புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை டெலிவிரி பெற்ற முதல் வாடிக்கையாளர்!! இவர்தானாம்
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய அறிமுகமான மீட்டியோர் 350 பைக்கின் டெலிவிரிகள் இந்தியாவில் சில ஷோரூம்களில் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிசெய்யும் வகையில் வெளியாகியுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஊரடங்கிற்கு முன்பு இருந்தே மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருந்த புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் இந்த நவம்பர் மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

முன்பு விற்பனையில் இருந்த தண்டர்பேர்டு 350எக்ஸ் பைக்கிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் கடந்த நவம்பர் 6ஆம் தேதியில் இருந்து துவங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பைக்கை டெலிவிரி செய்யும் பணிகள் சில ஷோரூம்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர் ஒருவருக்கு மீட்டியோ 350 பைக் ஒன்று டெலிவிரி செய்யப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கோபிந்தர் சிங் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அனைத்து டீலர்ஷிப் மையங்களிலும் இந்த பைக் டெலிவிரி செய்யப்பட ஆரம்பிக்கப்பட்டுவிட்டதா என்பது தெரியவில்லை.

மீட்டியோர் 350 பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையில் இதன் ஃபயர்பால் வேரியண்ட் கிடைக்கும். அதுவே ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ.1.81 லட்சம் மற்றும் ரூ.1.90 லட்சம் என்ற அளவில் உள்ளன.

ஆயில் கூலரை வெளியே கொண்ட 349சிசி, ஃப்யுல்-இன்ஜெக்டட், காற்று-ஆயில் கூல்டு என்ஜினை மீட்டியோர் 350 பைக்கில் பொருத்த ராயல் என்பீல்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பயணத்திற்கான வழிகாட்டுதல் வசதியுடன் விற்பனைக்கு வந்துள்ள முதல் ராயல் என்பீல்டு பைக் மீட்டியோர் 350 ஆகும். பைக்கில் வழங்கப்பட்டுள்ள புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ரெட்ரோ தீம்-ல் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெல்லர் வேரியண்டில் கூடுதலாக பின் பயணிக்கான முதுகு தலையணை வழங்கப்படும்.

அதேநேரம் இந்த தலையணை உடன் கூடுதலாக சூப்பர்நோவாவில் விண்ட்ஸ்க்ரீனும் கொடுக்கப்படும். மீட்டியோரை தொடர்ந்து கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 மாடல்களின் புதிய தலைமுறைகளும் விரைவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்தாக வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








