சோதனை ஓட்டத்தில் புதிய இன்டர்செப்டார் 350... செம குஷியில் ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள்!
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 350 மோட்டார்சைக்கிள் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 350சிசி எஞ்சினுடன் புதிய தலைமுறை மாடல்களை களமிறக்கத் துவங்கி இருக்கிறது. அண்மையில் மீட்டியோர் 350 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, புதிய தலைமுறை க்ளாசிக் 350, புல்லட் 350 மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு ரசிகர்களுக்கு அடுத்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

அதாவது, 350சிசி எஞ்சினுடன் இன்டர்செப்டார் மோட்டார்சைக்கிளையும் களமிறக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய 350சிசி மோட்டார்சைக்கிள் ஒன்று சென்னை சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது.

இந்த புதிய மாடலானது இன்டர்செப்டார் 350 என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், 350சிசி மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் மிக மிக வலுவான நிலைக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் செல்லும் என்று தெரிய வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் 650சிசி இன்டர்செப்டார் மோட்டார்சைக்கிள் அதிக வரவேற்பை பெற்று விற்பனையில் கலக்கி வருகிறது. எனவே, இன்டர்செப்டார் 350 மோட்டார்சைக்கிளுக்கும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 350 மோட்டார்சைக்கிளில் எல்இடி விளக்குகள், டிரிப்பர் நேவிகேஷன், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த புதிய மோட்டார்சைக்கிள் சிறப்பான இருக்கை மற்றும் ஹேண்டில்பார் அமைப்புடன் அலுப்பு தட்டாத பயண அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இன்டர்செப்டார் 350 மோட்டார்சைக்கிளில் 349சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 350 மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரூ.2 லட்சத்தையொட்டிய விலையில் வரும் வாய்ப்பு இருக்கிறது.
Source:miles_on_smile


Click it and Unblock the Notifications








