டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்..! இது இல்லனா பைக்கே இல்ல! பாதுகாப்பதற்கான டாப் 5 டிப்ஸ்கள்...

இருசக்கர வாகனத்தில் முக்கியமான அம்சமாக கருதப்படும் சங்கிலியைப் பராமரிப்பதற்கான ஐந்து முக்கியமான டிப்ஸ்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

நான்கு சக்கர வாகனங்களைக் காட்டிலும் இரு சக்கர வாகனங்களே நாட்டில் அதிகளவில் பயன்பாட்டில் இருக்கின்றன. அரசு பொது போக்குவரத்து மற்றும் ஆட்டோக்களுக்கு அடுத்தபடியாக ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாகனமாக இது உள்ளது. எனவேதான் நாட்டில் மக்கள் தொகைக்கு இணையாக இரு சக்கர வாகனத்தின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

இத்தகைய இருசக்கர வாகனத்தை அவ்வப்போது பராமரிப்பதும், அதைச் சற்று கூடுதல் கவனத்துடன் பார்த்துக் கொள்வதும் அவசியமான ஒன்று. இந்த வாகனம்னு இல்லைங்க எந்தவொரு வாகனமாக இருந்தாலும் அதனை நல்ல முறையில் பாதுகாத்து, பராமரிப்பது நமக்கு நன்மையை வழங்கும். அந்தவகையில், இன்று இருசக்கர வாகனத்தின் இயக்கத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் செயினைப் (சங்கிலி) பாதுகாப்பதுகுறித்த முக்கியமான ஐந்து தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

வாகனத்தில் எஞ்ஜின், டயர் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிக பணியையும், அழுத்தத்தையும் சந்திக்கும் பாகங்களில் சங்கிலியும் ஒன்று. இது, மிக அதிக அழுத்தத்தைச் சந்திப்பதால் இதன் ஆயுட்காலம் மிகக் குறைவு என்கின்றனர். குறிப்பாக செயினை சரியாக பராமரிக்காதவர்களின் வாகனத்தில் மட்டும்தான் இது மிக மிக குறைந்த ஆயுட்காலத்தைப் பெறுகின்றது. அதிக உராய்வு மற்றும் இயக்கத்தைச் சந்திப்பதால் சங்கிலி வெகு விரைவில் தேய்மானம் அடைகின்றது.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

இதனாலயே இதன் ஆயுட்காலம் மிக விரைவில் குறைந்துவிடுகின்றது. ஆனால், குறிப்பிட்ட சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் இதன் ஆயுட்காலத்தையும், உழைக்கும் திறனையும் அதிகரிக்கச் செய்ய முடியும். மேலும், அதை ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்க முடியும். சங்கிலியைப் பராமரிப்பதன் மூலம் ஸ்பிராக்கெட்டுகளையும் நம்மால் பாதுகாக்க முடியும்.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

ஆமாங்க, சங்கிலியும், ஸ்பிராக்கெட்டும் இணைந்து பணி புரிவதால் நாம் சங்கிலியுடன் ஸ்பிராக்கெட்டையும் இழக்கும் சூழ்நிலை உருவாகின்றது. முறையாக பராமரிக்கப்படாத சூழலிலேயே இந்தநிலை உருவாகுகின்றது. அதாவது, பராமரிப்புகள் காணாமல் போகின்ற வேலையில் இரண்டிற்கும் இடையே ஏற்படும் உராய்வு மற்றும் அதிக இயக்கம் வெப்பத்தை ஏற்படுத்தி வெகு விரைவில் இரண்டு கூறுகளையுமே தேய வைத்து, மழுங்கச் செய்கின்றது.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

இதனால், இருசக்கர வாகனத்தின் இயக்கம் குறைவதுடன், ஆபத்தான சூழ்நிலையையும் உருவாக்கிவிடுகின்றது. குறிப்பாக, அதி வேகத்தில் பயணிக்கும்போது அது எப்போது அறுபடும் என்றே தெரியாது. இது மிக மோசமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். எனவேதான் வாகனத்துறை வல்லுநர்கள் ஒவ்வொரு நாளும் எந்தவொரு வாகனத்தை பயன்படுத்துவதற்கு முன்பு பிரேக், இயக்கம் மற்றும் பெட்ரோல் அளவு ஆகியவை சிறந்தளவில் இருக்கின்றதா என ஆராயச் சொல்கிறார்கள்.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

சரி வாருங்கள் செயினைப் பராமரிக்கக்கூடிய டாப் 5 டிப்ஸ்களைப் பற்றி பார்க்கலாம்...

