Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட்டகாசமான ஸ்டைலில் ஸ்டட்ஸ் நிறுவனத்தின் புதிய தலைக்கவசம் அறிமுகம்... இதோட விலை எவ்வளவு தெரியுமா?
பிரபல ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ் புதிய தண்டர் டி6 எனும் தலைக்கவசத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ் புதிய தலைக்கவசம் ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தண்டர் டி6 டெகோர் எனும் பெயர் கொண்ட புதிய ஹெல்மெட்டையே அது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகளின் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதில் ஹெல்மெட்டின் பங்கு முக்கியமானது. எனவேதான் இந்திய மோட்டார் வாகன சட்டம் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயப்படுத்தியுள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில் ஸ்டட்ஸ் அதன் தேர்வை விரிவுப்படுத்தி வழங்கும் வகையில் புதிய தலைக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தண்டர் டி வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹெல்மெட்டுகள் இந்தியர்களின் மிகவும் பிடித்தமான ஹெல்மெட்டுகளாக இருக்கின்றது. இதில் சிறப்பு வசதிகள் ஏராளம் என்பதானாலயே இந்திய இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் இந்த வரிசை ஹெல்மெட்டுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

புதிய தண்டர் டி6 ஹெல்மெட் 8 புதிய நிற தேர்வில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு, நீலம், கருப்பு நிறத்துடன் கூடிய ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் அது கிடைக்கும். ஆகையால் ஒற்றை மற்றும் இரு நிற தேர்வில் இதனை நம்மால் வாங்க முடியும்.

இத்துடன், மூன்று விதமான அளவு தேர்விலும் இந்த ஹெல்மெட் கிடைக்க இருக்கின்றது. மீடியம் (570மிமீ), பெரியது (580மிமீ) மற்றும் கூடுதல் பெரியது (600 மிமீ) ஆகிய அளவுகளில் இது களமிறக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான ரைடர்களுக்கும் பொருந்துகின்ற வகையில் இதன் அளவு தேர்வுகள் உள்ளன.

பைக்கில் பயணிக்கும்போது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக கூர்மையான தோற்றம் இந்த ஹெல்மெட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, இதில் வழங்கப்பட்டிருக்கும் கண்ணாடி பகல் மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய திறனில் உள்ளது. சிறப்பு அம்சமாக யுவி புரடெக்ஷன் இதற்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இத்துடன், ஹெல்மெட் தலையில் அணிந்துக் கொண்டிருக்கின்ற நேரத்திலும் காற்றோட்டம் சுலபமாக செல்வதற்காக வெண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது காற்றோட்டத்தை உறுதிப்படுத்த உதவும். தொடர்ந்து, எளிதில் கழற்றி மாட்டக்கூடிய வடிவத்தையும் ஸ்டட்ஸ் இதற்கு கொடுத்துள்ளது.

ஹெல்மெட்டின் உட்பகுதியிலும் ஸ்டட்ஸ் அதன் கை வண்ணத்தைக் காட்டியுள்ளது. மிகவும் மிருதுவமான ஸ்பாஞ்சை அது உட்பகுதியில் பயன்படுத்தியிருக்கின்றது. இதனை சுத்தம் செய்வது மிக சுலபம். மழை மற்றும் வெயில் ஆகிய இரு பருவ காலங்களிலும் எந்தவிதமான எரிச்சலான உணர்வையும் இது வழங்காது.

இதுபோன்ற வசதிகளுடனேயே ஸ்டட்ஸ் தண்டர் டி6 ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விலையாக இதற்கு ரூ. 1,795 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் ஸ்டட்ஸ் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.