயல் மணல் நிற தேர்வின் புதிய விலை ரூ .1,79,809 ஆகும். பழைய விலை ரூ. 1,77,971.

கிளாசிக் 350 டூயல்-சேனல் ஏபிஎஸ், ஸ்டீல்த் பிளாக் நிற தேர்வின் புதிய விலை ரூ 1,86,319 ஆகும். பழைய விலை ரூ. 1,84,481.

கிளாசிக் 350 இரட்டை சேனல் ஏபிஎஸ், குரோம் பிளாக் நிற தேர்வின் புதிய விலை ரூ 1,86,319 ஆகும். பழைய விலை ரூ. 1,84,481.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

மேலே நாம் பார்த்ததுதான் கிளாசிக் 350 வரிசையில் இருக்கும் பைக்குகளுக்கு செய்யப்பட்ட புதிய விலையாகும். விலை உயர்விற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேசமயம், எந்த புதிய மாற்றமோ அல்லது புதிய அப்கிரேஷனும் கூட வழங்கப்படவில்லை. எனவே, விலையுயர்விற்கான காரணம் என்னவென்பது புரியாத புதிராக மாறியிருக்கின்றது.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கில் 346 சிசி திறனை வெளியேற்றும் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, ஏர் கூல்டு எஞ்ஜின் ஆகும். இது அதிகபட்சமாக 19.1 பிஎச்பி பவரை 5,250 ஆர்பிஎம்மிலும், 28 என்எம் டார்க்கை 4,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இந்த வசதிகளைக் கொண்ட பைக்கின் விலையைதான் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உயர்த்தியிருக்கின்றது. இந்த நடவடிக்கையால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த ரசிகர்கள் சோகத்தில் உறைந்திருக்கின்றனர்.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

தனது ரசிகர்களை புதிய விலையுயர்வால் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் ராயல் என்ஃபீல்டு மறுபக்கம், புதிய தயாரிப்பின் மூலம் தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்ட திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், விரைவில் களமிறக்கும் வகையில் மீட்டியோர் எனும் பைக்கை அது தயார்படுத்தி வருகின்றது.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

ராயல் என்ஃபீல்டு தயார்படுத்தி வரும் இந்த பைக் ஓர் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளாகும். இதன்காரணத்தினால்தான் இந்திய இளைஞர்கள் பலர் இப்பைக்கின் வரவை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேநேரத்தில் இந்த எதிர்பார்ப்பை எகிரச் செய்கின்ற வகையில் அவ்வப்போது இப்பைக் பற்றிய தகவல் இணையத்தில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றது.

மாறுபட்ட யுக்தியை கையாளும் ராயல் என்ஃபீல்டு... இதனால சோகம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குதான்...

அந்தவகையில், சமீபத்தில் புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கில் இடம்பெற இருக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றிய தகவல் வெளியாகியது. அதாவது, இந்த பைக்கில் 349 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இடம்பெறவிருப்பதாகவும், அது அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் என்ற பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350, Bullet 350 Prices Hiked. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X