ராயல் என்பீல்டு ராயல் என்பீல்டுதான்... விற்பனையில் கெத்து காட்டும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்...

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு ராயல் என்பீல்டுதான்... விற்பனையில் கெத்து காட்டும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்...

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு நவம்பர் மாதம் 59,084 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 58,292 ஆக மட்டுமே இருந்தது. இது 1.4 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். இந்தியாவில் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் கடந்த நவம்பர் மாதம் ராயல் என்பீல்டு 5வது இடத்தை பிடித்துள்ளது.

ராயல் என்பீல்டு ராயல் என்பீல்டுதான்... விற்பனையில் கெத்து காட்டும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்...

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த விற்பனை வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அதிகம் விற்பனையாகும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிளாக இருக்கும் கிளாசிக் 350 விற்பனையில் பதிவு செய்திருக்கும் வளர்ச்சியும், புதுவரான மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளுக்கு கிடைத்திருக்கும் வரவேற்புமே அந்த இரண்டு காரணங்கள்.

ராயல் என்பீல்டு ராயல் என்பீல்டுதான்... விற்பனையில் கெத்து காட்டும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்...

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு நவம்பர் மாதம் 39,391 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 35,951 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பதிவு செய்துள்ளது.

ராயல் என்பீல்டு ராயல் என்பீல்டுதான்... விற்பனையில் கெத்து காட்டும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்...

இதுதவிர தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த மீட்டியோர் 350 பைக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 விற்பனை செய்யப்படுகிறது.

ராயல் என்பீல்டு ராயல் என்பீல்டுதான்... விற்பனையில் கெத்து காட்டும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்...

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் மொத்தம் 7,031 மீட்டியோர் 350 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளுடன் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போட்டியிட்டு வருகிறது. ஆனால் ராயல் என்பீல்டின் 2 பைக்குகளுடன் ஒப்பிடுகையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கின் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

ராயல் என்பீல்டு ராயல் என்பீல்டுதான்... விற்பனையில் கெத்து காட்டும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்...

ஹோண்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 4,067 ஹைனெஸ் சிபி350 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்த பைக் ஹோண்டாவின் பிரீமியம் பிக்விங் டீலர்ஷிப்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்பதை எல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும்போது இது ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கைதான் என்பதை மறுக்க முடியாது.

ராயல் என்பீல்டு ராயல் என்பீல்டுதான்... விற்பனையில் கெத்து காட்டும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்...

ஆனால் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளுடன் ஒப்பிடும்போது இதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவு. இதற்கிடையே ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை கிளாசிக் 350 அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு ராயல் என்பீல்டுதான்... விற்பனையில் கெத்து காட்டும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்...

புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கிற்கும், மீட்டியோர் 350 பைக்கிற்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி மீட்டியோர் 350 பைக்கின் இன்ஜின்தான் புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பைக் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 29, 2020, 15:20 [IST]
English summary
Royal Enfield Classic 350 Sales Increased By 10 Per cent In November 2020 - Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+