அறிமுகத்திற்கு முன்னதாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோக்கள் வெளியீடு!

ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 என்ற பெயரில் பிராண்டின் புதிய மோட்டார்சைக்கிளை சந்தையில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த 350சிசி பைக்கின் டீசர் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு முன்னதாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோக்கள் வெளியீடு!

புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 இந்தியாவில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோக்களில் பைக்கின் எந்த பாகமும் குறிப்பிட்டு காட்டப்படவில்லை.

வெவ்வேறான சாலைகளில் மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் இயங்குவதுபோல் தான் காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறுபட்ட சாலைகளில் சோதனைகளில் உட்படுத்தப்பட்ட இந்த மோட்டார்சைக்கிள், ராயல் என்பீல்டின் இந்திய சந்தைக்கான புதிய தலைமுறை மாடல்களில் முதலாவதாக வெளிவரவுள்ளதாகும்.

அறிமுகத்திற்கு முன்னதாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோக்கள் வெளியீடு!

முற்றிலும் புதிய சேசிஸில் கொண்டுவரப்படும் மீட்டியோர் 350-ல் பிராண்டின் புதிய என்ஜின் வழங்கப்படவுள்ளது. தண்டர்பேர்டு 350 பைக்கிற்கு மாற்றாக விற்பனைக்கு வரும் இந்த பைக்கில் புதிய 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பழைய புஷ்ராட் டிசைனிற்கு மாற்றாக மாடர்ன் ஒஎச்சி செட்அப் உடன் பொருத்தப்பட்டிருக்கும்.

அறிமுகத்திற்கு முன்னதாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோக்கள் வெளியீடு!

அதிகப்பட்சமாக 20 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மீட்டியோர் 350 பைக் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த மூன்று வேரியண்ட்களிலும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் முக்கிய அம்சமாக டிஜிட்டல் திரை வழங்கப்படவுள்ளன. இந்த வசதி தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளையும் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷனையும் ஓட்டுனர் வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அறிமுகத்திற்கு முன்னதாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோக்கள் வெளியீடு!

இது மட்டுமில்லாமல் முன்பக்கத்தில் கால் பாதம் வைப்பதற்கான பகுதி, பெரிய பெட்ரோல் டேங்க், நீட்டிக்கப்பட்ட ஹேண்டில்பார் மற்றும் தாழ்வான இருக்கையையும் இந்த பைக் பெற்றுவரவுள்ளது. மேற்கூறப்பட்ட இதன் 3 வேரியண்ட்களுக்கும் வெவ்வேறு விதமான நிறத்தேர்வுகள் வழங்கப்படும் என தெரிகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோக்கள் வெளியீடு!

இந்த வண்ண தேர்வுகளே இந்த புதிய பைக்கிற்கு அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 350சிசி பைக் பிரிவை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் முயற்சியாக ராயல் என்பீல்டு நிறுவனம் கொண்டுவரும் இந்த புதிய தயாரிப்பிற்கு ஹோண்டா எச்'னெஸ் சிபி350, பெனெல்லி இம்பெரியல் 400 மற்றும் ஜாவா 300 பைக்குகள் முக்கிய போட்டியாக விளங்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 31, 2020, 12:30 [IST]
English summary
Royal Enfield Meteor 350 Teaser Videos
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+