இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

யாரும் பார்த்திராத தோற்றத்தில் 2012 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

ஆண், பெண் என இருபாலரின் மனங்களையும் கவர்ந்து வரும் வாகனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் இருக்கின்றன. அதிலும், இந்நிறுவனத்தின் கிளாசிக் ரக பைக்குகளுக்கு சற்றே கூடுதல் வரவேற்பு கிடைத்து வருகின்றது.

அந்தவகையில், கிளாசிக் 350 மீது தீராத காதல் கொண்ட ஒரு சிலர் அதன் உருவத்தை மாற்றி பயன்படுத்துவதையும் நம்மால் காண முடிகின்றது.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

அம்மாதிரியான ஓர் சம்பவத்தைதான் தற்போது நாம் இந்த பதிவில் காணவிருக்கின்றோம். ஆம், நம் இந்திய இளைஞர்களின் ஃபேவரிட் பைக்குகளில் ஒன்றாக காட்சியளிக்கும் ராயல் என்பீல்டு 350 பைக்கை இளைஞர் ஒருவர் இதுவரை இந்திய இருசக்கர வாகன உலகம் கண்டிராத வகையிலான ரெட்ரோ ஸ்டைலுக்கு அப்கிரேட் செய்துள்ளார்.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

இதற்காக, மஹாராஷ்டிரா மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஜேஇடிஐ கஸ்டம்ஸ் (JEDI Customs) என்ற நிறுவனத்தின் உதவியை அவர் நாடியிருக்கின்றனர். இந்நிறுவனம்தான் யாரும் பார்த்திராத வகையிலான ஓர் தோற்றத்தை கிளாசிக் 350 பைக்கிற்கு கொடுத்திருக்கின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ரெட்ரோ க்ரூஸர் ஸ்டைலை அந்த பைக்கிற்கு அது வழங்கியிருக்கின்றது.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

இந்த உரு மாற்றத்திற்காக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் பல இழப்புகளைச் சந்தித்துள்ளது. அதசமயம், அந்த இழப்புகளைக் கூடுதல் கவர்ச்சியுடன் நிவர்த்திச் செய்கின்ற வகையிலான அணிகலன்களையும் அது பெற்றிருக்கின்றது.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

அந்தவகையில், அது உருமாற்றத்திற்காக பெற்ற அம்சங்களில் அதிக கவனத்தை ஈர்க்கும் வகையில் இருப்பது மேட் பினிஷிங் மரூன் நிறமே இருக்கின்றது. இந்த நிறத்தைதான் பைக்கின் அனைத்து பாகங்களுக்கும் கஸ்டம்ஸ் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

இதேபோன்று, ரெட்ரோ க்ரூஸர் தோற்றத்திற்கேற்ப பைக்கின் முகப்பு, பக்கவாட்டு மற்றும் பின்பகுதி உள்ளிட்டவையும் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. இதன்படி முன்னதாக முகப்பு பகுதியில் என்ன மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை பின்வருமாறு காணலாம்.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

ஹெட்லைட், ஹெட்லைட்டிற்கு கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், மின் விளக்கை பாதுகாக்கும் விதமாக க்ரில் போன்ற அமைப்பு பொருத்தப்பட்டிருக்கின்றது.

இதேபோன்று, ப்யூவல் டேங்கிற்கும் லேசான மாற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ப்யூவல் டேங்க் மீது நிறுவப்பட்டிருக்கும் ராயல்என்பீல்டு சின்னம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 'மேட் லைக் கன்' என்ற சின்னம் அங்கு பொருத்தப்பட்டிருக்கின்றது.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

இவ்வாறு, சிறு சிறு விஷயங்களுக்கும்கூட அதிக கவனம் செலுத்தப்பட்டு ஒவ்வொன்றும் தனித்துமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு, இருக்கை அமைப்பு முதல் பாடியின் தோற்றம் வரை அனைத்திற்கும் லேசான மாற்றங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

இதில், இருக்கை மற்றும் பைக்கின் பின் அமைப்பிற்கு வழங்கப்பட்ட உரு மாற்றத்தினாலயே இது ரெட்ரோ க்ரூஸர் பைக்காக மாறியிருக்கின்றது.

அதாவது, இரு இருக்கை அமைப்பு நீக்கப்பட்டு ஒற்றை இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பின்னிருக்கைக்கு பதிலாக கேரியர் போன்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கின்றது.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

அது, லக்கேஜ் மற்றும் சரக்கு போன்றவற்றை எடுத்துச் செல்ல உதவும். இத்துடன், ஜேஇடிஐ நிறுவனத்தின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட ரைப்ட் பாடி ஃபெண்டர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது கூடுதல் கவர்ச்சியுடைய ரெட்ரோ ஸ்டைல் பைக்காக அதனை மாற்றியிருக்கின்றது.

இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்திற்கு உருமாறிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350... வாவ் இட்ஸ் அமேசிங்!

இதுபோன்ற மாற்றங்கள் எல்லாம் உருவம் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றை மாற்றியமைக்கும் வகையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகையால், எஞ்ஜினில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, இந்த பைக்கில் 346சிசி திறனுடைய சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 19.8 எச்பி மற்றும் 28 என்எம் டார்க்கை வெளிப்படுத்த உதவும். இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும்.

Most Read Articles
English summary
Royal Enfield Classic 350 Converted Like Retro Cruiser. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X