பிஎஸ்- 6 எஞ்சினுடன் சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்
சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்குகளின் பிஎஸ்6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் சுஸுகி ஜிக்ஸெர் பைக் மாடல்கள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. ஜிக்ஸெர் குடும்பத்தில் நேக்கட் மற்றும் ஃபேரிங் பேனல்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் ரகம் என இரண்டு விதமான மாடல்களிலும் கிடைக்கிறது.

கவரும் டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், சரியான விலை போன்றவற்றில் நிறைவை தரும் மாடல்களாக ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல்கள் பெயர் பெற்றுவிட்டன. விற்பனையிலும் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இந்த நிலையில், சுஸுகி ஜிக்ஸெர் குடும்பத்தில் இந்தியாவில் செயல்திறன் மிக்க மாடல்களாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக் மாடல்கள் பிஎஸ்6 எஞ்சினுடன் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக் மாடல்களில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ள 249 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26 பிஎச்பி பவரையும், 22.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

சுஸுகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக் மாடல்களில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ன. இது நிச்சயம் கூடுதல் மதிப்பை வழங்கும் விஷயங்களாக கூறலாம்.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பிஎஸ்6 மாடலானது மேட் பிளாக் மற்றும் சில்வர்- மேட் பிளாக் ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பிஎஸ்6 பைக் மாடலில் மேட் பிளாக், மேட் பிளாட்டினம் சில்வர் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மோட்டோஜீபி என்ற மூவர்ண கலவை ஸ்டிக்கர் அலங்காரத்திலும் கிடைக்கும்.
MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 250 பிஎஸ்6 மாடலுக்கு ரூ.1.63 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், சுஸுகி எஸ்எஃப் 250 பிஎஸ்6 மாடலின் சாதாரண வண்ணத் தேர்வுகளுக்கு ரூ.1.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், மோட்டோஜீபி மாடலுக்கு ரூ.1.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்ட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








