இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 ஸ்கூட்டர்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...

ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய சரிவிற்கு பின்னர், இந்தியாவில் தற்போது இரு சக்கர வாகனங்களின் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்து தவிர்த்து விட்டு, இரு சக்கர வாகனங்களை வாங்குவது இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹோண்டா ஆக்டிவா முதல் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் ஹோண்டா நிறுவனம் 1,93,607 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 2,34,279 ஆக இருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...

இது 17.36 சதவீத வீழ்ச்சியாகும். இரண்டாவது இடத்தை டிவிஎஸ் ஜூபிடர் பிடித்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் டிவிஎஸ் நிறுவனம் 52,378 ஜூபிடர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 57,849 ஆக இருந்தது. இது 9.46 சதவீத வீழ்ச்சியாகும். மூன்றாவது இடத்தை ஹோண்டா டியோ பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 42,957 டியோ ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை வெறும் 27,726 ஆக மட்டுமே இருந்தது. இது 54.93 சதவீத வளர்ச்சியாகும். அதே சமயம் நான்காவது இடத்தை சுஸுகி அக்ஸெஸ் பிடித்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்ட சுஸுகி அக்ஸெஸ் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 41,484.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 48,646 ஆக இருந்தது. இது 14.72 சதவீத வீழ்ச்சியாகும். 5வது இடத்தை டிவிஎஸ் என்டார்க் பிடித்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 19,918. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 25,578 ஆக இருந்தது. இது 22.13 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...

ஆறாவது இடத்தை ஹீரோ ப்ளஷர் பிடித்துள்ளது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 16,935 ப்ளஷர் ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 16,308 ஆக மட்டுமே இருந்தது. இது 3.84 சதவீத வளர்ச்சியாகும். ஏழாவது இடத்தை யமஹா ஃபஸினோ பெற்றுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14,652 ஃபஸினோ ஸ்கூட்டர்களை மட்டுமே யமஹா விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் அந்த எண்ணிக்கை 15,668 ஆக உயர்ந்துள்ளது. இது 6.93 சதவீத வளர்ச்சியாகும். எட்டாவது இடத்தை அதே யமஹா நிறுவனத்தின் ரே பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9,924 ரே ஸ்கூட்டர்களை மட்டுமே யமஹா விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...

ஆனால் நடப்பாண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 15,620 ஆக உயர்ந்துள்ளது. இது 57.40 சதவீத வளர்ச்சியாகும். 9வது இடத்தை ஹீரோ டெஸ்ட்டினி பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 9,735 டெஸ்ட்டினி ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 13,609 ஆக உயர்ந்துள்ளது. இது 39.79 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் எது எதுன்னு தெரியுமா? ஆகஸ்ட் மாத டாப்-10 பட்டியல்...

10வது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா க்ரேஸியா பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்த க்ரேஸியா ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை வெறும் 7,356 மட்டும்தான். ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 12,588 ஆக உயர்ந்துள்ளது. இது 71.13 சதவீத வளர்ச்சியாகும்.

Most Read Articles

English summary
Top 10 Scooters Sold In August 2020 - Honda Activa Leads The Market. Read in Tamil
Story first published: Tuesday, September 22, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X