இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது..

2020 ஆகஸ்ட்டில் அதிகளவில் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்களின் பெயர்கள் விற்பனை எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது...

இந்த டாப் 10 லிஸ்ட்டில் வழக்கம்போல் ஹீரோ மோட்டோகார்ப்பின் ஸ்பிளெண்டர் 2,32,301 என்ற இமாலய விற்பனை எண்ணிக்கையுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்பிளெண்டரின் இந்த விற்பனை எண்ணிக்கை அதன் 2020 ஜூலை மாதத்தை காட்டிலும் 20,000 யூனிட்கள் அதிகமாகும்.

இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது...

ஏனெனில் அப்போது 2.13 லட்ச ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையாகி இருந்தன. இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா உள்ளது. ஸ்கூட்டர்களை மட்டும் கணக்கில் எடுத்து கொண்டால் அதில் முதலிடத்தை பிடிக்கும் ஆக்டிவா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,93,607 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது...

2020 ஜூலையில் இந்த இரண்டாவது இடத்தில் ஹீரோவின் எச்எஃப் டீலக்ஸ் பைக் மாடல் இருந்தது. ஆனால் ஜூலை மாதத்தை காட்டிலும் 75,000 யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி எச்எஃப் டீலக்ஸை முந்தி கொண்டு ஆக்டிவா இரண்டாவது இடத்தை கடந்த மாத விற்பனையில் பிடித்துள்ளது.

இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது...

இதனால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் கடந்த மாதத்தில் 1,77,168 யூனிட்களின் விற்பனையை சந்தையில் பதிவு செய்துள்ளது. இருப்பினும் 2020 ஜூலையை காட்டிலும் இதன் விற்பனை எண்ணிக்கையும் சில பத்தாயிரங்கள் அதிகரித்துள்ளது.

இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது...

ஹோண்டா சிபி ஷைன் மற்றும் பஜாஜ் பல்சர் வரிசை பைக்குகள் தொடர்ந்து நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை தக்க வைத்து கொண்டுள்ளன. இவற்றில் சிபி ஷைன் 1,06,133 யூனிட்களும், பல்சர் ரேஞ்ச் 87,202 யூனிட்களும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது...
Rank Model Aug-20
1 Hero Splendor 232301
2 Honda Activa 193607
3 Hero HF Deluxe 177168
4 Honda CB Shine 106133
5 Bajaj Pulsar 87202
6 TVS XL 70126
7 Hero Glamour 54315
8 Hero Passion 52471
9 TVS Jupiter 52378
10 Honda Dio 42957

Table Source: AutoPunditz.com

இந்த ஐந்து இருசக்கர வாகனங்களை தாண்டி பார்த்தோமேயானால், ஆறாவது இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல்100 உள்ளது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 70,126 ஆகும். அதேநேரம் கடந்த ஜூலை மாதத்தில் சற்று குறைவாக 58,403 எக்ஸ்எல் பைக்குகள் மட்டும் தான் விற்பனையானது.

இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது...

ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களை ஹீரோ மோட்டோகார்பின் தயாரிப்புகளாக க்ளாமர் மற்றும் ஹீரோ பேஷன் பைக்குகள் ஆக்கிரமித்துள்ளன. இவற்றின் விற்பனை எண்ணிக்கைகள் பெரிய வித்தியாமின்றி முறையே 54,315 மற்றும் 52,471 என்ற அளவில் உள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி இரு இடங்களில் டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் ஹோண்டா டியோ என்ற இரு ஸ்கூட்டர் மாடல்கள் உள்ளன.

இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது...

இவற்றில் ஜூபிடர் 52,378 யூனிட்களின் விற்பனையையும், இளம் தலைமுறையினரின் முதன்மை தேர்வான டியோ 42,957 யூனிட்களின் விற்பனையையும் கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளன. எட்டாவது இடத்தில் உள்ள ஹீரோ பேஷனுக்கும் ஒன்பாவது இடத்தில் உள்ள டிவிஎஸ் ஜூபிடருக்கும் சில நூறுகள் மட்டுமே வித்தியாசம் ஆகும்.

இருசக்கர வாகனங்களின் விற்பனையில் தொடரும் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம்... உண்மையில் ‘ஹீரோ’ தான் அது...

2020 ஆகஸ்ட் மாதத்திற்கான இந்த டாப்-10 லிஸ்ட்டின்படி, இருசக்கர வாகனங்களின் விற்பனையில் வழக்கம்போல் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம் தான் தொடர்ந்துள்ளதை அறியலாம். ஏனெனில் முதலிடத்தை பிடித்தது மட்டுமில்லாமல் இந்த 10 இருசக்கர வாகனங்களில் 4 ஹீரோவின் தயாரிப்பாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 26, 2020, 8:30 [IST]
English summary
Top-10 best-selling two-wheelers
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+