2020 ஆட்டோ எக்ஸ்போவில் தனது எதிர்கால மோட்டார்சைக்கிள்களை காட்சிப்படுத்திய சுசுகி நிறுவனம்...
புதிய மாசு உமிழ்வு விதி வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், தனது பெரும்பாலான மோட்டார்சைக்கிள்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து நடைபெற்று வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுசுகி மோட்டார்சைக்கிள், தனது புதிய தயாரிப்பு மோட்டார்சைக்கிள்களை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் மட்டும் தான் செய்துள்ளது. மற்றப்படி அவற்றின் விற்பனை விலை பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை. சுசுகி நிறுவனம் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைத்துள்ள மோட்டார்சைக்கிள்களில் சிலவற்றை இந்த செய்தியில் காண்போம்.

சுசுகி ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250
சுசுகி நிறுவனத்தின் குவார்ட்டர்-லிட்டர் மோட்டார்சைக்கிள்களான ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 பைக்குகள், பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஸ்ட்ரீட் ரேஸ் பைக் டிசைனில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த இவற்றில், பிஎஸ்6 அப்டேட்டால் கூர்மையான முன்புற பாகங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

பிஎஸ்6 தரத்தில் ஒரே 249சிசி என்ஜினை பெற்றுள்ள இந்த இரு பைக்குகளுக்கும் அதிகப்பட்சமாக 9,300 ஆர்பிஎம்-ல் 26.5 பிஎச்பி பவரையும், 7,300 ஆர்பிஎம்-ல் 22.2 என்எம் டார்க் திறனையும் அவற்றின் என்ஜின்கள் வழங்குகின்றன.

சுசுகி ஜிக்ஸெர் 150 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 150
சுசுகி ஜிக்ஸெர் 250 ட்வின் பைக்குகளை விட குறைந்த எரிபொருள் திறனை பெற்ற ஜிக்ஸெர் 150 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 150 பைக்குகளையும் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தி சுசுகி நிறுவனம் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரு பிஎஸ்6 பைக்குகளிலும் 155சிசி என்ஜினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த என்ஜின் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள இரு பைக்குகளுக்கும் 8,000 ஆர்பிஎம்-ல் 13.6 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-ல் 13.8 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வழங்கவுள்ளது.

மேலும், பிஎஸ்6 அப்டேட்டால் இந்த இரு 150சிசி பைக்குகளும் புதிய எல்இடி ஹெட்லைட் அமைப்பு மற்றும் இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்கை புதியதாக பெற்றுள்ளன. ப்ரேக்கிங் பணிக்காக இந்த இரு பைக்குகளிலும் டிஸ்க் ப்ரேக் உடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது.

சுசுகி புர்க்மேன் ஸ்ட்ரீட்
பிஎஸ்6 தரத்தில் சுசுகி புர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் மோட்டோஜிபி வேரியண்ட் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் காணப்படுகின்ற சுசுகியின் இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட் மற்றும் என்ஜினை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்வதற்கு ஸ்விட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

124சிசி ஏர்-கூல்டு என்ஜினை கொண்டுள்ள இந்த புர்க்மேன் ஸ்ட்ரீட் பிஎஸ்6 ஸ்கூட்டர், அதிகப்பட்சமாக 8.6 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த மூன்று மோட்டார்சைக்கிள்கள் மட்டுமின்றி, புதிய இன்ட்ரூடர் மற்றும் சுசுகி கட்டான 1000 போன்ற சூப்பர் பைக்குகளும் இந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இவற்றை பற்றியும் தெரிந்துக்கொள்ள ட்ரைவ்ஸ்பார்க் தமிழுடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.


Click it and Unblock the Notifications








