ராயல் என்பீல்டின் புதிய ரைடிங் ஜாக்கெட்கள் விற்பனைக்கு வந்தன! ஆரம்ப விலை ரூ.4,950

புதிய மீட்டியோர் 350 பைக்கின் அறிமுக தேதி குறித்த தகவலை தொடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய ரைடிங் ஜாக்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜாக்கெட்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டின் புதிய ரைடிங் ஜாக்கெட்கள் விற்பனைக்கு வந்தன! ஆரம்ப விலை ரூ.4,950

ஐரோப்பிய ஒன்றியத்தால் (CE) சான்றளிக்கப்பட்ட இந்த புதிய ஜாக்கெட்கள் வெவ்வேறு விதமான பயணத்திற்கு ஏற்றதாக அனைத்து விதமான வெப்பநிலையையும் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய ரைடிங் ஜாக்கெட்கள் விற்பனைக்கு வந்தன! ஆரம்ப விலை ரூ.4,950

ராயல் என்பீல்டு தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ள இந்த புதிய ஜாக்கெட்களின் விலைகள் ரூ.4,950-ல் இருந்து ரூ.14,950 வரையில் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சான்றை பெறுவதற்காக இந்த ஜாக்கெட்கள் சிஇ (CE) நிலை 1 மற்றும் சிஇ நிலை 2 மதிப்பீடுகளுடன் டி3ஒ மற்றும் நாக்ஸ் உடல் கவசங்களை கொண்டுள்ளன.

ராயல் என்பீல்டின் புதிய ரைடிங் ஜாக்கெட்கள் விற்பனைக்கு வந்தன! ஆரம்ப விலை ரூ.4,950

இந்தா ரைடிங் ஜாக்கெட்கள் சிராய்ப்பு எதிர்ப்பு, விபத்து பாதுகாப்பு, பணிச்சூழலியல், நீரில் வலிமை, மடிப்பு வலிமை, தீங்கற்ற தன்மை மற்றும் பரிமாண நிலைத்தன்மை உள்ளிட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய ரைடிங் ஜாக்கெட்கள் விற்பனைக்கு வந்தன! ஆரம்ப விலை ரூ.4,950

புதிய ரைடிங் ஜாக்கெட்களின் அறிமுகம் குறித்து ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆடை வர்த்தக பிரிவு முதன்மை அதிகாரி புனீத் சூட் பேசுகையில், "ராயல் என்ஃபீல்டின் ஆடை மற்றும் கியர் வர்த்தகம், ஓட்டுனரின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி அதன்மூலம் ஓட்டுனரின் ஒட்டுமொத்த மோட்டார் சைக்கிள் அனுபவத்தையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

ராயல் என்பீல்டின் புதிய ரைடிங் ஜாக்கெட்கள் விற்பனைக்கு வந்தன! ஆரம்ப விலை ரூ.4,950

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள CE சான்றளிக்கப்பட்ட ரைடிங் ஜாக்கெட்டுகளின் வரம்பு உலகளாவிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் இணங்குகிறது. அதேநேரம் மலிவானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் ரைடர்ஸின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இவை ரைடர்ஸ் மத்தியில் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளன” என கூறினார்.

ராயல் என்பீல்டின் புதிய ரைடிங் ஜாக்கெட்கள் விற்பனைக்கு வந்தன! ஆரம்ப விலை ரூ.4,950

இந்த ஜாக்கெட்களை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும், இந்தியாவில் உள்ள இந்நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம்களிலும் வாங்கலாம். குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் அமேசான் மூலமாகவும் இந்த ஜாக்கெட்களை சொந்தமாக்கி கொள்ளலாம்.

Most Read Articles

English summary
Royal Enfield Launches New Riding Jacket Collection; Prices Start From ₹ 4,950
Story first published: Saturday, October 24, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X