ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

ஒற்றை விளையாட்டிற்காக ஒட்டுமொத்தமாக 64 செல்போன்களை தாய்வானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வாங்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் விளையாட்டு (கேம்) அடிமையாளர்கள் ஏராளம். குறிப்பிட்டு கூற வேண்டுமானால், செல்போன்மீதான மோகம் அதிகரிப்பதற்கே ஒரு சில செயலிகளே காரணமாக உள்ளது. இதனால்தான் ஸ்மார்ட்போன் அதிகம் விற்பனையாகும் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியிருக்கின்றது. இதற்கு, செல்போன் சார்ந்து இயங்கும் கேம் மற்றும் பிற பொழுதுபோக்கு செயலிகள் மட்டுமே காரணம்.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இந்தியாவில் ஓர் சம்பவம் அரங்கேறியிருந்தது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 17 சிறுவன், 16 லட்சம் ரூபாயை பப்ஜி கேமிற்காக செலவு செய்த சம்பவமே அது. இந்த சிறுவன் ஆன்லைன் வகுப்பு இருப்பதாகக் கூறி, எப்போதும் செல்போனும் கையுமாகவே வலம் வந்திருக்கின்றார். அதில் பெரும்பாலான நேரத்தை பப்ஜி விளையாட்டிலேயே அவர் செலவு செய்திருக்கின்றார்.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

இதுமட்டுமின்றி, தனது பெற்றோர்களின் வங்கி கணக்கை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி பப்ஜி விளையாட்டை அப்கிரேட் செய்திருக்கின்றார். இவ்வாறு, ரூ. 16 லட்சம் வரை செலவு செய்திருந்தார் அச்சிறுவன். தனக்கு மட்டுமின்றி தன்னுடன் விளையாடும் சக நண்பர்களின் பப்ஜி கேமையும் இதே பாணியில் அவர் அப்கிரேட் செய்திருக்கின்றார்.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

இதுகுறித்த தகவலறிந்த சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் மட்டுமல்லை ஒட்டு நாடுமே இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இந்நிலையில் தற்போது தாய்வானிலும் ஓர் விநோதமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுவும் செல்போன் விளையாட்டை மையப்படுத்தியே அரங்கேறியிருக்கின்றது.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

இங்கு போக்கிமான் விளையாட்டில் இருக்கும் அதிக ஆர்வத்தின் காரணமாக முதியவர் ஒருவர் 60க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன்களை வாங்கி குவித்துள்ளார். இந்த விளையாட்டை பப்ஜி மற்றும் லூடோ போன்று இருந்த இடத்திலேயே விளையாட முடிாயது என்ற காரணத்தினால் அவையனைத்தையும் சைக்கிள் அமரும் பொருத்தியிருக்கின்றார்.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

அதாவது, தன் வசம் இருக்கும் 64 செல்போன்களையும் சைக்கிள் ஒன்றில் உலோக ஸ்டாண்ட் அமைத்து அவற்றைப் பொருத்தியிருக்கின்றார். இதைத்தொடர்ந்து, அதில் பயணித்தவாறு தனக்கான டாஸ்க்குகளை நிறைவேற்றி வருகின்றார் அந்த முதியவர்.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

முதியவரின் இந்த செயலால் அப்பகுதி வாசிகள் அவரை போக்கிமான் தாத்தா எனவே அழைக்க ஆரம்பித்திருக்கின்றனர். 71 வயதான இவரின் பெயர் சென் சேன்-யுவான் என கூறப்படுகின்றது. இவர் தற்போது புதிய தாய்பேய் நகரத்தில் வசித்து வருகின்றார்.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

போக்கிமான் விளையாட்டை இவர் கடந்த 2018ம் ஆண்டிலிருந்தே விளையாடி வருவதாக கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் சுமார் 6 செல்போன்களில் விளையாட்டைத் தொடங்கிய அவர், இன்று 64 செல்போன்களுடன் விளையாட்டைத் தொடர்ந்து வருகின்றார்.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

இந்த விளையாட்டை முதலில் சென் சேன்-யுவானின் (Chen San-yuan) பேரனே விளையாடி வந்துள்ளார். இதன் மூலம் கவரப்பட்ட போக்கிமான் தாத்தா, தன்னையும் அந்த விளையாட்டில் ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளார். நாளடைவில் அதில் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றார்.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

அவ்வாறு, போக்கிமான் கோ விளையாட்டைத் தொடங்கியவரே தற்போது உலகறியும் ஓர் நபராக மாறியிருக்கின்றார். இதற்காக அவர் மிகவும் சாதரணமான ஓர் மிதிவண்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றார். இதன் மூலமே ஒவ்வொரு நாளும் தனது விளையாட்டிற்கான இலக்குகளை அவர் நிறைவு செய்து வருகின்றார்.

ஒத்த கேமிற்காக 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா... இது சைக்கிளா இல்ல ஸ்மார்ட்போன் ஸ்டாண்டா?

இதற்காக தினந்தோறும் பல கிலோமீட்டர்கள் மிதிவண்டியில் பயணிப்பதாக அவர் கூறுகின்றார். இதன்மூலம் தனது டாஸ்க் மற்றும் உடல் ஆரோக்யத்தையும் சீராக வைத்திருக்க முடிவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாகவே தினந்தோறும் போக்கிமான் விளையாட்டு மிகுந்த ஆர்வத்துடன் விளையாடி வருவதாகவும் காரணம் கூறியுள்ளார்.

போக்கிமான் கோ ஓர் அமெரிக்கர் மற்றும் ஜப்பானிய நிறுவனத்தின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட விளையாட்டாகும். இதனை உருவாக்கியவர் ஜான்ஹாங்க். இந்த விளையாட்டு முழுக்க முழுக்க கூகுள் மேப்பை மையப்படுத்தி இயங்குவதால் தங்கள் நாட்டின் ரகசிய இடங்களை பிற நாடுகள் அறிந்துக் கொள்ளக் கூடும் என கூறி சீனா போன்ற ஒரு சில நாடுகள் மட்டும் போக்கிமான் கோ விளையாட்டிற்கு தடை விதித்திருக்கின்றன.

இருப்பினும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் விளையாட்டு பிரியர்களை போக்கிமான் கோ கவர்ந்திழுத்து வருகின்றது. தற்போது இந்த கேமை பல கோடி நபர்கள் விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டை விளையாடிவர்கள் ஒரே நேரத்தில் சாலையில் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிகழ்வுகள் கூட அரங்கேறியிருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Taiwan Old Man Plays Pokemon Go With 64 Cell Phones. Read In Tamil.
Story first published: Thursday, July 30, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X