புதிய 3 நிறத்தேர்வுகளில் உருவாகியள்ள 2020 சுசுகி பர்க்மேன் 200... இந்திய வருகை எப்போது..?
சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2020 பர்க்மேன் 200 ஸ்கூட்டர் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 2020 ஸ்கூட்டர் மாடலில் கொண்டுவரப்பட்டுள்ள அப்டேட்களை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சுசுகியின் இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் வெள்ளை, கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் புதிய நிறத்தேர்வுகளை பெற்றுள்ளது. மற்றப்படி புதிய பர்க்மேன் 200 ஸ்கூட்டரில் வேறெந்த மாற்றங்களையும் சுசுகி நிறுவனம் கொண்டுவரவில்லை.

இதனால் இந்த 2020 ஸ்கூட்டர் வழக்கமான 200சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜினை தான் கொண்டுள்ளது. அதிகப்பட்சமாக 17.7 பிஎச்பி பவரை ஸ்கூட்டருக்கு வழங்கக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

13 இன்ச்சில் சக்கரத்தை முன்புறத்திலும், 12 இன்ச்சில் பின்புற சக்கரத்தையும் கொண்டுள்ள பர்க்மேன் 200 மாடலில் சஸ்பென்ஷன் அமைப்பாக டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் மோனோ-ஷாக் முன் மற்றும் பின்புறத்தில் உள்ளன.

ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் 240மிமீ-ல் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் நிலையாக வழங்கப்பட்டுள்ளது. பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் மாடலின் அளவில் பெரிய வெர்சனாக பார்க்கப்படும் இந்த புதிய பர்க்மேன் 200 மாடல் இந்தியாவில் எப்போது வேண்டுமேனாலும் அறிமுகக்கூடும்.

பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரின் பிஎஸ்6 வெர்சனை சுசுகி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. ரூ.77,900 எக்ஸ்ஷோரூம் விலையுடன் சந்தைப்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 125சிசி என்ஜின் அமைப்பில் புதியதாக ஃப்யூல்-இன்ஜெக்ஷன், என்ஜின் ஸ்டார்ட் மற்றும் கில் ஸ்விட்ச் உள்ளிட்ட தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டன.

இந்த புதிய சிஸ்டங்கள் ஆற்றலை சமநிலையாகவும், எரிபொருள் திறனை தேவைப்படும் அளவிற்கு மட்டும் வழங்குவது மட்டுமின்றி, குளிர் காலத்திலும் எளிமையான என்ஜின் ஸ்டார்ட்டை வழங்கவுள்ளன. இதனால் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் முன்பை விட சவுகரியமாகவும், மாசு உமிழ்வை குறைவாகவும் வெளிப்படுத்தும்.

இதன் 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் 124சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 6750 ஆர்பிஎம்-ல் 8.7 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்-ல் 10 என்எம் டார்க் திறனையும் ஸ்கூட்டருக்கு வழங்கி வருகிறது. அதிக இட வசதியுடன் சவுகரியமான பயணத்திற்காக இந்த 125சிசி ஸ்கூட்டர் எர்கோனோமிக் டிசைனில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

125சிசி ஸ்கூட்டர் பிரிவில் சுசுகியின் சிறந்த விற்பனை மாடல்களில் ஒன்றாக உள்ள பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலின் புதிய பர்க்மேன் 200 மாடல் ஏற்கனவே கூறியதுபோல் வழக்கமான டிசைன் அமைப்புகளை தான் அப்படியே பெற்றுள்ளது. தற்போது உலகளாவிய சந்தைக்கு வந்துள்ள இந்த புதிய ஸ்கூட்டர் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை இந்திய அறிமுகத்தின்போது வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications








