பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அதன் பிரபல ஸ்கூட்டரின் விலையை திடீரென உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் வழங்கியிருக்கின்றது. இதுகுறித்து கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மற்றும் பிரபல மாடல் ஸ்கூட்டர்களில் ஒன்றாக அக்செஸ் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர்கள் இந்திய இளைஞர்கள் மத்தியில் ஆக்டிவா, டியோ உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு அடுத்தப்படியான இடத்தைப் பிடித்திருக்கின்றது.

இதற்கு இந்த ஸ்கூட்டரின் ஸ்டைல் மற்றும் அதில் காணப்படும் தொழில்நுட்ப அம்சங்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் பயன்பாட்டை மிக அதிகமாக கேரள மாநிலத்தில் நம்மால் பார்க்க முடிகின்றது. அதேசமயம், கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல சந்தை வரவேற்பையே இந்த சுசுகி அக்செஸ் ஸ்கூட்டர் பெற்றிருக்கின்றது.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

இந்நிலையில், சுசுகி நிறுவனம் அக்செஸ் 125 பிஎஸ்6 மாடலின் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. குறிப்பிட்ட அப்கிரேஷன்களின் காரணத்தினால் இந்த விலையுயர்வை சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் மேற்கொண்டிருக்கின்றது.

சுசுகியின் இந்த அதிரடி நடவடிக்கையால் பழைய சுசுகி அக்செஸ் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் புதிய அக்செஸ் 125 பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 2,300 அதிகரித்து காணப்படுகின்றது.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

இந்த திடீர் விலையுயர்வு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இந்திய சந்தையில் இருக்கும் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் 2020ம் ஆண்டை முன்னிட்டு அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வரும் வேலையில், சுசுகியும் அதன் பங்காக தற்போது அக்செஸ் ஸ்கூட்டரின் விலையை உயர்த்தியிருக்கின்றது.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

இதனால், சுசுகி அக்செஸ் ஆரம்பநிலை வேரியண்டான டிரம் மற்றும் சிபிஎஸ் பிரேக்கிங் வசதியுடைய மாடலின் விலை ரூ. 67,100 ஆக உயர்ந்திருக்கின்றது. இதேபோன்று, இதன் உயர்நிலை வேரியண்டாக காட்சியளிக்கும் சிபிஎஸ் மற்றும் டிஸ்க் பிரேக் வசதியுடைய ஸ்பெஷல் எடிசன் அக்செஸ் மாடலின் விலை ரூ. 71,700 ஆக உயர்ந்திருக்கின்றது.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

இதேபோன்று, அக்செஸ் ஸ்கூட்டரில் காணப்படும் அனைத்து வேரியண்டுகளின் விலையும் ரூ. 2,200 முதல் ரூ. 2,300 வரையிலான விலையுயர்வைப் பெற்றிருக்கின்றன.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

அந்த விலையுயர்வை பட்டியலாக கீழே காணலாம்...

வேரியண்டுகள் பழைய விலை புதிய வுலை விலை வித்தியாசம்
Access Drum CBS Rs 64,800 Rs 67,100 Rs 2,300
Access Drum Cast Rs 66,800 Rs 69,100 Rs 2,300
Access Drum Cast Special Edition Rs 68,500 Rs 70,800 Rs 2,300
Access Disc CBS Rs 67,800 Rs 70,000 Rs 2,200
Access Disc CBS Special Edition Rs 69,500 Rs 71,700 Rs 2,200
பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

சுசுகி அக்செஸ் 125 பிஎஸ்6 ஐந்து விதமான நிறத்தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. குறிப்பாக, இளம் தலைமுறையினரைக் கவரும் நோக்கில் அனைத்து நிறங்களும் காணப்படுகின்றன. அந்தவகையில், பியர்ல் சுசுகி டீப் ப்ளூ, மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர், பியர்ல் மிராஜ் ஒயிட், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் கிரே ஆகிய நிறத் தேர்வுகளில் இது மக்களைக் கவர்ந்து வருகின்றது.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

இதேபோன்று, ஸ்பெஷல் எடிசனாக காட்சியளிக்கும் உயர்நிலை அக்செஸ் தனித்துவமான நான்கு வித நிறத் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, மெட்டாலிக் மேட் போர்டியாக்ஸ் ரெட், மெட்டாலிக்கின் அடர்ந்த பச்சை கலந்த நீலம், மெட்டாலிக் மேட் பிளாக் மற்றும் பியர்ல் மிராஜ் வெள்ளை ஆகிய நிறங்கள் ஆகும்.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

இது போன்ற நிறத் தேர்வுகளில் மட்டுமின்றி தொழில்நுட்ப அம்சத்திலும் அக்செஸ் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் அனைத்து மின் விளக்குகளும் எல்இடி தரத்திலானவையாக இருக்கின்றன. இதுதவிர, வாகன ஓட்டியின் செல்போனை சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் வழங்கப்பட்டுள்ளது.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

தொடர்ந்து, ஸ்கூட்டர்குறித்து சில தகவல்களை வழங்கும் விதமாக நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வாய் பகுதி உள்ளிட்ட பிரிமியம் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வாய் பகுதியை சாவி கொடுத்து பொத்தானை அழுத்தினால் மட்டுமே திறக்க முடியும். இதனால் பெட்ரோல் திருட்டுச் செய்யப்படுமோ என்று அஞ்சத் தேவையில்லை.

பிரபல ஸ்கூட்டரின் விலையை உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்த சுசுகி... எந்த ஸ்கூட்டர் தெரியுமா..?

இந்த ஸ்கூட்டரில் பிஎஸ்6 தரம் கொண்ட 125சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது, அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க்கையும் வழங்கும்.

மேலும், இது பிஎஸ்-6 தரம் கொண்டது என்பதால் முந்தைய மாடலைக் காட்டிலும் சற்றே கூடுதல் மைலேஜை வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது. இதுமட்டுமின்றி, பழைய மாடலைக் காட்டிலும் மிகக் குறைந்த காற்று மாசையே உருவாக்கும் தன்மையையும் இது பெற்றிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 5, 2020, 10:54 [IST]
English summary
Suzuki Access 125 BS6 Prices Hiked. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+