பைக், ஸ்கூட்டர்களை புக்கிங் செய்தால் டோர் டெலிவிரி... சுஸுகி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கை கருத்தில்கொண்டு, பைக், ஸ்கூட்டர்களை வீட்டிலேயே டெலிவிரி தரும் திட்டத்தை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

 பைக், ஸ்கூட்டர்கள் டோர் டெலிவிரி... சுஸுகி அறிவிப்பு

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய அடி விழுந்துள்ளது. இரண்டு மாதங்களாக பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் தற்போது வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

 பைக், ஸ்கூட்டர்கள் டோர் டெலிவிரி... சுஸுகி அறிவிப்பு

கொரோனா பிரச்னை காரணமாக மக்கள் பல மாதங்களாக வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியமான பணிகளை தவிர்த்து வெளியில் வர வேண்டாம் என்று அரசாங்கமும் அறிவுறுத்தி

 பைக், ஸ்கூட்டர்கள் டோர் டெலிவிரி... சுஸுகி அறிவிப்பு

இதனை கருத்தில்கொண்டு ஆன்லைன் புக்கிங், டோர் டெலிவிரி, பாதுகாப்பு நடைமுறைகளுடன் செய்து தரப்படும் என்று பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்துவிட்டன.

 பைக், ஸ்கூட்டர்கள் டோர் டெலிவிரி... சுஸுகி அறிவிப்பு

அந்த வகையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளுடன் வீடுகளிலேயே பைக், ஸ்கூட்டர்களை டெலிவிரி தரப்படும் என்று அறிவித்துள்ளது.

 பைக், ஸ்கூட்டர்கள் டோர் டெலிவிரி... சுஸுகி அறிவிப்பு

மேலும், டோர் ஃப்ரீ எண் மூலமாக புதிய பைக், ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் மிக எளிதாக புக்கிங் செய்து கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது. அதாவது, ஷோரூமிற்கு வர வேண்டிய அவசியமே இல்லை என்றும் கூறி இருக்கிறது.

 பைக், ஸ்கூட்டர்கள் டோர் டெலிவிரி... சுஸுகி அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான சுஸுகி இருசக்கர வாகன மாடலை ஆன்லைன் தளத்தின் மூலமாகவே தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளுடன் அதன் இணையதளத்தில் வசதிகளை வழங்குகிறது.

 பைக், ஸ்கூட்டர்கள் டோர் டெலிவிரி... சுஸுகி அறிவிப்பு

அதேபோன்று, சுஸுகி பைக், ஸ்கூட்டர்களை வீடுகளிலேயே வந்து சர்வீஸ் செய்து தருவதற்கும், பெரிய பழுதுகள் இருந்தால் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று பழுது நீக்கி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 பைக், ஸ்கூட்டர்கள் டோர் டெலிவிரி... சுஸுகி அறிவிப்பு

தற்போது நாடுமுழுவதும் 112 டீலர்களில் இந்த டோர் டெலிவிரி வசதி வழங்கப்படுகிறது. இதுதவிர்த்து, ஆன்லைனிலையே கடன் உதவி பெறுவது மற்றும் ஆன்லைன் மூலமாகவே வாங்குவதற்கான நடைமுறைகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 5, 2020, 6:30 [IST]
English summary
Suzuki Motorcycle India Pvt. Ltd. (SMIPL) has introduced a new doorstep sales and service platform for its entire range of scooters and motorcycle in the country. The new platform will ensure to meet the customer demand, during and post Covid-19 lockdown.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+