இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனையான முதல் 10 இரு சக்கர வாகனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 1,80,266 ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 2,42,743 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையாகியிருந்தன.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

அதாவது 62,477 பைக்குகள் குறைவாக விற்பனையாகியுள்ளன. சதவீத அடிப்படையில் பார்த்தால், இது 25.74 சதவீத வீழ்ச்சியாகும். இரண்டாவது இடமும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கே கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் எச்எஃப் டீலக்ஸ் பைக், 2வது இடத்தை தட்டி சென்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் 1,29,602 எச்எஃப் டீலக்ஸ் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 1,93,194 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. 63,592 பைக்குகள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 32.92 சதவீத வீழ்ச்சியாகும். மூன்றாவது இடத்தை ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஹோண்டா நிறுவனம் 1,21,668 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 2,36,739 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்திருந்தது. 1,15,071 ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 48.61 சதவீத வீழ்ச்சியாகும். நான்காவது இடத்தை பஜாஜ் பல்சர் பெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் 80,822 பல்சர் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 83,008 பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனையாகியிருந்தன. 2,186 பைக்குகள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 2.63 சதவீத வீழ்ச்சியாகும். முதல் 10 இடங்களில் உள்ள அனைத்து இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சரிவடைந்துள்ளன.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

ஆனால் பஜாஜ் பல்சர் பைக்கின் வீழ்ச்சி சதவீதம் மட்டுமே ஓரவிற்கு குறைவு. மற்ற அனைத்து இரு சக்கர வாகனங்களின் வீழ்ச்சி சதவீதமும் மிகவும் அதிகம். 5வது இடத்தை ஹீரோ கிளாமர் பிடித்துள்ளது. 45,252 கிளாமர் பைக்குகளை கடந்த ஜூன் மாதத்தில் ஹீரோ விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையாகியிருந்த பைக்குகளின் எண்ணிக்கை 69,878.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

24,626 பைக்குகள் குறைவாக விற்பனையாகியுள்ளன. வீழ்ச்சி சதவீதம் 35.24. ஆறாவது இடத்தை டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 52,253 எக்ஸ்எல் மொபட்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்த நிலையில் நடப்பாண்டு ஜூன் மாதம் 40,620 என்ற எண்ணிக்கையில் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

11,633 எக்ஸ்எல் மொபட்கள் குறைவாக விற்பனையாகியுள்ள நிலையில், இது 22.26 சதவீத வீழ்ச்சியாகும். 7வது இடம் ஹோண்டா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் சிபி ஷைன் 7வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் 40,316 சிபி ஷைன் பைக்குகளை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 84,871 சிபி ஷைன் பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இது 44,555 குறைவாகும். வீழ்ச்சி சதவீதம் 52.50. எட்டாவது இடத்தை ஹீரோ பேஷன் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 56,143 பேஷன் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு ஜூன் மாதம் 39,900 பைக்குகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

ஹீரோ பேஷன் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 16,243 குறைந்துள்ள நிலையில், 28.93 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 9வது இடத்தை டிவிஎஸ் ஜூபிடர் பெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் 37,831 ஜூபிடர் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 56,254 ஆக இருந்தது.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

18,423 ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. வீழ்ச்சி சதவீதம் 32.75 ஆகும். 10வது மற்றும் கடைசி இடத்தை பஜாஜ் பிளாட்டினா பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 56,947 பிளாட்டினா பைக்குகளை பஜாஜ் விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு ஜூனில் 35,277 பைக்குகள் மட்டும்தான் விற்பனையாகியுள்ளன.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

21,670 பைக்குகள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 38.05 சதவீத வீழ்ச்சியாகும். முதல் 10 இடங்களை பிடித்த இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 7,51,554 ஆக மட்டுமே உள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 11,32,030 ஆக இருந்தது. அதாவது 3,80,476 பைக்குகள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 33.61 சதவீத வீழ்ச்சியாகும்.

இளைஞர்கள் மத்தியில் இன்னமும் தீராத பல்சர் மோகம்... போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்த பஜாஜ்...

கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளால் இரு சக்கர வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளது. ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதில் மக்களுக்கு இருக்கும் அச்சம் காரணமாக சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே வரும் மாதங்களில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Top 10 Two-wheelers Sold In June 2020: Hero Splendor Leads The Market. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X