ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

2020ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் அதிகளவில் விற்பனையான டாப்-15 இருசக்கர வாகனங்களின் பெயர்கள் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

இந்த 2020ஆம் ஆண்டின் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் அந்த மாதங்களில் வாகனங்களின் விற்பனை முற்றிலுமாக தடைப்பட்டு போனது. இன்னும் சொல்ல போனால் அந்த ஊரடங்கு உத்தரவுகள் தற்போது வரையில் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டுதான் வருகின்றன.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

இதன் காரணமாக ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து துவங்கும் 2020ஆம் நிதியாண்டின் முதல் அரைபாதியில் பெரும்பான்மையான இருசக்கர வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் சரிவை நோக்கி சென்றுள்ளது. மொத்தமாக இந்த ஆறு மாதங்களில் 49,15,158 இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனையாகியுள்ளன.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

இந்த எண்ணிக்கை 2019 நிதியாண்டின் இதே முதல் அரைபாதி காலத்தில் விற்பனையான 76,90,136 யூனிட்களை காட்டிலும் சுமார் 36.08 சதவீதம் குறைவாகும். இந்த லிஸ்ட்டில் வழக்கம்போல் ஹீரோ ஸ்பிளெண்டர் 9,48,228 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது. இது 2019ஆம் ஆண்டை காட்டிலும் 30.79 சதவீதம் குறைவு.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

ஏனெனில் அந்த 6 மாத காலத்தில் 13,70,138 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையை வரும் மாதங்களில் மாற்றமும் இந்த பண்டிகை காலத்தை சரியாக உபயோகப்படுத்தி கொள்ளும் விதமாகவும், ஹீரோ நிறுவனம் ஸ்பிளெண்டரில் ஸ்பெஷல் கருப்பு மற்றும் ஆக்செண்ட் எடிசனை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்பிளெண்டர் பைக்கை நான்கு விதமான நிறங்களில் ஏதேனும் ஒரு நிறத்தில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இந்த வரிசையில் ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்த நிலையில் நாம் அனைவரும் எதிர்பார்ப்பதுபோல் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தான் உள்ளது.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

ஆனால் 2019ஆம் ஆண்டின் முதல் அரை நிதியாண்டில் விற்பனையில் ஸ்பிளெண்டரை முந்தி கொண்டு முதலிடத்தில் இந்த ஹோண்டா தயாரிப்பு தான் இருந்தது. 2020 அரை நிதியாண்டில் 7,19,914 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கையை காட்டிலும் 48.33 சதவீதம் அதிகமாக 13,93,256 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

ஆக்டிவாவின் இந்த சிறிய சரிவிற்கு பல புதிய அறிமுகங்கள் முக்கிய காரணமாக சொல்லலாம். மூன்றாவது இடத்தில் ஹீரோவின் மற்றொரு தயாரிப்பு வாகனமான எச்எஃப் டீலக்ஸ் உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 7,01,943 எச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவும் 2019 ஆண்டை காட்டிலும் 35.24 சதவீதம் அளவில் குறைவாகும்.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?
Rank Model FY 2020 H1 Apr-Sep FY 2019 H1 Apr-Sep Growth (%)
1 Hero Splendor 9,48,228 13,70,138 -30.79
2 Honda Activa 7,19,914 13,93,256 -48.33
3 HF Deluxe 7,01,943 10,83,887 -35.24
4 Bajaj Pulsar 4,16,735 3,91,508 6.44
5 Honda CB Shine 3,69,103 5,30,141 -30.38
6 TVS XL 2,51,166 3,32,284 -24.41
7 Hero Glamour 2,42,909 4,00,968 -39.24
8 Hero Passion 2,13,480 3,10,212 -31.18
9 TVS Jupiter 2,03,899 3,52,586 -42.17
10 Bajaj Platina 1,75,986 3,25,7,25 -45.97
11 Bajaj CT 1,46,102 2,57,206 -43.20
12 Suzuki Access 1,36,781 2,99,549 -54.34
13 Honda Dio 1,33,772 2,51,190 -46.74
14 Royal Enfield Classic 350 1,31,884 1,87,232 -29.56
15 TVS Apache 1,23,256 2,04,254 -39.66

இந்த லிஸ்ட்டில் விற்பனையில் சிறிது இலாபத்தை பார்த்த மோட்டார்சைக்கிள் பிராண்டாக பஜாஜ் பல்சர் உள்ளது. இந்த பிராண்டில் பல்சர் 125, 150, என்எஸ்160, 180எஃப், 220எஃப், என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 உள்ளிட்டவை அடங்குகின்றன. இவை அனைத்தும் சேர்த்து 2020 நிதியாண்டின் முதல் அரைபகுதியில் 4,16,735 பல்சர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

அதுவே கடந்த 2019ஆம் ஆண்டின் இதே கால இடைவெளியில் 3,91,508 பல்சர் பைக்குகளே விற்பனையாகி இருந்தன. இது 6.44 சதவீதம் அதிகமாகும். ஐந்தாவது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் 3,69,103 யூனிட்கள் விற்பனையுடன் உள்ளது. இந்த எண்ணிக்கை 5,30,141 சிபி ஷைன் பைக்குகள் விற்பனையான 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30.38 சதவீதம் குறைவு.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

ஆறிலிருந்து பத்தாம் இடம் வரையில் டிவிஎஸ் எக்ஸ்எல் (2,51,166 யூனிட்கள்), ஹீரோ கிளாமர் (2,42,909), ஹீரோ பேஷன் (2,13,480), டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் (2,03,899) மற்றும் பஜாஜ் பிளாட்டினா (1,75,986) உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. இந்த லிஸ்ட்டில் கடைசி ஐந்து இடங்களை பஜாஜ் சிடி, சுஸுகி ஆக்ஸஸ், ஹோண்டா டியோ, ராயல் என்பீல்டு கிளாசிக் 350, டிவிஎஸ் அப்பாச்சி உள்ளிட்டவை ஆக்கிரமித்துள்ளன.

ஊரடங்கிலும் விற்பனையில் ஜொலித்த மோட்டார்சைக்கிள்கள் இவைதான்!! உங்களது சாய்ஸ் எது?

2019 நிதியாண்டின் முதல் அரையாண்டில் மூன்று இருசக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 1 மில்லியன், அதாவது 10 லட்சத்தை கடந்திருந்தது. ஆனால் இம்முறை ஒரு இருசக்கர வாகனத்தால் கூட அந்த மைல்க்கல்லை எட்ட முடியவில்லை.

இருப்பினும் இருசக்கர வாகனங்களின் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வேகமாக வளர்ச்சி கண்டு வருவதை இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இது வரும் மாதங்களுக்கும் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top-15 Two-wheeler sales Hero Splendor, Honda Activa, Bajaj Pulsar and more.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X