மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

கொரோனா வைரஸ், பெட்ரோல் விலை உயர்வு ஆகிய இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கும் பைக்குகள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பஸ், ரயில், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் தயங்குகின்றனர். அதற்கு பதிலாக கார், பைக் போன்ற சொந்த வாகனங்கள்தான் பாதுகாப்பானது என மக்கள் நினைக்கின்றனர்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

இதன் காரணமாக வரும் மாதங்களில், கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொரோனா பிரச்னையால் வேலையிழப்பு, சம்பளம் குறைப்பு போன்ற பிரச்னைகளையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே மக்கள் கையில் பண புழக்கம் பெரிதாக இல்லை.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

இதனை கணக்கில் கொண்டு பார்த்தால், விலை குறைவான மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் பைக்குகளின் விற்பனை கணிசமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதில், பைக்குகள் வழங்கும் மைலேஜூம் மிக முக்கியமான காரணியாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு பைக்கை நீங்கள் தேடி கொண்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

எரிபொருள் சிக்கனத்தில் தலைசிறந்து விளங்க கூடிய பைக்குகளின் பட்டியலை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்தியாவில் பெட்ரோல் விலை வேறு தற்போது மிக அதிகமாக இருக்கிறது. மாதாந்திர பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு என பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய சூழலில் சில குடும்பங்கள் இருக்கின்றன. எனவே இந்த செய்தி உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100)

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் பஜாஜ் பிளாட்டினாவும் ஒன்று. எரிபொருள் சிக்கனம் மட்டுமல்லாது, சௌகரியமான பயணம் மற்றும் குறைவான பராமரிப்பு செலவு ஆகிய அம்சங்களிலும் பஜாஜ் பிளாட்டினா அசத்துகிறது. பஜாஜ் பிளாட்டினா ஒரு லிட்டருக்கு 78 கிலோ மீட்டர் மைலேஜை வாரி வழங்குகிறது.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

இதன் மூலம் எங்கள் பட்டியலில் பஜாஜ் பிளாட்டினா பைக் முதல் இடத்தை பிடித்துள்ளது. பஜாஜ் பிளாட்டினா பைக்கில் 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 858 கிலோ மீட்டர்கள் வரை, தங்கு தடையின்றி தாராளமாக பயணம் செய்ய முடியும்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

பஜாஜ் பிளாட்டினா பைக்கில், 102 சிசி, பிஎஸ்-6 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.7 பிஎச்பி பவரையும், 8.34 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், நல்ல மைலேஜ் கிடைக்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்ப்பவர்கள் பஜாஜ் பிளாட்டினாவை வாங்குவது பற்றி பரிசீலிக்கலாம்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport)

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில், 109.7 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.1 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிவிஎஸ் ஸ்போர்ட் சராசரியாக ஒரு லிட்டருக்கு 75 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் திறனை பெற்றுள்ளது. இதன் மூலம் எங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை டிவிஎஸ் ஸ்போர்ட் பிடித்துள்ளது.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில், 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் டேங்க்கை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 750 கிலோ மீட்டர்கள் வரை நீங்கள் தாராளமாக பயணம் செய்ய முடியும். பஜாஜ் பிளாட்டினாவை போல், டிவிஎஸ் ஸ்போர்ட்டும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற பைக்தான்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

பஜாஜ் சிடி 100 (Bajaj CT 100)

இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் பைக்குகளில், பஜாஜ் சிடி 100 மிகவும் முக்கியமானது. இதன் விலை 43,887 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். பஜாஜ் சிடி 100 பைக்கில், 102 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் அதிகபட்சமாக 7.7 எச்பி பவர் மற்றும் 8.34 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கை போலவே, பஜாஜ் சிடி 100 பைக்கும் சராசரியாக ஒரு லிட்டருக்கு 75 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியதுதான். எனினும் பஜாஜ் சிடி 100 பைக்கில், 10.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஒரு முறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், தோராயமாக 787 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும்.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பிஎஸ்-6 (Hero Splendor+ BS-VI)

இந்திய மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மோட்டார்சைக்கிள்களில், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் முதன்மையாக இடத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. பிஎஸ்-6 அவதாரத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக், சராசரியாக ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது.

மைலேஜை வாரி வழங்கும் பைக்குகள் இவைதான்... விலை ரொம்ப கம்மி... கொரோனா பயம் இல்லாம நிம்மதியா போலாம்...

ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் மோட்டார்சைக்கிளில், 9.80 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. எனவே எரிபொருள் டேங்க்கை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 637 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மை வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் திகழ்கிறது.

Most Read Articles

English summary
Top 4 Fuel-Efficient Bikes To Buy In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X