ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி650 பைக்குகளின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையை மைய இடமாக கொண்ட ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தற்காலிகமாக இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 பைக்குகளின் டெலிவிரியை நிறுத்தியுள்ளது. இதற்கான காரணத்தை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தம்... இதுதான் காரணமாம்

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் மிக விரைவில் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட பைக்குகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் பிஎஸ்6-க்கு மாற்றப்படும் இந்த 650 ட்வின் பைக்குகளில் எந்த காஸ்மெடிக் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

ஆனால் பைக்கை வாங்குவோரின் விருப்பத்திற்கு ஏற்ப பைக்கில் சில மாற்றங்களை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஏற்படுத்தி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தம்... இதுதான் காரணமாம்

அதேபோல் டிசைன் மற்றும் தோற்றமும் பிஎஸ்4 பைக்கில் இருந்து அப்படியே தான் தொடரவுள்ளன. ஆனால் இந்த புதிய பிஎஸ்6 பைக்கில் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஹாலோஜென் ஹெட்லைட் அமைப்பு மற்றும் செமி-டிஜிட்டல் இண்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தம்... இதுதான் காரணமாம்

இவற்றுடன் இந்த இரு பைக்குகளிலும் கன்வென்ஷ்னல் டெலிஸ்கோப் ஃபோர்க்ஸ் முன்புறத்திலும், ட்யூல்-சைட் சஸ்பென்ஷன் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை முன் சக்கரத்தில் 320 மிமீ டிஸ்க்கும் 240 மிமீ டிஸ்க் பின் சக்கரத்திலும் கவனிக்கின்றன.

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தம்... இதுதான் காரணமாம்

ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பும் நிலையாக வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வரும் இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 பிஎஸ்4 மாடல்களில் ஒரே 648சிசி பேரலல்-ட்வின், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிஎஸ்4 என்ஜின் அதிகப்பட்சமாக 47 பிஎச்பி பவரையும் 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தம்... இதுதான் காரணமாம்

இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்தில் அறிமுகமாகும்போது வெளிப்படுத்தும் ஆற்றலில் சிறிய அளவிலான மாற்றத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் அசிஸ்ட் போன்றவற்றை அப்படியே இந்த பிஎஸ்6 பைக்கிலும் தொடரவுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தம்... இதுதான் காரணமாம்

இண்டர்செப்டர் 650 பைக், கிளிட்டர், சில்வர் ஸ்பெக்டர், பேக்கர் எக்ஸ்பிரஸ், மார்க் த்ரி, ஆரஞ்ச் மற்றும் ஸ்டைலிஷ் சிவப்பு என 6 நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காண்டினென்டல் ஜிடி650 மாடல், ப்ளாக் மேஜிக், டாக்டர்.மேஹெம், ஐஸ் குயின், வென்சுரா நீலம் மற்றும் மிஸ்டர் க்ளீன் என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தம்... இதுதான் காரணமாம்

ராயல் எண்ட்பீல்டின் இந்த ட்வின்ஸ் பைக்குகளின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ2.93 லட்சமாக உள்ளன. பிஎஸ்6 அப்டேட்டால் இவற்றின் விலைகளில் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.12,000 அதிகரிக்கப்படவுள்ளன. இந்த ட்வின்ஸ் பைக்குகள் தான் இதன் பிரிவில் உள்ள மற்ற அனைத்து பைக்குகளையும் விட அதிகமான விற்பனையை ஒவ்வொரு மாதங்களிலும் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தம்... இதுதான் காரணமாம்

இந்த 650 ட்வின்ஸ் பைக்குகளுடன் ஹிமாலயன் 650 மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பைக்கின் அறிமுகம் அடுத்த ஆண்டு இருக்கும் என கூறப்படுகிறது.

ராயல் எண்ட்பீல்டு இண்டர்செப்டர், கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளின் டெலிவிரிகள் தற்காலிகமாக நிறுத்தம்... இதுதான் காரணமாம்

650 ட்வின்ஸ் பைக்குகளின் டெலிவிரியை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும் பிஎஸ்4 பைக்குகள் சில டீலர்ஷிப்களில் ஸ்டாக் உள்ளவரை கிடைக்கவுள்ளது. டெலிவிரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த 650 ட்வின்ஸ் பிஎஸ்6 பைக்குகளின் விற்பனையை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 8, 2020, 14:04 [IST]
English summary
Royal Enfield Interceptor, Continental GT 650 Deliveries Stopped Temporarily: Here's Why
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+