20 வருடத்திற்கு பிறகு மோட்டோஜிபி பட்டம் வென்ற சுஸுகி!! ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு கொண்டுவருகிறது...

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர் பைக்கின் லெஜண்ட் எடிசனை சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

20 வருடத்திற்கு பிறகு மோட்டோஜிபி பட்டம் வென்ற சுஸுகி!! ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு கொண்டுவருகிறது...

மோட்டோஜிபி பந்தயங்களை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மோட்டார்சைக்கிள் பந்தயங்களிலேயே மிகவும் உயர்தரத்திலானது.

20 வருடத்திற்கு பிறகு மோட்டோஜிபி பட்டம் வென்ற சுஸுகி!! ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு கொண்டுவருகிறது...

இந்த போட்டியில் உலகில் உள்ள அனைத்து முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களின் சார்பிலும் பந்தய வீரர்கள் அந்தந்த நிறுவனங்களது தயாரிப்பு மோட்டார்சைக்கிள்களுடன் கலந்து கொள்வர்.

20 வருடத்திற்கு பிறகு மோட்டோஜிபி பட்டம் வென்ற சுஸுகி!! ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு கொண்டுவருகிறது...

ஜப்பானை சேர்ந்த சுஸுகியும் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே மோட்டோஜிபி போட்டிகளில் கலந்து கொள்கிறது. சுஸுகியின் சார்பில் கலந்து கொண்ட பாரி ஷீன் (1976 மற்றும் 1977), மார்கோ லுச்சினெல்லி (1981), பிராங்கோ அன்சினி (1982), கெவின் ஸ்வாண்ட்ஸ் (1993) மற்றும் கென்னி ராபர்ட்ஸ் ஜூனியர் (2000) உள்ளிட்டோர் இதுவரை பட்டத்தை வென்றுள்ளனர்.

20 வருடத்திற்கு பிறகு மோட்டோஜிபி பட்டம் வென்ற சுஸுகி!! ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு கொண்டுவருகிறது...

இந்த லிஸ்ட்டில் சமீபத்தில் இணைந்தவர்தான் ஜோன் மிர். மிக சமீபத்தில் நடந்து முடிந்த மோட்டோஜிபி போட்டியில் சுஸுகியின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்ஆர் மோட்டார்சைக்கிளுடன் கலந்து கொண்ட இவர் 2021 மோட்டோஜிபி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

20 வருடத்திற்கு பிறகு மோட்டோஜிபி பட்டம் வென்ற சுஸுகி!! ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு கொண்டுவருகிறது...

இதனை கொண்டாடும் விதமாக விற்பனைக்கு வரும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர் லெஜண்ட் எடிசன்7 விதமான பெயிண்ட் தேர்வுகளில் வழங்கப்படவுள்ளது. மேலும் ஒவ்வொரு பெயிண்ட் தேர்விலும் ஒவ்வொரு விதமான டிகால்கள் கொடுக்கப்படவுள்ளன.

20 வருடத்திற்கு பிறகு மோட்டோஜிபி பட்டம் வென்ற சுஸுகி!! ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு கொண்டுவருகிறது...

அக்ராபோவிக் எக்ஸாஸ்ட் சிஸ்டம் அனைத்து வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாக வழங்கப்படவுள்ளது. ஸ்போடியர் தோற்றத்திற்காக லெஜண்ட் எடிசனில் ஓட்டுனர் முதுகிற்கான தலையணையும் வழங்கப்பட்டுள்ளது.

20 வருடத்திற்கு பிறகு மோட்டோஜிபி பட்டம் வென்ற சுஸுகி!! ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு கொண்டுவருகிறது...

இவை தவிர்த்து வழக்கமான ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர் பைக்கிற்கும் இந்த ஸ்பெஷல் எடிசனிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனால் லிமிடேட் எடிசனை சற்று பருத்த தோற்றத்தில் எதிர்பார்க்கலாம்.

20 வருடத்திற்கு பிறகு மோட்டோஜிபி பட்டம் வென்ற சுஸுகி!! ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு கொண்டுவருகிறது...

சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர் பைக்கில் முழு-எல்இடி தரத்தில் ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் செட்அப் மற்றும் விரிவான ரைடருக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

20 வருடத்திற்கு பிறகு மோட்டோஜிபி பட்டம் வென்ற சுஸுகி!! ஸ்பெஷல் எடிசனை விற்பனைக்கு கொண்டுவருகிறது...

அதிகப்பட்சமாக 199 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 999சிசி என்ஜின் உடன் வழங்கப்படும் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலை இந்தியாவில் ரூ.20.99 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதன் புதிய லெஜண்ட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்குவர வாய்ப்பில்லை.

Most Read Articles

English summary
Suzuki GSX-R1000R Legend Edition revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X