முடிந்தது ராயல் என்பீல்டு பிஎஸ்4 பைக்குகளின் அத்தியாயம்.. இனி வெறலெவல் பைக்குகளுக்கு மட்டுமே இடம்!
ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் பிஎஸ்-4 தர வாகனங்களின் அத்தியாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் சுற்றுப்புற சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய பிஎஸ்-6 தர உமிழ்வு விதி அமலுக்கு வருவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள்கூட முழுமையாக இல்லை. ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் விறுவிறுப்பாக பிஎஸ்-6 தர வாகனங்களை அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.

அதேசமயம், தங்களிடம் விற்பனையாகாமல் ஸ்டாக்கில் இருக்கும் பிஎஸ்-4 வாகனங்களை எப்படியாவது விற்று தீர்த்துவிட வேண்டும் என்ற பணியிலும் அதி-தீவிரம் காட்டி வருகின்றது.
இந்நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் பிஎஸ்-4 வாகனங்களின் அத்தியாத்திற்கு முடிவுகட்டிவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், நாளை (மார்ச் 21) முதல் ராயல் என்பீல்டு நிறுவனம் வெறும் பிஎஸ்-6 வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்யிவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த புதிய உமிழ்வு நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் 11 நாட்கள் இருக்கின்றன. அதாவது, வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி இந்த புதிய உமிழ்வு விதி நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கின்றது.

ஆனால், இத்தனை நாட்கள் இடைவெளி இருக்கின்ற நிலையிலேயே ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் அனைத்து பிஎஸ்-4 ஸ்டாக் வாகனங்களையும் முழுமையாக விற்று தீர்த்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த முயற்சியைக் கண்டு இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் வியந்து நிற்கின்றன.

பல நிறுவனங்கள் இன்னும் பல ஆயிரம் பிஎஸ்-4 வாகனங்களை ஸ்டாக்கில் வைத்திருக்கும்நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் மட்டும் எப்படி விற்று தீர்ந்தன என்ற சந்தேகம் எழும்பிய வண்ணம் இருக்கின்றது.
இதற்கு, ராயல் என்பீல்டு மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.

குறிப்பாக, பிஎஸ்-4 வாகனங்களை முழுமையாக விற்று தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் ராயல் என்பீல்டு நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்க ஆரம்பித்தது. இதன் விளைவாக அதன் அனைத்து ஷோரூம்களிலும் இருந்த பிஎஸ்-4 விற்கப்பட்டுள்ளன.
இதற்கு சலுகை மட்டுமே முக்கிய காரணமில்லை. அந்நிறுவனம் செய்த கணக்கீடு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

அதாவது, மாதம் ஒன்றிற்கு எத்தனை யூனிட்டு பைக்குகள் தன் நிறுவனத்தின்கீழ் விற்பனையாகின்றன என்ற தகவலை வைத்து, ஒவ்வொரு பைக்குகளையும் அது தயாரித்துள்ளது. இதன் விளைவாக அதிகப்படியான பிஎஸ்-4 வாகனங்கள் ஸ்டாக்கில் நிற்காமல் விற்பனையாகியிருக்கின்றன.
ஆகையால், மற்ற எந்தவொரு நிறுவனத்திற்கும் கிடைக்காத மகுடம் ராயல் என்பீல்டிற்கு கிடைப்பதற்கு அது மேற்கொண்ட ஆராய்ச்சி பணிகளும் ஓர் காரணமாக இருக்கின்றது.

அதேசமயம், பல நிறுவனங்கள் தற்போது வரை பிஎஸ்-4 வாகனங்களை விற்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன. குறிப்பாக, பல்வேறு சலுகைகளை அறிவித்தும் புதிய வாகனங்கள் விற்கப்படாத சூழ்நிலையே தற்போது நிலவுகின்றது. இதற்கு இப்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது.

இந்த நிறுவனங்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தைப் போன்று முந்தைய கால விற்பனைத் தரவுகளை ஆராய்ந்து பார்த்து புது வாகனங்களை தயாரித்திருந்தால் இத்தகைய நிலை வந்திருக்காது என வாகனத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக அதிக ஸ்டாக் தற்போது நிலுவையில் இருக்கின்றன. இதில், போதாக்குறைக்கு கொரோனா பேயாட்டத்தின் விளைவாக அனைத்துத்துறையும் அதலபாதாளத்திற்குச் சென்றுக் கொண்டிருக்கின்றன.

ராயல் என்பீல்டின் இந்த நிலைக்காக அந்நிறுவனத்தின் ஊழியர்களைக் கொண்ட பல அணிகள் கடும் உழைப்பைக் கொட்டியிருக்கின்றன. இதன்விளைவாகவே நல்ல பலனைச் சந்தித்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிறுவனம், கடந்த ஜனவரி தொடக்கத்தில் பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமான கிளாசிக் 350 பைக்கை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








