டுகாட்டி பைக்குடன் அதிகாலை நேரங்களில் உலாவரும் பிரபல நடிகர்!! இது அந்த பைக்கிற்கே கெத்தாச்சே!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தனது டுகாட்டி பைக்கில் அமர்ந்துள்ளவாறு சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த கூடுதல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டி பைக்குடன் அதிகாலை நேரங்களில் உலாவரும் பிரபல நடிகர்!! இது அந்த பைக்கிற்கே கெத்தாச்சே!

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி மறுபதிப்பான கபீர் சிங் படத்தில் நடித்து தென்னிந்திய மக்களிடையே பிரபலமானவர், ஷாஹித் கபூர். தற்சமயம் இவரது நடிப்பில் தெலுங்கில் வெற்றிநடை போட்ட ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக் படம் தயாராகி வருகிறது.

டுகாட்டி பைக்குடன் அதிகாலை நேரங்களில் உலாவரும் பிரபல நடிகர்!! இது அந்த பைக்கிற்கே கெத்தாச்சே!

சினிமா மட்டுமின்றி சூப்பர் பைக்குகளை வாங்கி குவிப்பதிலும் ஷாஹித் கபூருக்கு ஆர்வம் அதிகம். அப்படி அவர் வாங்கிய சூப்பர் பைக்குகளில் டுகாட்டியின் ஸ்க்ரம்ப்ளர் 1100 பைக்கும் ஒன்று. இந்த பைக்கில் அமர்ந்தப்படியான புகைப்படங்களைதான் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

டுகாட்டி பைக்குடன் அதிகாலை நேரங்களில் உலாவரும் பிரபல நடிகர்!! இது அந்த பைக்கிற்கே கெத்தாச்சே!

இந்த டுகாட்டி பைக் ஷாஹித் கபூருக்கு மிகவும் நெருக்கமான பைக் போலும். ஏனெனில் சமீபத்தில் கூட அவரது மகள் மிஷாவுடன் இந்த பைக்கில் பயணம் ஒன்றை ஷாஹித் மேற்கொண்டிருந்தார். டுகார்டி ஸ்க்ரம்ப்ளர் 1100 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.11.95 லட்சமாக இந்தியாவில் உள்ளது.

டுகாட்டி பைக்குடன் அதிகாலை நேரங்களில் உலாவரும் பிரபல நடிகர்!! இது அந்த பைக்கிற்கே கெத்தாச்சே!

பார்பதற்கே அட்டகாசமான தோற்றத்தில் இருக்கும் ஸ்க்ரம்ப்ளர் 1100 பைக்கில் மற்ற டுகாட்டி பைக்குகளை போல் அதிகளவில் பேனல்கள் இல்லை. ஸ்க்ரம்ப்ளர் 1100, பனிகளே வி2 என இரண்டு டுகாட்டி பைக்குகள் மட்டுமே தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் உள்ளன. பனிகளே வி2-இன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.16.99 லட்சமாக உள்ளது.

டுகாட்டி பைக்குடன் அதிகாலை நேரங்களில் உலாவரும் பிரபல நடிகர்!! இது அந்த பைக்கிற்கே கெத்தாச்சே!

ப்ரோ மற்றும் ப்ரோ ஸ்போர்ட் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் 1100 பைக்கின் ரூ.11.95 லட்சம் என்ற விலை அதன் ப்ரோ வேரியண்ட் உடையது ஆகும். ப்ரோ ஸ்போர்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை இதனை விடவும் சற்று ரூ.13.74 லட்சம் என்ற அளவில் உள்ளது.

டுகாட்டி பைக்குடன் அதிகாலை நேரங்களில் உலாவரும் பிரபல நடிகர்!! இது அந்த பைக்கிற்கே கெத்தாச்சே!

இந்த இரு வேரியண்ட்களிலும் பொருத்தப்படும் 1,079சிசி, 2-சிலிண்டர், ஏர்-கூல்டு பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 84.48 பிஎச்பி பவரையும், 4750 ஆர்பிஎம்-ல் 88 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 15 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உடன் வழங்கப்படும் இந்த பைக்கில் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டுகாட்டி பைக்குடன் அதிகாலை நேரங்களில் உலாவரும் பிரபல நடிகர்!! இது அந்த பைக்கிற்கே கெத்தாச்சே!

ஷாஹித் கபூர் மட்டுமின்றி பெரும்பான்மையான பாலிவுட் நடிகர்கள் அனைவரும் டுகாட்டி போன்ற சூப்பர் பைக் பிராண்ட்களின் தயாரிப்புகளை விரும்பக்கூடியவர்களாக உள்ளனர். இவ்வளவு ஏன், ஷாஹித் கபூரின் சகோதரர் இஷான் கட்டர் கூட பலமுறை சூப்பர் பைக்குகளில் சாலையில் உலா வந்துள்ளார்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
shahid kapoor seen riding ducati Scrambler 1100. Its Ex-showroom price around Rs.11.95 Lakhs
Story first published: Monday, November 9, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X