தாய்லாந்திற்கு சென்றது இந்தியாவின் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர்350!! என்னாது இதுதான் விலையா!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் இந்தியாவை தாண்டி தாய்லாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்திற்கு சென்றது இந்தியாவின் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர்350!! என்னாது இதுதான் விலையா!

ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு தாய்லாந்து நாட்டிலும் தொழிற்சாலை உள்ளது. அங்கு தான் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்கள் அசெம்பிள் செய்யப்படவுள்ளன.

தாய்லாந்திற்கு சென்றது இந்தியாவின் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர்350!! என்னாது இதுதான் விலையா!

ராயல் என்பீல்டின் இந்த 350சிசி பைக் இந்தியாவில் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதே மூன்று வேரியண்ட்களில் தான் தாய்லாந்திலும் இதன் விற்பனை தொடரப்படவுள்ளது.

தாய்லாந்திற்கு சென்றது இந்தியாவின் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர்350!! என்னாது இதுதான் விலையா!

தாய்லாந்து நாட்டு சந்தையில் மீட்டியோர் 350 பைக்கின் ஆரம்ப விலை 150,000 தாய் பாட் (இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 3.68 லட்சம்) ஆகவும், அதிகப்பட்ச விலையாக 159,500 தாய் பாட் (ரூ.3.9 லட்சம்) வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திற்கு சென்றது இந்தியாவின் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர்350!! என்னாது இதுதான் விலையா!

பைக்கில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களில் மீட்டியோரின் இந்திய வெர்சனுக்கும் தாய்லாந்து வெர்சனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முற்றிலும் புதிய 350சிசி ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் என்ஜினையும் சேசிஸையும் புதியதாக பெற்றுள்ளது.

தாய்லாந்திற்கு சென்றது இந்தியாவின் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர்350!! என்னாது இதுதான் விலையா!

ராயல் என்பீல்டின் உலகளாவிய குழு, யுகே தொழிற்நுட்ப மையத்தின் குழு மற்றும் இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தின் குழுவினர்களின் தயாரிப்பாக மீட்டியோர் 350 வெளிவந்துள்ளது.

தாய்லாந்திற்கு சென்றது இந்தியாவின் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர்350!! என்னாது இதுதான் விலையா!

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், காற்று & ஆயில் கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-ல் 20.2 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-ல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது.

தாய்லாந்திற்கு சென்றது இந்தியாவின் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர்350!! என்னாது இதுதான் விலையா!

விற்பனையில் இருந்த ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு மாடலுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள மீட்டியோர் 350 பைக்கில் விண்ட்ஷீல்டு, ஹெட்லைட், டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளிட்டவை புத்தம் புதிய டிசைனில் வழங்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது, அசெம்பிள் தொழிற்சாலை அங்கு உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
Royal Enfield Meteor 350 launched in Thailand.
Story first published: Saturday, November 21, 2020, 2:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X