ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!
ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக, புத்தம் புதிய மீட்டியோர் 350 பைக், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் சூப்பர்நோவா வேரியண்ட்டை, 1,000 கிலோ மீட்டர்களுக்கும் மேல், நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். எங்களது டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை இந்த வீடியோவில் வழங்கியுள்ளோம்.
ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என மீட்டியோர் 350 பைக் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஃபயர்பால் வேரியண்ட்டின் விலை 1.75 லட்ச ரூபாயாகவும், ஸ்டெல்லர் வேரியண்ட்டின் விலை 1.81 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் டாப் வேரியண்ட்டான சூப்பர்நோவாவின் விலை 1.90 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.



Click it and Unblock the Notifications








