ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் இண்டர்செப்டர் 650 பைக் ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாடிஃபைடு செய்யப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் பைக் குறித்து விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம், இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 என்ற 650 ட்வின்ஸ் பைக்குகளை கடந்த 2018ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அறிமுகம் முதலே இந்த ட்வின்ஸ் பைக்குகளுக்கு வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

இதனால் இந்த இரு 650சிசி பைக்குகளும் கடந்த 2019-2020 பொருளாதார ஆண்டில் 20,000 யூனிட் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளன. இதுமட்டுமில்லாமல் ஹார்லி-டேவிட்சன் மற்றும் ட்ரையம்ப் போன்ற ப்ரீமியம் தரத்திலான பைக்குகளையும் விற்பனையில் ட்ரைல்ஸ்-இல்லா வடிவமைப்பு மற்றும் மலிவான விலை மதிப்பினால் மிக எளிதாக தோற்கடித்து வருகின்றன.

ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

மேலும் 650 ட்வின்ஸ் மூலமாக ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்திற்கு சில ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வர்த்தகம் கிடைத்துள்ளது. இதற்கிடையில் சில கஸ்டமைஸ்ட் நிறுவனங்கள் இவற்றை மாடிஃபைட் செய்து வெளியிட்டுள்ளதை பார்த்திருப்போம்.

ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

இந்த வகையில் தாய்லாந்தை சேர்ந்த ரேஞ்சர் கோரட் என்ற கஸ்டமைஸ்ட் நிறுவனம் இண்டர்செப்டர் 650 பைக் மாடலை புதுமையான தோற்றத்தில் உருமாற்றம் செய்து வெளியிட்டுள்ளது. எரிபொருள் டேங்க், என்ஜினின் மேற்புறம் மற்றும் எக்ஸாஸ்ட் குழாயின் முனை உள்ளிட்டவை மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ள இந்த பைக்கில் முன்புற மற்றும் பின்புற ஃபெண்டர்களின் நீளம் கஸ்டமைஸ்ட் மாற்றமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

இந்த பைக்கில் மிகவும் கவனிக்கத்தக்க வகையில் இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பை கஸ்டமைஸ்ட் நிறுவனம் பொருத்தியுள்ளது. மஞ்சள் நிறம் ஹெட்லேம்ப் அமைப்பிற்கும் வழங்கப்பட்டுள்ளது. புதியதாக பொருத்தப்பட்டுள்ள இருக்கையும், அளவு குறைக்கப்பட்ட ஃபெண்டர்களும் தான் இந்த மாடிஃபைடு இண்டர்செப்டர் 650 பைக்கிற்கு ஸ்க்ரம்ப்லர் தோற்றத்தை தருகின்றன.

ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

இவற்றுடன் கூடுதலாக ஹேண்டில்பாரும் மாடிஃபைட் செய்யப்பட்டு 23 என்ற ரேஸிங் எண்ணுடன் காட்சியளிக்கிறது. இதன்மூலம் இந்த இண்டர்செப்டர் மாடலை ட்ராக்கர் பயன்பாட்டு வாகனமாகவும் மாற்ற ரேஞ்சர் கோரட் நிறுவனம் முயற்சித்து இருப்பது தெரிய வருகிறது.

ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

துணை விளக்குகள் விபத்தில் இருந்து பாதுகாக்கும் கம்பிகளில் பொருத்தப்பட்டுள்ளது. பைக்கின் பின்புறம், க்ராப் ரெயில்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் இல்லாமல் சிறிய டெயில் லேம்ப் உடன் உள்ளது. டயர்கள், ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு என இரு விதமான பயன்பாட்டிற்கும் பொருந்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

மற்றப்படி பைக்கின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் வழக்கமான 648சிசி, இணையான இரட்டை-சிலிண்டர் என்ஜின் தான் 270-கோண ஃபைரிங் ஆர்டரில் இந்த கஸ்டமைஸ்ட் இண்டர்செப்டர் 650 பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஸ்க்ரம்ப்லர் தோற்றத்திற்கு மாறியுள்ள ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர் 650...

ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் உள்ளிட்டவையும் இந்த பைக்கில் உள்ளது. என்ஜினை பாதுக்காக்கும் வகையில் புதியதாக ப்ளேட்களை இந்த மாடிஃபைட் பைக் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Ranger Korat

Most Read Articles
English summary
This Modified Royal Enfield Interceptor 650 Scrambler Is Mouth Watering
Story first published: Monday, May 4, 2020, 23:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X