சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட பர்க்மேன் ஸ்கூட்டர் மாடலை ரூ.77,900 ஆரம்ப விலையுடன் சந்தைப்படுத்தியுள்ளது. அதேசமயம் இதன் பிஎஸ்4 வெர்சனின் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

தற்போது பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ள இதன் 125சிசி என்ஜின் முன்பை விட குறைவான மாசுவை வெளியிடும் வகையிலும் சவுகரியமான பயணத்தை வழங்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 அப்டேட்டாக என்ஜின் அமைப்பில் புதியதாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த என்ஜின் ஸ்டார்ட் மற்றும் கில் ஸ்விட்ச் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

இந்த இரு புதிய தொழிற்நுட்பங்களும் சவுகரியமான மற்றும் மாசு உமிழ்வை குறைவாக ஏற்படுத்தும் வகையிலான பயணத்திற்காக பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய ஸ்கூட்டரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 4 ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் 124சிசி என்ஜினை சுசுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

இந்த ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் என்ஜின் சமநிலையான ஆற்றல் மற்றும் தேவையான அளவிற்கு எரிபொருள் திறனை வழங்குவது மட்டுமில்லாமல், குளிர் காலத்திலும் எளிமையான ஸ்டார்ட் ஆக கூடியது.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

இந்த 124சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 6750 ஆர்பிஎம்-ல் 8.7 பிஎச்பி பவரையும் 5500 ஆர்பிஎம்-ல் 10 என்எம் டார்க் திறனையும் ஸ்கூட்டருக்கு வழங்கும் விதத்தில் சுசுகி நிறுவனம் வடிவமைத்துள்ளது.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

இந்நிறுவனத்தின் எளிமையான ஸ்டார்ட் சிஸ்டத்துடன் உள்ள ஒருங்கிணைந்த என்ஜினின் ஸ்டார்ட் மற்றும் கில் ஸ்விட்ச், கடுமையான போக்குவரத்து நெரிசலில் என்ஜின் வேகமாக ஸ்டார்ட் ஆகுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

மற்றப்படி டிசைன் பாகங்களாக முன்புறத்தில் க்ரோம், பின்புறத்தில் கூடுதலாக க்ரோம் பாடி பிட்ஸ், ஸ்கூட்டரின் முன்புறத்துடன் இணைக்கப்பட்ட விண்ட்ஸ்க்ரீன் மற்றும் மேற்புறமாக மஃப்லர் டிசைன் உள்ளிட்டவை உள்ளன.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

இந்த புதிய பர்க்மேன் பிஎஸ்6 ஸ்கூட்டர், திருப்திகரமான பயண அனுபவத்திற்காகவும், நிலைத்தன்மையை அதிகரிக்கப்பதற்காகவும், கால் வைப்பதற்கு ஓட்டுனருக்கு அதிகமாக இடம் வழங்க வேண்டும் என்பதற்காகவும் மற்றும் பயண சோர்வை குறைப்பதற்காகவும் எர்கோனோமிக் டிசைன் அமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

இதனால் இந்த பிஎஸ்6 ஸ்கூட்டர் நகர்புற மற்றும் தொலைத்தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இவற்றுடன் டிசி சாக்கேட் உடன் உள்ள க்ளோவ் பாக்ஸையும் இந்த 2020 பர்க்மேன் ஸ்கூட்டர் நிலையாக பெற்றுள்ளது.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

இந்த பாக்ஸ், ஸ்கூட்டர் இயங்கும்போதும் மொபைல் போனை சார்ஜிங் செய்யவும், மொபைல் போனை பத்திரமாக பூட்டி வைக்கவும் பயன்படும். இதன் ஹெட்லைட் பிரகாசமான ஒளிக்காக எல்இடி தரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ரேக்கிங் பணியை இணைக்கப்பட்ட ப்ரேக்கிங் சிஸ்டம் (CBS) கவனிக்கவுள்ளது.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

மெட்டாலிக் மாட் ஃபைப்ரோய்ன் க்ரே, பேர்ல் மிரேச் வொய்ட், மெட்டாலிக் மாட் ப்ளாக் No. 2 என்ற மூன்று நிற தேர்வுகளுடன் இனி இந்த 2020 பர்க்மேன் ஸ்கூட்டர் மெட்டாலிக் மாட் போர்டியாக்ஸ் சிவப்பு என்ற கூடுதல் நிறத்தேர்விலும் டீலர்ஷிப்களில் கிடைக்கும்.

சுசுகி பர்க்மேன் பிஎஸ்6 பைக்கிற்கான டெலிவிரிகள் துவக்கம்.. ஆரம்ப விலை ரூ.78 ஆயிரம்

ரூ.77,900-ஐ எக்ஸ்ஷோரூமில் ஆரம்ப விலையாக பெற்றுள்ள இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரின் டெலிவிரிகள் தற்போது அனைத்து டீலர்ஷிப்களிலும் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. 125சிசி ஸ்கூட்டர் பிரிவில் பர்க்மேன் மாடல் சுசுகி நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, February 17, 2020, 15:30 [IST]
English summary
Suzuki Burgman BS6 deliveries start, Price Rs 78k – BS4 discontinued
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+