ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்? புதிய தகவல்கள் வெளியானது

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்? புதிய தகவல்கள் வெளியானது

உலகில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாலும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிக தொகையை செலவிட வேண்டி இருப்பதாலும், கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளின் அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்? புதிய தகவல்கள் வெளியானது

இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல. மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வரும் ஆதரவு காரணமாக இந்தியாவில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் அறிமுகமாக தொடங்கியுள்ளன. இந்த வகையில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை எப்போது அறிமுகம் செய்யும்? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்? புதிய தகவல்கள் வெளியானது

இதற்கு தற்போது ஓரளவிற்கு பதில் கிடைத்துள்ளது. இதன்படி பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை சந்தையில் அறிமுகம் செய்வதற்கு இன்னும் 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகலாம் என்பது போல் தெரிகிறது. ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போதுதான் சந்தையை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 டிசைன், பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கு? வீடியோ பாருங்க...

உண்மையில் உலகில் எங்குமே எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இன்னும் வணிக ரீதியில் பெரும் வெற்றியை பெறவில்லை. எனவே எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் தொழில்நுட்பத்தை முதலில் நன்றாக புரிந்து கொள்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் விரும்புகிறது. எனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் சந்தைக்கு வருவதற்கு இன்னும் 3-4 ஆண்டுகள் ஆகலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்? புதிய தகவல்கள் வெளியானது

ஈச்சர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் ஒரு அங்கமாகதான் ராயல் என்பீல்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஈச்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சித்தார்த்தா லால், ராயல் என்பீல்டின் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் குறித்து பேசியுள்ளார்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்? புதிய தகவல்கள் வெளியானது

எலெக்ட்ரிக் பைக் சந்தையில் நுழையும் முதல் நிறுவனமாக ராயல் என்பீல்டு இருக்காது என்கிற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக ராயல் என்பீல்டு நிறுவனம் சந்தையை ஆய்வு செய்வதுடன், தொழில்நுட்பத்தை நன்றாக புரிந்து கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார். இதை செய்வதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் குழுவை அமைத்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்? புதிய தகவல்கள் வெளியானது

எலெக்ட்ரிக் பைக்குகளை உருவாக்குவது தொடர்பான பணிகளில் இந்த குழு ஈடுபடும். அதே சமயம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாக, கான்செப்ட் பைக்குகள் மற்றும் புரோட்டோடைப்கள் (மாதிரி) காட்சிப்படுத்தப்படும் என சித்தார்த்தா லால் உறுதியளித்துள்ளார்.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்? புதிய தகவல்கள் வெளியானது

இந்திய சந்தையை பொறுத்தவரை எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இன்னும் பெரிதாக விற்பனைக்கு வரவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், எலெக்ட்ரிக் கார்களும்தான் தற்போதைய நிலையில் ஓரளவிற்கு விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் எண்ணிக்கையும் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் குறைவாகதான் உள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்? புதிய தகவல்கள் வெளியானது

ஆனால் வரும் காலங்களில் இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளன. அப்போது எலெக்ட்ரிக் பைக்குகளும் அதிகமாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் போட்டியாளரான ஜாவாவும் எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஈடி ஆட்டோ செய்தி வெளியிட்டுள்ளது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 2, 2020, 17:16 [IST]
English summary
Royal Enfield Electric Bike Launch Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+