அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டு ட்வின் ரக பைக்குகளின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க...

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த ட்வின் ரக மோட்டார்சைக்கிள்களின் விலையை கணிசமாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அமோகமான வரவேற்பைப் பெற்று வரும் மோட்டார்சைக்கிள்களாக இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகியவை இருக்கின்றன.

அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இவற்றின் விலையையே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கணிசமாக உயர்த்தியிருக்கின்றது. மிக சமீபத்தில்தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் பிரபல கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்கின் விலையை உயர்த்தியிருந்தது. ரூ.1,800 வரை விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது ட்வின் ரக மோட்டார்சைக்கிளின் விலையையும் அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.

அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

விலையை உயர்வைப் பெற்றிருக்கும் இரு மோட்டார்சைக்கிள்களும் பிஎஸ்6 தரத்திலானவையாகும். இந்த தர உயர்வைச் செய்த பின்னர் மிக கடுமையான விலையுயர்வை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ட்வின் பைக்குகளுக்கு விதித்தது. அதாவது, இன்டர்செப்டார் 650 பைக்கிற்கு ரூ. 8 ஆயித்தையும், கான்டினென்டல் ஜிடி650 பைக்கிற்கு ரூ. 9 ஆயிரம் வரையிலும் விலையுயர்வு வழங்கப்பட்டது.

அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் முறை விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது. இம்முறை ரூ. 1,836 முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்டர்செப்டார் 650 பன்முக நிறத் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆரஞ்சு கிரஷ், சில்வர் ஸ்பெக்டர், மார்க் த்ரீ, ரேவிசிங் ரெட், பேக்கர் எக்ஸ்பிரஸ் ஆகிய நிறத்தேர்வுகளில் அது கிடைக்கின்றது. மேலும், இதன் டாப் ஸ்பெக் மாடல் கூடுதலாக கிளிட்டர் மற்றும் டஸ்ட் ஆகிய நிறத் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இதேபோன்று ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி650 பைக்கும் பன்முக நிறத்தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, வெண்டர் ப்ளூ, பிளாக் மேஜிக், ஐஸ் க்யூப் வெள்ளை, டாக்டர் மேஹெம மற்றும் மிஸ்டர் கிளீன் ஆகியவையாகும்.

அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

மேலே பார்த்த இரு மாடல்களின் விலையைதான் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது உயர்த்தியருக்கின்றது. அவற்றை பட்டியலாக கீழே காணலாம்.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650
வேரியண்டுகள் புதிய விலை பழைய விலை விலை வித்தியாசம்
ஆரஞ்சு கிரஷ் ₹2,66,755 ₹2,64,919 ₹1,836
சில்வர் ஸ்பெக்டர் / மார்க் த்ரீ ₹2,66,755 ₹2,64,919 ₹1,836
ரேவிஷிங் ரெட் / பேக்கர் எக்ஸ்பிரஸ் ₹2,74,643 ₹2,72,806 ₹1,837
கிளிட்டர் மற்றும் டஸ்ட் ₹2,87,787 ₹2,85,951 ₹1,836
அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650
வேரிண்ட் புதிய விலை பழைய விலை வித்தியாசம்
வென்ட்டூர ப்ளூ/பிளாக் மேஜிக் ₹2,82,513 ₹2,80,677 ₹1,836
ஐஸ் குயின் வெள்ள / Dr மேஹெம் ₹2,90,401 ₹2,88,564 ₹1,837
மிஸ்டர் க்ளீன் ₹3,03,544 ₹3,01,707 ₹1,837
அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த புதிய விலையுயர்வால் முன்னதாக ரூ. 2.66 லட்சத்திற்கு கிடைத்து வந்த ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் தற்போது ரூ. 2.87 லட்சமாக உர்ந்துள்ளது. இதேபோன்று, கான்டினென்டல் ஜிடி650 பைக் ரூ. 2.82 லட்சத்தில் இருந்து ரூ. 3.03 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த விலையுயர்விற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

அதேசமயம், இரு பைக்குகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரு பைக்குகளிலும் விலை மட்டுமே வித்தியாசத்துடன் காணப்படுகின்றன. எஞ்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. இதில், 649 சிசி ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பாரல்லல் ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் ஆகும்.

அதிரடியாக உயரும் ராயல் என்ஃபீல்டின் பிரபல மோட்டார்சைக்கிள்களின் விலை... எவ்ளோனு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜின் ஸ்லிப்பர் கிளட்ச் அம்சத்துடன் உள்ளது. இந்த பைக்கில் பாதுகாப்பு அம்சமாக ட்யூவல் சேனல் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இது ட்யூவல் சேனல் டிஸ்க் பிரேக்குடன் இணைந்து அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும்.

Most Read Articles

English summary
Royal Enfield Interceptor 650 & Continental GT 650 BS6 Price Hike Announced: New Price List. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X