1. உங்களுடைய பின் சக்கர வீல் எப்போதுமே சங்கிலியுடன் தொடர்புக் கொண்டிருப்பதால், இருசக்கர வாகனத்தின் பின் வீல் எந்தவொரு தடையுமின்றி நிறுத்தப் பழகிக் கொள்ளுங்கள். அதாவது, இருசக்கர வாகனத்தை நிறுத்தும்போது சென்டர் ஸ்டாண்டையே பயன்படுத்துங்கள். இது, சரிவான பகுதியாக இருந்தால் வாகனத்தின் பின் வீல் சுலபமாக சுழலும் வகையில் நிறுத்த உதவும்.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

இதனால், பின் வீல் சந்திக்கும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்க முடியும். மேலும், செயின் - ஸ்பிராக்கெட்டுகளையும் பாதுகாக்க முடியும். பொதுவாக, சரிவான மற்றும் கரடு முரடான இடத்தில் நிறுத்தும் போதே இந்த சூழ்நிலையை சங்கிலிகள் சந்திக்கின்றன. ஆகையால், வாகனத்தை நிறுத்தும்போது நல்ல சீரான இடத்தைத் தேர்வு செய்வது இன்னும் கூடுதல் சிறப்பு. இது, பின் வீலை சுலபமாக சுழலை வைக்க உதவும். தேவையற்ற அழுத்தத்தையும் அது வழங்காது.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

2. சிக்னலில் நிற்கும் போது இருசக்கர வாகனத்தை நியூட்ரலுக்கு மாற்றிவிட்டு, ஆஃப் செய்வது மிகச் சிறந்தது. பலர் இதைக் கடைப்பிடிப்பதே இல்லை. முதல் அல்லது இரண்டாம் கியர்களில் வைத்துக் கொண்டே சிக்னலில் நிற்கின்றனர். சிக்னல் விட்ட உடன் சிட்டாக பறக்கும் வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்கின்றனர். மேலும், கிளட்சைப் பிடித்தவாறு ஆக்சலரேஷனையும்க் கொடுக்கின்றனர்.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

இதனால் தேவையற்ற அழுத்தத்தை சங்கிலியும், ஸ்பிராக்கெட்டும் சந்திக்கின்றன. இதனால், மிக விரைவில் அது தேய்மானடையும் வாய்ப்பு உருவாகுகின்றது. எனவேதான், தேவையில்லாமல் வாகனத்தை நிறுத்தும்போது அதை ஆஃப் செய்தோ அல்லது எஞ்ஜினை முழுமையாக நியூட்ரல் செய்தோ நிறுத்துவது நல்லது என்கின்றோம். இது தேவையற்ற பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவும். இதற்கு இருசக்கர வாகனத்தை முழுமையாக ஆஃப் செய்து காத்திருப்பதே மிக மிகச் சிறந்தது.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

3. சங்கிலிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் தேவையற்ற கசடுகளை நீக்க முடியும். இதற்கு துரு நீக்கி ஸ்பிரேக்களைப் பயன்படுத்தலாம். இது துருவை மட்டுமின்றி ஆயில் பிசுக்குகளையும் உடனடியாக நீக்கிவிடும். இதனால், சங்கிலி பல பல வென மாறும். இத்துடன், தடையில்லா இயக்கத்தையும் அது பெறும். இதை உங்களால் பெற முடியவில்லை என்றால் குறைந்தது மண்ணெண்ணெய் அல்லது டீசல் ஆகியவற்றைக் கொண்டும் சுத்தம் செய்யலாம்.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

இவ்வாறு சுத்தம் செய்யும் போது ஏனோதானோ என்று செய்யக்கூடாது. மிகப் பொறுமையாக சங்கிலியைச் சுற்றி விட வேண்டும். பின்னர், தேவையற்ற பல் விளக்கும் பிரஷ் அல்லது வேறு ஏதேனும் கருவியைக் கொண்டு மேனுவலாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால் சிறு சிறு பிசுக்குகளைக் கூட வெளியேற்ற முடியும். ஆகையால், கூடுதல் பலனைப் பெற முடியும். குறித்துக் கொள்ளுங்கள், வெறும் கைகளால் இதைச் சுத்தம் செய்ய வேண்டாம். இது உங்களின் விரல்களைப் பதம் பார்க்க நேரிடும்.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

4. சுத்தம் செய்யும் பணிகள் முடிந்த பின் சங்கிலிகளின் இணைப்பு பகுதிகள் சீராக இணைந்துள்ளதா என்பதையும் ஒரு முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, வெகு நாட்களுக்கு பின்னர் சுத்தம் செய்யப்படும் சங்கிலிகளைக் கூடுதல் கவனத்துடன் கவனிப்பது மிகச் சிறந்தது.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

5. அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் சங்கிலிக்கான மசகு எண்ணெய்யை (lubricant) sமிக லேசாக பூச வேண்டும். சில நேரங்களில் இது இலவசமாகக் கிடைக்கின்றது வாரி பூசிவிடக் கூடாது. இது நாளடைவில் ஆங்கே கழிவாக சேர்ந்து நன்கு ஒட்டிக் கொள்ளும். எனவே மீண்டும் அதை சுத்தம் செய்யும் வேலை வந்துவிடும். ஆகையால், மிக அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் அதனைப் பூச வேண்டும்.

டூ-வீலர்ல இது ரொம்ப முக்கியமான அம்சம்... இது இல்லனா பைக்கே இல்ல... பாதுகாப்பதற்கான 5 முக்கியமான டிப்ஸ்கள்!

மேற்கூறிய டிப்ஸ்களைக் கடைபிடித்தாலே உங்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும், இருசக்கர வாகனத்தின் சங்கிலியின் வாழ் நாளையும் கூட்டிக் கொள்ள முடியும். மேலும், இது தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

Most Read Articles

English summary
Top 5 Motorcycle chain maintenance Tips. Read In Tamil.
Story first published: Friday, November 6, 2020, 11:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X